தலைமுடி சிகிச்சை

உங்களுக்கு கூந்தலில் கெட்ட நாற்றம் வருகிறதா? இத ட்ரைப் பண்ணி பாருங்க….

தலைமுடிப்பிரச்சனை தான் இன்றைக்கு பெரிய பிரச்சனையாக இருக்கிறது. தலைமுடி உதிரக்கூடாது, உடையக்கூடாது,நீளமாக வளர வேண்டும் என்றெல்லாம் பிரயத்தனம் பட்டுக் கொண்டிருந்தால் அங்கே சத்தமேயில்லாமல் இன்னொரு பிரச்சனையும் உருவாகிக் கொண்டிருக்கும்.

அது என்ன தெரியுமா? சுற்றுச்சூழல் மாசினாலும் நம்முடைய உணவுப் பழக்கத்தினாலும் தலைமுடி நாறுவது சரியான காரணம் தெரியாமல் அதனை எப்படி தவிர்ப்பது என்று புரியாது சந்தையில் கிடைக்க கூடிய பல்வேறு கெமிக்கல்களை வாங்கி பயன்படுத்தி இன்னும் தீவிரமாக்கி கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் இது உங்களுக்குத்தான். வீட்டிலிருப்பதைக் கொண்டே முடியிலிருந்து நாற்றம் வருவதை கட்டுப்படுத்த முடியும்.

தக்காளிச்சாறு : தக்காளியில் இயற்கையாவே இருக்கக்கூடிய மினரல்ஸ்கள் தலைமுடியில் இருக்கும் பாக்டீரியா தொற்றினை அழித்திடும். அதிக எண்ணெய் பிசுக்கு, மற்றும் பாக்டீரியா தொற்றினால் தான் தலைமுடியில் நாற்றமெடுக்கிறது. இதனை தவிர்க்க தக்காளிச் சாறு ஹேர் பேக் போட வேண்டும். உங்கள் தலைமுடியின் நீளத்திற்கு ஏற்ப தக்காளியை எடுத்துக் கொள்ளுங்கள்.அதனை கூழாக்கி தலைமுழுவதும் அப்ளை செய்துகொள்ளுங்கள். முடியின் எல்லா பாகங்களுக்கும் தக்காளிச்சாறு படுமாறு தடவிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு மணி நேரம் ஊறிய பிறகு தலைக்குளிக்கலாம். எப்போதும் மைல்டான ஷாம்புவையே பயன்படுத்துங்கள்.

பேக்கிங் சோடா : பேக்கிங் சோடா தன்னில் இருக்கும் கெமிக்கலைக் கொண்டு இயற்கையாகவே தலைமுடியில் இருக்கு நாற்றத்தை போக்கிடும் அதே சமயம் அதிக எண்ணெய்பசை இல்லாமலும் செய்திடும். குளிக்கும் போது 1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடாவை, 1 கப் நீரில் கலந்து, அலசினால், கூந்தல் பொலிவோடு இருப்பதோடு, குளோரின் தண்ணீரால் நிறமிழந்து இருக்கும் கூந்தலை அழகாக்கும்.

வினிகர் : தலையில் ஏற்பட்டிருக்கும் பாக்டீரியாவை அழிப்பதுடன் பிஎச் அளவையும் சரி செய்திடும்.இது பாக்டீரியாவை அழிப்பதால் தலையில் நாற்றமெடுப்பதை தவிர்க்கச் செய்கிறது. ஒரு கப் தண்ணீரில் ஒரு ஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகர் கலந்து தலைமுழுவதும் ஸ்ப்ரே செய்து கொள்ளுங்கள். ஒரு பத்து நிமிடம் கழித்து குளிர்ந்த நீரினால் கழுவி விடலாம்.

எலுமிச்சை சாறு : தலைமுடிப் பிரச்சனையில் உடனடி தீர்வாக இந்த எலுமிச்சை சாறு கை மருத்துவம் செயல்படும்.தலையில் வறட்சி ஏற்படாதவாறு பாதுகாக்கிறது. அதே சமயம் தலைமுடி உடைந்து உதிராமல் ஆரோக்கியமாக வளரவும் வழி செய்கிறது. ஒரு கப் தயிருடன் இரண்டு ஸ்பூன் எலுமிச்சை மிக்ஸ் செய்து கொள்ளுங்கள்.பின்னர் இந்த கலவையை தலைமுழுவதும் ஹேர் மாஸ்காக அப்ளை செய்ய வேண்டும். அரை மணி நேரம் ஊறிய பின்னர் தலைக்குளித்து விடலாம். வாரம் ஒரு முறை இப்படிச் செய்தால் நல்ல பலன் உண்டு.

தேன் : தேன் மற்றும் இலவங்கப்பட்டையில் அதிகப்படியான ஆண்ட்டி பாக்டீரியல் துகள்கள் இருக்கின்றன. இது தலைமுடியில் வளரும் அதீத பாக்டீரியாவை போக்கிடும்.ஒரு கப் தண்ணீரை கொதிக்க வைத்திடுங்கள்.அது லேசாக கொதிக்க ஆரம்பித்ததும் அரை டீஸ்பூன் பட்டைத்தூளை சேர்க்க வேண்டும். இரண்டு நிமிடங்கள் வரை கொதிக்கச் செய்து இறக்கிவிடலாம். பின்னர் அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து தலைமுழுவதும் தேய்க்க வேண்டும்.ஒரு மணி நேரம் ஊறிய பிறகு தலைக்குளிக்கலாம். அதிகமான ஷாம்பு பயன்படுத்துவதை தவிர்த்திடுங்கள்.

