27.8 C
Chennai
Wednesday, Jan 22, 2025
cover 04 1509780255
மருத்துவ குறிப்பு

கவணம் இந்த அறிகுறிகள் எல்லாம் தெரிஞ்சா நுரையிரல கவனமா பாத்துக்கங்க!

குளிர் காலத்தில் பலருக்கும் அதிகரிக்கும் நோய்களில் ஒன்று ஆஸ்துமா. தற்போது வயது வித்யாசமின்றி எல்லாரையும் தாக்கி அச்சுறுத்தும் நோயாக இருக்கிறது. இந்தியாவில் மட்டும் இரண்டு கோடிக்கும் அதிகமானோர் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

ஒருவருக்கு அடிக்கடி தொடர்ந்து சளிப்பிடிக்கிறது என்றால் அவருக்கு ஆஸ்துமா வர வாய்ப்புகள் அதிகம். தொடர்ந்து சளி, அதனை தொடர்ந்து தும்மலும், இருமலும் இருப்பவர்களுக்கு சிறிது சிறிதாக சளி,இருமல் தாக்கி, நுரையீரலில் உள்ள மூச்சுக் குழாயை கிருமிகள் தாக்குகிறது.

இதனால் மூச்சுக் குழாயின் உட்சுவர்களில் சேதம் உண்டாகி அந்த இடத்தில் வீக்கமும் உண்டாகிறது.இதன் காரணமாக அசுத்த நீர் கசிந்து கிருமிகள் தாக்குவதால் மூச்சுக் குழாய்கள் சுருங்கி விரியும் தன்மை குறைகிறது. இதன் காரணமாக சுத்த காற்று உள்ளே செல்லவும், அசுத்த காற்று வெளியை வரவும் முடியாமல் தடங்கல் ஏற்படுகிறது.ஆரம்ப நிலையிலே ஆஸ்துமாவை கட்டுப்படுத்துவது அவசியம். ஆஸ்துமா முற்றிவிட்டால், பிராண வாயு சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படும். உயிருக்கே கூட ஆபத்தாக முடியும்.இதன் அறிகுறிகள் வெளிப்படையாக வெளியில் தெரிவதில்லை என்பதால் கவனமாக இருக்க வேண்டும்

காரணங்கள் : ஒவ்வாமையும் பரம்பரையும் தான் ஆஸ்துமா வருவதற்கு முக்கியக் காரணங்கள். உணவு, உடை, தூசு, புகை, புகைபிடித்தல், தொழிற்சாலைக் கழிவுகள் போன்றவை ஒவ்வாமையைத் தூண்டும்போது ஆஸ்துமா வருகிறது. குளிரான தட்பவெப்ப நிலை, கடுமையான வெப்பம் இந்த இரண்டுமே ஆஸ்துமாவை வரவேற்பவை.சிலருக்கு பூக்கள் கூட அலர்ஜியாக இருக்கும். நுரையீரலில் நோய்த்தொற்று இருந்தால் அது ஆஸ்துமாவைத் தூண்டும். அடிக்கடி சளி பிடிப்பது, அடுக்குத் தும்மல், மூக்கு ஒழுகல், மூக்கடைப்பு, வறட்டு இருமல் போன்றவற்றுக்கு முறையாக சிகிச்சை எடுக்காதபட்சத்தில் இவை ஆஸ்துமாவுக்கு வழி அமைத்துவிடும். இவை தவிர கவலை, பதற்றம், மன அழுத்தம், கோபம், பயம், அதிர்ச்சி, பரபரப்பு, மனக் குழப்பம், அதிகமாக உணர்ச்சிவசப்படுதல் போன்ற மனம் சார்ந்த பிரச்சினைகள் ஆஸ்துமாவை வரவேற்கும். நாம் சாப்பிடும் சில மருந்துகளால்கூட ஆஸ்துமா வரலாம்.

கட்டுப்படுத்த மட்டுமே முடியும் : ஆஸ்துமாவை முழுவதுமாகக் குணப்படுத்த முடியாது. இதைக் கட்டுப்படுத்தவே வழிகள் உள்ளன. ஆஸ்துமா உள்ளவர்களுக்கு வீடு, அலுவலகம், தெரு, சுற்றுச்சூழல்….. இவை எல்லாமே சுத்தமாக இருக்க வேண்டியது மிகமிக அவசியம்.

