தலைமுடி சிகிச்சை

உங்களுக்கு தெரியுமா முடி உதிர்வு, பொடுகு, அடர்த்தியின்மை இதுக்கெல்லாம் சிறந்த தீர்வு தரும் ஒரு பொருள் !!

மிகச்சிறந்த மருத்துவப் பலன்களை கொண்ட ஒரு உணவுப்பொருள் நம் வீட்டு சமையலறையில் இருக்கிறது அதனை நாம் தினமும் பயன்படுத்தி வருகிறோம்.
அது உணவாக மட்டுமல்லாமல் மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது. வெந்தயம். உடல் எடைக்குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தினமும் வெந்தயம் சாப்பிட்டு வந்தால் உடல் எடை விரைவாக குறைந்திடும்.

வெந்தயத்தில் கார்போஹைட்ரேட், புரதச்சத்து, நார்ச்சத்து, விட்டமின்கள், ஃபோலேட்ஸ்,நியாசின்,ஃபைட்ராக்சின்,ரிஃபோப்ளேவின்,தயாமின்,சோடியம்,பொட்டாசியம்,மக்னீசியம்,பாஸ்பரஸ்,செலினியம் உட்பட ஏராளமான சத்துக்கள் இருக்கிறது. இதனைச் சாப்பிடுவது உடல் நலத்திற்கு மிகவும் பயனளிக்ககூடியது.

இதனை உடல் நலனுக்கு மட்டுமல்லாமல் நம்முடைய அழகை மெருகேற்றவும் பயன்படுத்தலாம் தெரியுமா? சருமத்திற்கும் கூந்தலுக்கும் வலுவூட்ட வெந்தயம் பெரிதும் பயன்படுகிறது.

முடி உதிர்வு :
வெந்தயத்தை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற வைத்திடுங்கள். மறுநாள் அதனை அரைத்து பேஸ்ட்டாக்கிக் கொள்ளுங்கள். அந்த பேஸ்ட்டுடன் எலுமிச்சை சாறு கலந்து உங்கள் தலைமுழுவதும் பூசிக் கொள்ளுங்கள். அரை மணி நேரம் ஊறிய பிறகு கழுவிவிடலாம்.
இதனை வாரம் ஒரு முறை செய்யலாம். இது உங்கள் முடி அதிகமாக உதிர்வதை தவிர்ப்பதுடன் முடி வறட்சியின்றி இருக்கவும் உதவுகிறது. இதிலிருக்கும் நிகோடினிக் அமிலம் தலைமுடிக்கு போஷாக்கு அளிப்பதால் தலைமுடி நீளமாக வளர்ந்திடும்.

நீளமாக வளர :
இரண்டு ஸ்பூன் வெந்தயத்தை ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயில் சேர்த்து சூடாக்குங்கள். வெந்தயம் நிறமாறும் வரை சூடேற்ற வேண்டும். லேசாக சிவந்ததும் இறக்கிவிடலாம்.
பின்னர் அதனை ஆறவிட்டு தலையில் தேய்த்து மசாஜ் செய்திடுங்கள். நீங்கள் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கும் போதெல்லாம் இந்த எண்ணெயை பயன்படுத்தலாம். இதில் தேங்காய் எண்ணெய்க்கு பதில் நல்லெண்ணையையும் பயன்படுத்தலாம். உங்கள் முடிக்கு எவ்வளவு எண்ணெய் தேவையோ அவ்வளவை எடுத்துக் கொள்ளுங்கள்.

அரிப்பு :
தலையில் அரிப்பு ஏற்ப்பட்டால் அதனைத் தீர்க்க வெந்தயம் சிறந்த பலனைத் தரும். வெந்தயம் ஊற வைத்த தண்ணீரை தலையில் தேய்த்து குளிங்கள். முடி அதிக வறட்சியானதென்றால் வெந்தயப் பேஸ்ட்டில் முட்டையின் வெள்ளைக்கரு சேர்த்து ஹேர் பேக்காக போட்டுக்கொள்ளுங்கள். அரை மணி நேரம் ஊறியதும் கழுவி விடலாம்.
வெந்தயத்தில் இருக்கும் லெசித்தின் என்ற அமிலம் தலையில் ஏற்படும் பாக்டீரியா தொற்றை போக்க உதவுகிறது.

வழுக்கை :
இன்றைக்கு பெரும்பாலானோருக்கு இருக்கும் பிரச்சனைகளில் ஒன்று அதிகமாக முடி கொட்டுவது அல்லது வழுக்கை விழுவது, இதனை வெந்தயத்தைக் கொண்டு தீர்க்க முடியும்.
இரண்டு ஸ்பூன் வெந்தயத்தை அரைத்து பொடியாக்கிக் கொள்ளுங்கள். அத்துடன் ஆலிவ் ஆயில் அல்லது தேங்காய் எண்ணெய் கலந்து சொட்டை விழுந்திருக்கும் இடம் மற்றும் தலை முழுவதும் தேய்த்திடுங்கள். வாரத்தில் இரண்டு முறை இப்படிச் செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.
வெந்தயத்தில் இருக்கும் ப்ரோட்டீன் முடி உதிர்வைத் தடுக்கிறது.

