30.4 C
Chennai
Saturday, May 11, 2024
download 3
மருத்துவ குறிப்பு

ஸ் ரீவியா என்னும் இனிப்புத்துளசி -இலைகளை சுவையூட்டியாக நீரிழிவு நோயாளர்கள் பயன்படுத்த முடியும்??

ஸ் ரீவியா (Stevia redaudiana) என்பது சூரியகாந்தி குடும்ப (Family: Asteraceae – formerly Compositae) பயிராகவும் இலைகளில் அதிகம் இனிப்பூட்டி உள்ளபயிராகவும் காணப்படுகின்றது. இந்த சுவையூட்டியினால் நாம் பயன்படுத்தும் சீனியினளவை கணிசமான அளவில் கட்டுப்படுத்தலாம்.
ஸ் ரீவியா என்னும் தாவரத்திற்கு தென்னமெரிக்காதான் பிறப்பிடம். ஆனால் இது பாரிய அளவில் ஜப்பான், பிரேசில், சீனா இன்னும் பல நாடுகளில் பாரியளவில் வளர்க்கப்படுகின்றது. இதனது பழுத்த இலையில் ஏறக்குறைய 200-300 மடங்கு சாதாரண சீனியைவிட இனிப்புத்தன்மை இருப்பதும் இந்த சுவையூட்டியினை பயன்படுத்தினால் நாம் அன்றாடம் பயன்படுத்தும் சீனியின் அளவை கணிசமானளவு குறைக்கவும் முடியும். மேலும் இந்த தாவரம் ஏறக்குறைய 3 வருடங்கள் தொடச்சியான உற்பத்தியைத்தரவல்லதுடன் இதிலிருந்து முதல் நான்கு மாதத்திலிருந்தே இலைகளை அறுவடைசெய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இத்தாவரத்தின் வளர்ச்சிபற்றியும் எமது மண்ணில் இதனது பயிர்ச்செய்கை மற்றும் இதனை வளர்க்கும்போது செய்யவேண்டிய பயிர்ச்செய்கை முறைகள் பற்றியும் நாம் ஆய்வுரீதியாக அறிந்துகொள்ள வேண்டும். இதற்கு குறிப்பிட்ட நாடுகளில் இப்பயிரினை கெக்டேயர்களில் பயிர்ச்செய்கை செய்வதனை அறியும் போது எமது பிரதேசத்திற்கும் இது ஒரு பொருத்தமான மாற்றும்பயிராவதற்கு சாத்தியங்கள் அதிகமே. அதற்கும் மேலாக இதனது இனிப்புத்தன்மையின் முக்கிய செய்தியென்னவெனில் இதில் பூச்சிய கலோரி (Zero calorie) காணப்படுவதுதான். இதனால் இதனது இலைகளை சுவையூட்டியாக நீரிழிவு நோயாளர்கள் பயன்படுத்த முடியும். அத்துடன் இரத்த அமுக்கத்தையும் குறைக்கும் தன்மையுடையதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்த தாவரத்தை நாம் எமது பகுதியில் அறிமுகஞ்செய்வதற்கு பலவிதமாக நற்காரணங்கள் காணப்படினும் இத்தாவரத்தைப்பற்றி முழுவதுமாக அறிந்து இதனை அறிமுகப்படுத்துவது சிறந்தது.
எமது பிரதேசத்தில் அந்நிய தாவரமொன்றை அறிமுகம் செய்யும் போது சுற்றுச்சூழல் அமைச்சினது (Ministry of Environment) அங்கமான உயிர்ப்பல்வகைமை (Biodiversity Secretariat) அலகினதும் வனவாசிகள் திணைக்களத்தினதும் (Wildlife Department) முறையான அனுமதி பெறப்படல் வேண்டும். மேலும் இத்தாவரத்தின் நன்மை தீமைகள் முழுவதுமாக அறியப்பட்டு மக்களுக்கு அதுபற்றி தெரிவிக்கப்படல் வேண்டும்.
ஸ் ரீவியா தாவரம் சூரியகாந்தி குடும்பத்தைச் சேர்ந்ததாகையால் இதனால் பல பயன்பாடுகள் சூரியாந்தி செவ்வந்தி போன்றனவற்றினாலான பயன்பாடுகள் கிடைப்பதற்கு வாய்ப்புக்கள் உண்டு. அதுபோல மூக்குத்திப்பூண்டு போல களையாகவே அன்றி மருத்துவ குணமுள்ள மூலிகையாகவே இது அமைய சாத்தியங்களுண்டு. மேலும் இன்னும் ஒரு படிமேல் சென்று அவதானித்தால் சூரியகாந்தி குடும்ப தாவரங்களுள் ஒன்றான பாத்தீனியத்தின் வீரியம் இதற்குண்டானால் அது ஒரு காலத்தில் பாரிய களையாக உருப்பெறவும் வாய்ப்புண்டு;. ஆனால் எமக்கு நன்மைதரக்கூடிய வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படுவதாலும் மக்களது சுகாதாரம் சார்ந்து பார்க்கும் போது பயன்பாடுகளே அதிகமாக இருப்பதாலும் இன்னும் மனிதருக்கு இதனால் நன்மைகளே அதிகம் கிடைக்க வழியுண்டு என்பதனாலும் இப்பயிரை நாம் அறிமுகம் செய்வது நல்லதென்றே தோன்றுகின்றது.
மேலும் இனிப்புத்துளசியின் பயன்பாடு உணவுசார்ந்த தொழிற்றுறைக்கு அவசியமானதாக காணப்படும். மேலும் இதன் பயன்பாடு நீரிழிவு நோயாளர்களுக்கும் சீனியை அதிகம் பயன்படுத்துவதற்கான மாற்று வழியாக காணப்படுவதனால் கரும்பு சீனியை இறக்குமதி செய்வதின் அளவினை கணிசமான அளவு குறைக்கவும் முடியும். இனிப்பு துளசியின் அறிமுகத்தினூடாக நாம் புகையிலைக்கு மாற்றுப்பயிராக சிந்திக்கவும் வாய்ப்புக்களுண்டு. தற்போது அரசாங்கம் புகையிலைச் செய்கையை தடைசெய்யும் நிலைக்குள் வந்திருக்கும் போது அதற்கு மாற்றீடாக இத்தாவரத்தை அதிகளவில் பயிர்செய்து எமக்குத் தேவையானளவு சுவையூட்டியை நாம் உற்பத்தி செய்து கொள்ளமுடியும்.
இன்னும் இனிப்பு துளசி சிறந்த பயிராக ஜப்பான் பிரேசில் மற்றும் சீனாவில் பல கெக்டேயர்களில் பயிரிடப்படும் போது எமது பிரதேசத்தில் இதனை உற்பத்தி செய்து எமது அன்றாட உணவுகளில் இதனை பயன்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகவே காணப்படுகின்றது. உள்ளுரில் தயாரிக்கப்படும் மென்பானங்களில் இனிப்புச் சுவைக்காக சுவையூட்டியாக ஸ்ரீவியா ஸ் ரீவியா என்னும் இனிப்பு துளசி பயன்படுமாக இருந்தால் எமது பிரதேசத்தில் நல்லதொரு தொழிற்றுறைக்கான மாற்றுப் பயிராகவும் தனிமனித சுகாதாரத்திற்கான சிறந்த பயிராகவும் இது அமைய வாய்ப்புக்கள் பலவுண்டு. ஆய்வுமுடிவுகள் நன்மைதருவனவாக அமைந்தால் நடைபெற்ற ஆய்வுகளின் அறிக்கை எமக்கு சாதகமாக அமையப்பெற்றால் நல்லதொரு தாவரத்தை நாம் பெற்றதாகஅமையும். இதனது நன்மை தீமைகளைப் பொறுத்தே இத்தாவரத்தின் அறிமுகம் அமைதல் வேண்டும்.download 3