ஆலிவ் ஆயில் : ஆலிவ் ஆயிலை லேசாக சூடுபடுத்தி தலைமுழுவதும் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். நீங்கள் தலைக்குளிக்கும் போதெல்லாம் தேங்காய் எண்ணெய்கு பதிலாக ஆலிவ் ஆயிலையே பயன்படுத்தலாம். வாரம் இரண்டு முறை இதனைச் செய்தால் நிரம்பப்பலன் உண்டு.

வெங்காயம் : வெங்காயத்தில் ஏராளமான ஆண்ட்டிசெப்டிக் துகள்கள் மற்றும் ஆண்ட்டி ஃபன்கல் ப்ராப்பர்டீஸ் நிறையவே இருக்கிறது.வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள் பின்னர் அதனை அப்படியே தலைமுழுவதும் தடவி ஒரு மணி நேரம் ஊறிய பின்னர் தலைக்குளிக்கலாம். இது தலையில் இருக்கும் பாக்டீரியா தொற்றை அடியோடு நீக்கிடும் என்பதால் நாற்றம் வருவது குறைந்திடும்.

ஆரஞ்சுப்பழச்சாறு : ஆரஞ்சுப்பழம் தலையில் சுரக்கும் அதீத எண்ணெயை கட்டுப்படுத்தும்.அதே சமயம் பொடுகுத் தொல்லையிருந்தால் அதனையும் சரி செய்திடும்.ஆரஞ்சுப் பழத்தோலை காயவைத்து பொடி செய்து கொள்ளுங்கள். தலைக்குளிக்கும் போதெல்லாம் அந்த பொடியை தலைமுழுவதும் அப்ளை செய்து அரை மணி நேரம் ஊறிய பின்னர் தலைக்குளிக்கலாம். ஆரஞ்சுப் பழச்சாறு எடுத்து அப்படியே தலைமுழுவதும் தேய்க்கலாம். அரை மணி நேரம் ஊறியதும் குளிர்ந்த நீரினால் கழுவி விடுங்கள்.

வோட்கா : தலை முடியின் நாற்றத்தை போக்க ஓட்காவையும் பயன்படுத்தலாம்.ஒரு கப் தண்ணீரில் ஒரு ஸ்பூன் வோட்கா கலந்து தலைமுழுவதும் ஸ்ப்ரே செய்து கொள்ளுங்கள் பத்து நிமிடம் கழித்து தலைக்குளித்து விடலாம். இதனை வாரம் ஒரு முறை செய்திடலாம்.

பூண்டு : பூண்டில் ஏராளமான ஆண்ட்டி செப்டிக் துகள்கல் இருக்கின்றன. இதில் நிறைந்திருக்கும் சல்ஃபர் கெட்ட நாற்றத்தை ஏற்படுத்திடும் பாக்டீரியாவை அழிக்க வல்லது .அன்றாட சமையலுக்கு பயன்படுத்திடும் பொருளான இதில் ஏராளமான மருத்துவ குணங்களும் அடங்கியிருக்கின்றன. தலைக்குளிப்பதற்கு முன்னால் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் நீங்கள் எது பயன்படுத்துவீர்களோ அதனை சூடாக்குங்கள். அப்படி சூடாக்கும் போது அதில் இரண்டு நசுக்கிய பூண்டினையும் சேர்த்து விடுங்கள். கொஞ்சம் சூடானதும் இறக்கிவிடலாம். பின்னர் அந்த எண்ணெயை தலைமுழுவதும் தேய்த்து தலைக்குளிக்கலாம். நேரடியாக பூண்டினை சேர்ப்பதற்கு பதிலாக சந்தையில் கிடைக்கிற பூண்டு எண்ணெயையும் பயன்படுத்தலாம்.

முட்டையின் வெள்ளைக்கரு : முட்டையில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் உடல் நலனில் மிகுதியான பலனை கொடுக்ககூடியது. இதில் முட்டையின் வெள்ளைக்கரு, தலைமுடியின் ஆரோக்கியத்திற்காக பயன்படும். முட்டையின் வெள்ளைக்கருவுடன் தயிர் சேர்த்து தலைமுழுவதும் நன்றாக தடவி மசாஜ் செய்து கொள்ளுங்கள். ஒரு மணி நேரம் ஊறிய பின்னர் தலைக்குளித்து விடுங்கள்.

கற்றாழை : சருமத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைககை கற்றாழை தீர்த்திடும்.இது தலைக்கும் ஏராளமான நன்மைகளை செய்கிறது.முடியுதிர்வு பிரச்சனை அதிகமிருப்பவர்கள் உங்கள் முடிக்கு கற்றாழை பயன்படுத்தி வந்தால் அது முடியுதிர்வை தவிர்க்கச் செய்திடும்.அதோடு மட்டுமின்றி தலையில் ஏற்படுகின்ற கெட்ட நாற்றத்தையும் இது போக்கிட வல்லது கற்றாழை ஜெல்லினை அப்படியே தலையில் தடவலாம். இல்லையெனில் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு அதில் கலந்து தலைக்கு மசாஜ் செய்திடுங்கள்.

cover 07 1510045786

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button