முகப் பராமரிப்பு

உங்களுக்கு தெரியுமா சருமத்திற்கு இளமை தரும் உப்பு, சீனி, தவிடு முயன்று பாருங்கள் !

சருமத்தை பாதுகாக்க எத்தனையோ க்ரீம்களை தடவினாலும் அதில் உள்ள ரசாயனங்கள் சருமத்தை பதம் பார்த்து விடுகின்றன. இதனால் தேவையற்ற பின்விளைவுகளும், பாதிப்புகளும் ஏற்படுகின்றன. நம் வீட்டிலேயே கிடைக்கும் பொருட்களைக் கொண்டு வறண்ட சருமத்தை பொலிவாக மாற்றலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

அரிசி, கோதுமை, கேழ்வரகு போன்ற தானியங்களிலிருந்து நீக்கப்படும் தவிடானது அழகிற்கு அழகூட்டும் பொருட்களாகப் பயன்படுகின்றன. வைட்டமின் ‘இ’ சத்து மிகுந்த இந்த தானியத்தின் தவிடுகள் முகத்திலுள்ள இறந்த செல்களை நீக்குவதோடு, முகச் சுருக்கங்களையும் நீக்குகின்றன.முகத்திற்கு இளமையும், பளபளப்பும் கூட்டுகின்றன.17 1484651907 8

சருமத்திற்கு இதமளிப்பதால் சருமத்திற்கான அழகு சாதன கிரீம்களில் சேர்க்கப்படுகின்றன. தவிட்டில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் சரும பாதுகாப்பிற்காக அழகு நிலையங்களில் பயன்படுத்தப்படுகிறது. இது சரும சுருக்கத்தை நீக்குவதோடு முகப்பொலிவினை அதிகரிக்கிறது.

சீனி

அன்றாடம் சமையலில் பயன்படுத்தப்படும் சீனி சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குவதற்கு சிறந்த ஸ்கிரப்பராக பயன்படுகிறது. இது முகத்திற்கு அழகூட்டவும், முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்குவதற்கும் சீனி பயன்படுகிறது.

அதேபோல் சமையலில் பயன்படுத்தப்படும் சாதாரண அயோடின் உப்பு சத்து மிகுந்தது. உப்பு கலந்த நீரால் கண்களைக் கழுவ கண்கள் பளபளப்பாகும். உப்பு கொண்டு பற்களை துலக்கினால் பற்கள் பலப்படும். உப்பில் உள்ள சத்து கண்களுக்குக் கீழே தோன்றும் பை போன்ற வீக்கத்தைக் குறைக்கும். இது எலும்பு வளர்ச்சிக்கு உறுதுணை புரிகின்றது. சிறிது உப்பு கலந்த நீரால் கால்களை கழுவினால் புத்துணர்ச்சி அளிக்கும்.

களிமண் மருத்துவம்

முல்தானி மெட்டி எனப்படும் மென்மையான, களிமண் வகையைச் சேர்ந்த மண். சருமத்திலுள்ள அதிகப்படியான எண்ணெய்ச் சத்தை உறிஞ்சும் தன்மை கொண்டது. எனவே அதிக எண்ணெய்ப் பசை கொண்ட சருமத்திற்கும், கேசத்திற்கும் இம்மண் பவுடர், அழுக்கு நீக்கியாகவும், அதிக எண்ணெய்ப் பசையை நீக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இது சருமத்திற்கு புத்துணர்ச்சியும், கண்களுக்கு குளிர்ச்சியும் தரக் கூடியது. கேசத்தினையும் சுத்தப்படுத்தக்கூடியது.

எனினும் அதிகப்படியான தொடர்ச்சியான பயன்பாட்டினால் சரும வறட்சி ஏற்படும்.இதிலுள்ள தாது உப்புகள், வைட்டமின்கள் சருமத்திற்கு ஊட்டத்தையும் இளமையையும் தருகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button