Related posts

பெண்களை அதிகளவில் தாக்கும் மூட்டுவலி

nathan

தெரிந்துகொள்வோமா? குழந்தைகளுக்கு வரும் வயிற்று வலிக்கான சில வீட்டு வைத்தியங்கள்!

nathan

தெரிந்துகொள்வோமா? கார்டியாக் அரஸ்ட் ஏற்படுவதற்கு முன்னால் தெரியும் அறிகுறிகள்!

nathan

மஞ்சள் காமாலை வருவதற்கு மிக முக்கிய காரணம் இதுதான்!

nathan

உங்களுக்கு தெரியுமா கூந்தல் மற்றும் சருமப் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் வெந்தயம்..!!

nathan

தொரிந்து கொள்ளுங்கள்! மெட்டபாலிசத்தை மேம்படுத்தி உடல் எடையை குறைக்க சில எளிய டிப்ஸ்…

nathan

படிக்கத் தவறாதீர்கள்! வாரத்தில் ஒரு நாள் சிறுநீரகக் கற்களை கரைக்க உண்ண வேண்டிய உணவுகள்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…வீட்டிலேயே பிரசவ வலியை தூண்டும் 10 வழிமுறைகள்!!!

nathan

தெரிஞ்சிக்கங்க…சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சில வழிகள்!!!

nathan