தலைமுடி சிகிச்சை

உங்களுக்கு எப்ப முடி வெட்டணும் தெரியுமா…?

கூந்தல வளர வேண்டும், அழகாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் மட்டும் போதாது, அதனை சரியான முறையில் பராமரிக்க வேண்டும். அதிலும் இன்றைய காலத்தில் நிறைய பேருக்கு எப்போது, எந்த நேரத்தில் கூந்தலை வெட்ட வேண்டும் என்று தெரியவில்லை. ஆகவே கூந்தலை வெட்ட வேண்டும் என்று நினைப்பவர்கள் கூந்தலின் வளர்ச்சி மற்றும் தற்போது கூந்தலானது எப்படி உள்ளது என்பதை நன்கு அறிந்து வெட்ட வேண்டும். மேலும் அவ்வப்போதும் கூந்தலை வெட்ட வேண்டும். அப்போது தான் கூந்தலும் நன்கு வளர்ச்சி அடையும். அதிலும் கூந்தலை வெட்டுவதற்கு முன்னால் கூந்தலின் நிலையை அறிந்து சரியான நேரத்தில் வெட்ட வேண்டும். அது எப்போது, எப்படி என்று அழகியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

கூந்தலுக்கு பயன்படுத்தும் ஷாம்பு மற்றும் கண்டிசனர் தான் முடிகளை வெடிக்க வைக்கின்றன என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் அது காரணம் அல்ல. எந்த ஒரு பொருளும் முடிகளை வெடிக்க வைப்பதில்லை. ஆகவே எப்போது முடிகளில் வெடிப்பு காணப்படுகின்றனவோ, அப்போது முடிகளின் முனைகளை, ட்ரிம் செய்ய வேண்டும். ஏனெனில் அது கூந்தலின் வளர்ச்சியை தடுக்கிறது. ஆகவே அந்த நேரத்தில் ட்ரிம் செய்தால், கூந்தலானது நன்கு வளரும்.

எப்போது கூந்தலானது அதிகம் உதிர்ந்து, அடர்த்தி குறைந்து காணப்படுகிறதோ, அப்போது கூந்தல் வளர நிறைய கூந்தலை வளர்க்கும் சிகிச்சை முறைகளை பின்பற்ற வேண்டும். அதே சமயம் கூந்தலை வெட்டினாலும் கூந்தலானது வளர உதவும். ஏனெனில் கூந்தலின் முனைகள் ஆரோக்கியமற்று இருப்பதாலே கூந்தலானது உதிர்ந்து அடர்த்தி குறைந்து காணப்படுகிறது.

கூந்தலானது அழகான வடிவம் இல்லாத போது கூந்தலை வெட்டலாம். ஏனெனில் கூந்தலை அழக நிலையங்களுக்குச் சென்று கடந்த மாதம் வெட்டியிருப்போம். ஆனால் இப்போது அந்த வெட்டிய முடிகளானது ஒழுங்கற்று வளர்ந்திருக்கும. அவ்வாறு வெட்டிய முடிகள் அனைத்தும் எப்போதும் ஒரே அளவில் வளராது. ஆகவே கூந்தலானது அழகாக இருக்க கூந்தலை வெட்ட வேண்டும்.

இப்போது தலையில் வலுக்கை என்பது அதிகமாக ஏற்படுகிறது. ஆகவே அப்போது தலையில் இருக்கும் வலுக்கையை மறைக்க, கண்டிப்பாக கூந்தலை அதற்கு ஏற்றவாறு வெட்ட வேண்டும். இதனால் வலுக்கையானது மறைவதோடு, கூந்தலானது பார்க்கவும் அழகாக இருக்கும்.

Rசொல்லப்போனால் கூந்தலை வெட்டுவது என்பது கூந்தல் வளர்ச்சியைப் பொறுத்தே உள்ளது. ஆகவே கூந்தலை கண்டிப்பாக குறைந்தது 45 நாட்களுக்கு ஒரு முறையாவது வெட்ட வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே இவற்றையெல்லாம் மனதில் வைத்து கூந்தலை வெட்டினால் கூந்தல் நன்கு வளர்வதோடு, ஆரோக்கியமாகவும் இருக்கும்.16 hair cut 160712

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button