பொடுகு :
தலையில் பொடுகுப் பிரச்சனை இருந்தால் அதனை ஆரம்பத்திலேயே சரி செய்திட வேண்டும். இல்லையெனில் அதனை போக்குவது பெரும் சிரமமானதாக இருக்கும்.
ஒரு ஸ்பூன் தயிருடன் ஒரு ஸ்பூன் வெந்தயப் பேஸ்ட் கலந்து அரை மணி நேரம் அப்படியே வைத்திடுங்கள். பின்னர் அந்த கலவையை எடுத்து தலையில் ஹேர் பேக்காகாக போடுங்கள். எல்லா பாகங்களில் பேஸ்ட் படுமாறு தடவிக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு மணி நேரம் ஊறியதும் கழுவி விடலாம்.

முடி நுனி பிளவு :
அதிக மாசு, முறையாக முடியை பராமரிக்கமால் இருந்தால் முடியின் முடிவில் பிளவு ஏற்படும். இதனால் முடி மேற்கொண்டு அதிகம் வளராது அதற்கும் வெந்தயம் பலன் அளிக்கிறது.
வெந்தயத்தை அரைத்த பேஸ்ட்டினை தடவி வர அது வறட்சியை நீக்கிடும். வாரத்தில் இரண்டு நாட்கள் இப்படிச் செய்ய வேண்டும்.

கண்டிஷனர் :
உங்கள் முடி சீக்கிரமாகவே வரண்டு விடுகிறஹ்டா? அதே போல எண்ணெய் தினமும் பயன்படுத்தாமல் இருக்கிறீர்களா அப்படியானால் வெந்தயம் உங்களுக்கு நல்ல பலனைத் தரும்.
தலையில் வெந்தயப் பேஸ்ட்டினை அரைத்து ஹேர் பேக்காக போடுங்கள். இது சிறந்த கண்டிஷனராக செயல்படும்.

எண்ணெய் சுரப்பு :
தலையில் அதிகப்படியாக எண்ணெய் சுரப்பது தான் தலையில் நாற்றம் எடுப்பது, பிசுபிசுப்பாக இருப்பது, தொற்று ஏற்படுவது என பலவற்றிற்கும் வழி வகுக்கிறது.
இதனைத் தவிர்க்க வெந்தயப் பேஸ்ட்டுடன் ஒரு ஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகர் கலந்து தலையில் தேய்த்துக் கொள்ளுங்கள் ஒரு மணி நேரம் ஊறியதும் கழுவி விடலாம். ஆப்பிள் சிடர் வினிகரில் இருக்கும் அமிலத்தன்மை தலையில் எண்ணெய் அதிகமாக சுரப்பதை கட்டுப்படுத்தும்.

நரை முடி :
இளமைப்பருவத்திலேயே இன்று பலருக்கும் நரை முடி வருகிறது அதனைத் தவிர்க்க வெந்தயம் மற்றும் அதன் இலைகளை பயன்படுத்தலாம். சிறிதளவு நீரில் வெந்தயத்தை சேர்த்து கொதிக்க வைத்திடுங்கள். பின்னர் அதனை வடிகட்டி அரைத்து தலையில் ஹேர்ப்பேக்காக போடுங்கள்.
சுமார் ஒரு மணி நேரம் ஊறிய பின்னர் குளித்துவிடலாம். வேண்டுமானாலும் வெந்தயத்துடன் நெல்லிச்சாறு கலந்து பூசினால்.

வேப்பிலை :
ஒரு கப் தண்ணீரில் வேப்பிலையை போட்டு கொதிக்க வைத்திடுங்கள். பின்னர் அந்த தண்ணீருடன் வேப்பிலையை அரைத்துக் கொள்ளுங்கள் அத்துடன் வெந்தயப் பேஸ்ட்டையும் சேர்த்து தலையில் ஹேர் பேக்காக போட்டு வர நல்ல பலன் கிடைக்கும்.
வேப்பிலையில் இருக்கும் ஆண்ட்டி பேக்டீரியா தலையில் ஏற்படும் தொற்றினை நீக்குகிறது, இதனால் பொடுகுத் தொல்லை உட்பட எல்லாமே நீங்கிடும்.

தழும்புகள் :
சருமத்தில் வரும் பருக்களை விட அதனால் ஏற்படும் தழும்புகளை போக்குவதில் தான் சிக்கல் இருக்கிறது. இந்த தழும்புகளை போக்கவும் வெந்தயம் பயன்ப்படுகிறது.
வெந்தயப் பேஸ்ட்டை முகத்தில் தடவி பத்து நிமிடம் கழித்து குழித்து விடுங்கள். இதனை தினமும் கூட நீங்கள் செய்யலாம்.

பொலிவு :
சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்கினாலே சருமத்தில் ஏற்படும் பெரும்பாலான பிரச்சனைகளை நாம் தீர்த்து விடலாம். இதற்கும் வெந்தயம் பயன்படுகிறது. வெந்தயம் ஊற வைத்த தண்ணீரில் சருமத்தை துடைத்தெடுத்தால் அவை சருமத்தில் உள்ள இறந்த செல்களை எல்லாம் நீக்கிடுகிறது. இதனால் சருமம் பொலிவுடன் இருக்கும்.

பரு :
சருமத்தில் ஏற்படும் பருவினைப் போக்கவும் வெந்தயம் பயன்படுத்தலாம். வெந்தயத்தில் இருக்கும் அமிலம் பருக்களையும் முகத்தில் தோன்றும் கரும்புள்ளிகளையும் நீக்க உதவுகிறது. வெந்தயப் பேஸ்ட்டுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் தடவலாம். பத்து நிமிடம் கழித்து முகத்தை கழுவி விடுங்கள்.
வாரத்தில் இரண்டு முறை இப்படிச் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.26 1508998150 6

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button