சரும பராமரிப்பு

சருமத்திற்கு பாதுகாப்பு தரும் சத்தான எண்ணெய்கள்

பெரும்பாலான வீடுகளில் சமைப்பதற்கு தவிர இன்றைக்கு வேறு எதற்காகவும் எண்ணெய் பயன்படுத்தப்படுவதில்லை. இதன் காரணமாக ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. பல்வேறு சருமப் பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. உடலுக்கு குளிர்ச்சியும், சருமத்திற்கு பளபளப்பும் தருகிறது என்பதனாலேயே பண்டைய காலங்களில் எண்ணெய் குளியல் பரிந்துரைக்கப்பட்டது. இன்றைக்கும் ஆயுர்வேதத்தில் பல சிகிச்சைகளுக்கு எண்ணெய் வகைகளை பரிந்துரை செய்யப்படுகிறது.

ஆலிவ், எள், கடுகு, தேங்காய், பாதாம், சூரிய காந்தி, ஆமணக்கு முதலியவற்றில் இருந்து பிழிந்து எடுக்கப்படும் எண்ணெய் பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக எள் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெய் ஆகியவை மசாஜ் செய்யப் பயன்படுத்தப் படும் எண்ணெய்கள் ஆகும்.

வெப்பத்தை தடுக்கும்
எள் எண்ணெய்தான் நல்லெண்ணெய் என்று அழைக்கப்படுகிறது. மிகவும் லேசானது; வாசனை அற்றது; நம் சருமத்தால் சுலபமாக உள்ளிழுக்கப் படுவது. இந்த எண்ணை சமச்சீரான எண்ணெய் என்பதால் எல்லா தோஷங்களுக்கும் நல்லது என்கிறது ஆயுர்வேதம். எள்ளில் இயற்கையாகவே சூரிய வெப்பத்தை தடுக்கும் பொருட்களான SPF உள்ளது. அதனால் தோலில் ஏற்படும் சின்னச்சின்ன தடிப்புகள், கட்டிகள் இவற்றிற்கு மிகச் சிறந்த மருந்து. விட்டமின் E, தாதுப் பொருட்கள், புரதப் பொருட்கள், லேசிதின் நிறைந்துள்ள எண்ணெய் இது.

குளிர் காலத்தில் காக்கும்
ஆலிவ் எண்ணெய் மிக இலேசானது. நம் உடலில் இருக்கும் அமிலத்தன்மை, காரத்தன்மையை சீராக வைக்க உதவுகிறது. பாதாம் எண்ணெய் உலர் சருமம் இருப்பவர்களுக்கு மிக நல்லது. இதுவும் மசாஜ் எண்ணெய் தான். குளிர் காலத்தில் சருமத்தைக் காக்க உதவும்.

நறுமண மசாஜ் எண்ணெய்
ரோஜா, சந்தனக் கட்டை, மல்லிகை, லாவண்டர் ஆகியவற்றில் இருக்கும் நறுமணம் இந்த அத்தியாவசிய எண்ணெய்களினால் வருபவை. அதனால் இவற்றை அப்படியே பயன்படுத்தக் கூடாது. பிழிந்தெடுத்த எண்ணைகளுடனோ அல்லது ரோஸ் வாட்டருடன் கூடவோ சரியான விகிதத்தில் கலந்து உபயோகிக்க வேண்டும்.
பாதாம், எள் எண்ணையுடன், சில துளிகள் ரோஸ் அல்லது சந்தன எண்ணெய் சேர்த்து கலந்தால் நறுமணம் மிக்க உடல் மசாஜ் எண்ணெய் கிடைக்கும். சந்தன எண்ணெய் சொறி, சிரங்குகளிலிருந்து காக்கும். ரோஸ் எண்ணெய் நல்ல இரத்த ஓட்டத்துக்கும், சருமத்தை நல்ல நிலையில் வைத்திருக்கவும் உதவும். இந்த இரண்டு எண்ணைகளும் மனதிற்கு புத்துணர்ச்சியையும் கொடுக்கின்றன. 50 கிராம் பிழிந்தெடுத்த எண்ணையுடன் 5 துளிகள் அத்தியாவசிய எண்ணெய் சேர்த்து நறுமண மசாஜ் எண்ணை தயாரிக்கலாம்.

கூந்தலுக்கு பாதுகாப்பு
முட்டை மஞ்சள் கருவுடன் சில துளி ஆலிவ் ஆயில் சேர்த்து முகத்தில் பூசவும். 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவவும். சருமம் வெளுக்க இத்துடன் சில துளி எலுமிச்சை சாறு கலந்து பூசலாம்.
முட்டையின் மஞ்சள் கருவுடன் பாதாம் எண்ணெய் சேர்த்து கூந்தலில் தடவலாம். உலர்ந்த கூந்தல், நுனி பிளந்த கூந்தல் இவற்றிற்கு மிகச் சிறந்த நிவாரணம் தரும் இந்தக் கலவை.
இளம் குழந்தைகளின் உச்சந்தலையில் செதில் செதிலான சருமம் காணப்படும். இவற்றை அப்படியே கையால் பிய்த்து எடுக்கக் கூடாது. சுத்தமான ஆலிவ் எண்ணையை சிறிதளவு பஞ்சில் தோய்த்து இவற்றின் மேல் தடவ வேண்டும். அடுத்தநாள் இவை மிருதுவாகி விடும். பேபி ஷாம்பூ போட்டு தலையை அலசினால் போய்விடும்.

கரு வளையங்கள் போக்கும் கண்ணுக்கு கீழே கருவளையம் உள்ளவர்கள், சுத்தமான பாதாம் எண்ணெய்யை கண்ணுக்குக் கீழ் தடவி மோதிர விரலால் நிதானமாக வட்ட வடிவில் ஒரு நிமிட நேரம் மசாஜ் செய்யவும். 15 நிமிடங்கள் கழித்து பஞ்சினால் துடைத்து எடுக்கவும்.

கைகளுக்கு பாதுகாப்பு கைகளுக்கு எள் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் நன்றாகப் பூசி ½ தேக்கரண்டி சர்க்கரையை ஸ்கரப்பர் (scrubber) போலத் தேய்க்கவும். சர்க்கரை முழுவதும் கரைந்த பின் கைகளை ஒரு ஈரத் துவாலையால் துடைக்கவும். பாதாம் எண்ணெய்யை சுட வைத்து நகங்கள் மற்றும் அவற்றை சுற்றி இருக்கும் தோலின் மேலும் மசாஜ் செய்யுங்கள். இதை முழங்கால், முழங்கைகளிலும் தேய்க்கலாம்.

facecream

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button