தலைமுடி சிகிச்சை

உங்க வழக்கத்திற்கு மாறான செயல்களால் கூந்தல் உதிரும் தெரியுமா ..?

அழகைத் தரும் கூந்தல் உதிருவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஆனால் கூந்தல் உதிருவதற்கு சுற்றுச்சூழலும், மனஅழுத்தமும் பெரும்பாலும் காரணமாகின்றன. அவ்வாறு கூந்தல் உதிர்ந்து மெலிதாவதைத் தடுக்க, முதலில் அவரவர்கள் கூந்தல் உதிருவதற்கான காரணத்தை அறிய வேண்டும். இத்தகைய கூந்தல் மேலும் சில வழக்கத்திற்கு மாறான செயல்களாலும் கூந்தல் உதிருகிறது. அத்தகைய செயல்கள் என்னென்னவென்று அறிந்து, அதனை செய்யாமல் தடுத்தால் கூந்தலானது உதிராமல் ஆரோக்கியமாக வளரும். அந்த செயல்கள் என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்…

1. சூடான நீரில் முடியை அலசுதல்… சுடு நீரில் குளிப்பதை விட, குளிர்ந்த நீரில் குளிப்பதே மிகவும் சிறந்தது என்று பலர் சொல்கின்றனர். ஆனால் சிலர் இதற்கு எதிர்மாறாக சொல்கின்றனர். எதுவானாலும் உண்மையில் சுடு தண்ணீரில் குளித்தால் கூந்தலானது பாதிக்கப்படும். ஏனெனில் சுடு தண்ணீர் கூந்தலை பலவீனமடையச் செய்து கூந்தல் உதிர்தலை ஏற்படுத்துகிறது.

2. ஹெல்மெட் அணிதல்… ஹெல்மெட் ஆனது பயணத்தின் போது மிகவும் அவசியமானதே. ஆனால் இதை அணிவதால் கூந்தலானது உதிரும். ஏனெனில் ஹெல்மெட்-ஐ நீண்ட நேரம் அணிவதால் அதிக வியர்வையின் காரணமாக கூந்தலின் வேர்கள் வலுவிழந்து அதிகமாக உதிர ஆரம்பிக்கும்.

3. அவசரமாக சீவுதல்… சீவுவதற்கு ஒரு சில முறைகள் இருக்கிறது. அப்படி சீவாமல் அவசர அவசரமாக சீவினால் கூட கூந்தல் உதிரும். தலை சீவும் போது அழுத்தி சீவ வேண்டும் தான். அதற்காக கூந்தலின் முனையில் சிக்கு இருக்கும் போது அந்த சிக்கை எடுக்காமல் சீவினால் கூந்தலானது கொத்தாகத் தான் வரும். ஆகவே சீவும் முன் கூந்தலின் முனையில் இருக்கும் சிக்கை எடுத்துவிட்டு பின் சீவ வேண்டும். இதனால் கூந்தல் உதிர்வதை தடுக்கலாம்.

4. ஈரமான கூந்தலை சீவுதல்… கூந்தலானது ஈரமாக இருக்கும் போது வலுவற்ற நிலையில் இருக்கும். ஆனால் நிறைய பேர் கூந்தலை ஈரமாக இருக்கும் போதே சீவுகின்றனர். அவ்வாறு சீவினால் கூந்தல் நன்றாக இருக்கும் என்றும் நம்புகின்றனர். ஆனால் இதுவே கூந்தல் உதிருவதற்கான பெரும் காரணம் ஆகும். ஆகவே இதனை தவிர்த்தால் நல்லது.

5. கூந்தலை இறுக்கமாக கட்டுதல்… இன்றைய காலத்தில் ‘போனி டைல்’ போடுவது ஃபேஷனாகிவிட்டது. ஆனால் அதையே ரொம்ப இறுக்கமாக போடுவதால் கூந்தல் உதிர ஆரம்பிக்கும். இருப்பினும் இதுவே பெரும் காரணம் என்று பலருக்கும் தெரியாது. இவ்வாறு கூந்தலை கட்டுவதால், கூந்தலானது பாதியிலேயே கட் ஆகிவிடுகிறது. ஆகவே மெல்லிய முடியை கொண்டவர்கள், இறுக்கமாக கட்டுவதை தவிர்த்தால் நல்லது. இன்றைய இளைஞர்களுக்கு கூந்தல் உதிருவதே பெரும் தொல்லையாக இருக்கிறது. ஆகவே இத்தகைய தொல்லை தவிர்க்க வேண்டுமென்றால், மேற்கூரிய வழக்கத்திற்கு மாறான செயல்களை தவிர்த்தால், கூந்தலானது உதிராமல் இருக்கும்.

beauty hair loss hairfall woman THS

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button