அழகு குறிப்புகள்

உங்களுக்கு உடல் சூட்டினால் இத்தனை பிரச்சனையா? அப்ப இத படிங்க!!

உடல் சூடு என்பது இன்று பலருக்கும் இருக்கும் ஒரு பிரச்சனையாகும். வாத உடம்பு உள்ளவர்களை இந்த பிரச்சனை அதிகமாக தாக்கக்கூடியதாகும். இதனை ஆரம்பத்திலேயே சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டால் நமது உடலை பல்வேறு நோய்கள் தாக்கிவிடும். இதில் அதிக கவனம் செலுத்தாமல் இருந்தால், வாய்ப்புண், நாக்குப்புண், வயிற்றில் கட்டிகள் போன்ற பிரச்சனைகள் உருவாகும்.
இந்த உடல் சூட்டை போக்க சித்த மருத்துவத்தில் நிறைய வழிமுறைகள் உள்ளன. உங்களது உடலுக்கு ஏற்ப மருத்துவ முறையை நீங்கள் பயன்படுத்தி பலன் பெறலாம்.

எண்ணெய் குளியல் வாரத்தில் ஒருமுறையாவது நல்லெண்ணெய்யை தேய்த்து குளியல் எடுத்துக் கொள்ளலாம். இதனால் உடல் குளிர்ச்சி அடையும். உடலில் வெப்பநிலை சமமாகும்.

உறங்கும் போது உறங்கும் போது உள்ளங்கால்களில் எண்ணெய் தேய்த்துக் கொண்டு உறங்கலாம். இதனால் உடலில் உள்ள அதிக வெப்பம் நீக்கப்பட்டு, உடலின் வெப்பநிலை சமமாகும்

காலிஃபிளவர் காலிஃபிளவர் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் சூடு தணியும். முந்திரிப் பழத்தை சாப்பிட்டு வந்தாலும் உடல் சூடு தணியும்.

வெங்காயம் நாட்டு வெங்காயத்தை நெய்யில் வதக்கி உண்டால் உடல்சூடு தணியும்.முள்ளிக்கீரையை சிறிது துவரம் பருப்புடன் கடைந்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல்சூடு தணியும்.

மணத்தக்காளி மணத்தக்காளி கீரையை சிறுபருப்புடன் கடைந்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல்சூடு தணியும்.

பொன்னாங்கண்ணி பொன்னாங்கண்ணிக் கீரையை நீரில் கழுவி, மிளகு, பருப்பு சேர்த்து வேகவைத்து கடைந்து, சிறிது நெய் விட்டு சாப்பிட்டுவர உடல் சூடு தணியும்.

வெள்ளரிக்காய் வெள்ளரிக்காய் அல்லது வெள்ளரிப் பிஞ்சு பச்சையாக அப்படியே சாப்பிட்டு வர உடல் சூடு தணியும்.

ஆவாரம் பூ ஆவாரம்பூவின் பெரிய இதழ்களை எடுத்து வெயிலில் காயவைத்து பின்னர் இடித்து பொடியாக்கிக் கொள்ள வேண்டும். காலை மாலை தேயிலைக்குப் பதிலாக இந்தப் பொடியை உபயோகித்துவர உடல் சூடு தணியும்.

மகிழம்பூ ஒரு கைப்பிடி அளவு மகிழம்பூவை எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாக அடுப்பில் கொதிக்க வைத்து பின்னர் ஆறியவுடன் வடிகட்டவும். காலை அரை டம்ளர், மாலை அரை டம்ளர் வீதம் 25 நாட்கள் குடித்துவர உடல் சூடு தணியும்.04 1509786564 2

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button