தூசு, குப்பை, அழுகிய உணவுப்பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்திவிட வேண்டும். படுக்கை விரிப்புகளையும் தலையணை உறைகளையும் அடிக்கடி மாற்றிவிட வேண்டும். இந்த இரண்டும் சுத்தமில்லாவிட்டால் அதில் ‘மைட்’ எனும் கண்ணுக்குத் தெரியாத பூச்சிகள் புழங்கும், அவை ஆஸ்துமாவைத் தூண்டும். இவர்கள் கம்பளிப் போர்வையைப் பயன்படுத்தக் கூடாது. சில்லென்ற காற்று நேரடியாக அறைக்குள் வருவதைத் தடுக்க வேண்டும். இவர்கள் சுழல் விசிறிக்கு நேராகப் படுக்கக் கூடாது. வாசனை திரவியங்களை அதிகமாகப் பயன்படுத்தக் கூடாது. ஊதுவத்திகள், கொசுவிரட்டிகள், சாம்பிராணிப் புகை, கற்பூரம் போன்றவற்றால்கூட ஆஸ்துமா அதிகரிக்கலாம். இதனை ஆரம்ப காலத்தில் கண்டு கொள்வது மிகவும் அவசியம் என்பதால் நீங்கள் சாதரணமாக நினைக்கும் விஷயங்கள் எது ஆஸ்துமாவின் அறிகுறி என்று தெரிந்து முறையான சிகிச்சையை ஆரம்பித்திடுங்கள்.

பூனை : ஆஸ்துமா பாதிப்பு இருப்பவர்களுக்கு பூனை அருகில் சென்றாலே அலர்ஜி,மூச்சுத்திணறல் ஏற்படுவது போன்றவை ஏற்படும். பலரும் அறையையும், சுற்றுப்புறம் தான் காரணம் என்று நினைப்பார்கள். ஆனால் உண்மையில் இது பூனையினால் அலர்ஜி ஏற்படுகிறது. இப்படி ஏற்ப்பட்டால் ஆஸ்துமா இருப்பதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு.

உடற்பயிற்சி : சாதரணமான உடற்பயிற்சி செய்தால் கூட அதிகமாக மூச்சு வாங்குகிறதா? அப்படியானால் உங்களுக்கு ஆஸ்துமா இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. தொடர்ந்து பத்து நிமிடம் ஒரு வேலையை செய்தால் அதிகமாக மூச்சு வாங்குவது, நெஞ்சு அடைப்பது போன்றதொரு உணர்வு, இருமல் போன்றவை ஏற்ப்பட்டால் மருத்துவ ஆலோசனை பெற்றிடுங்கள்.

எனது மார்பகக்காம்புகளிலிருந்து சில மாதகாலமாக பால் போன்ற திரவம் வெளியேறுகின்றது. இதற்கு என்ன காரணமாக …

நீண்ட காலம் : சாதரணமாக காய்ச்சல் மற்றும் சளிப்பிடித்தால் ஒரு வாரத்திற்குள்ளாக சீராகிட வேண்டும். இதைத் தாண்டு ஒரு மாதம் என கடந்து சென்றால் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம். சிலருக்கு சீசனல் அலர்ஜி ஏற்படும். குளிர்காலத்தில் மட்டும் மூக்கடைப்பு ஏற்படுவது போல இது ஒவ்வொருவரு பருவத்திலும் ஏற்படும் என்று சாதாரணமாக நினைக்காமல் தகுந்த சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

கொட்டாவி : ஆம், நீங்கள் விடும் கொட்டாவி கூட ஆஸ்துமாவினால் இருக்கலாம். கொட்டாவி விடுவதே ஆஸ்துமாவினால் என்பது கிடையாது. பொதுவாக ஆஸ்துமா பாதிப்புகள் இரவு நேரத்தில் தான் அதிகமாக தெரியும். இதனால் இரவுத் தூக்கம் பாதிப்படையும் நாள் முழுமைக்கும் சோர்வாகவே இருப்பீர்கள். தூக்கம் வேண்டும் என்ற அறிகுறிகள் உங்கள் அடிக்கடி ஏற்பட்டுக் கொண்டேயிருக்கும்.

தாழ்வு மனப்பான்மை : காரணமேயில்லாமல் நீங்கள் அடிக்கடி சோகமாக இருப்பீர்கள், இனம் புரியாத வலி உடலில் ஏற்படும்.மார்பு பகுதி இறுக்கமாகவும் மூச்சு விட அடிக்கடி சிரமம் ஏற்படுவதாகவும் உணர்வீர்கள். ஸ்ட்ரஸ் அதிகமானாலும் ஆஸ்துமா பிரச்சனை வரும் என்பதால் மனதை அமைதிப்படுத்தும் தியானம் மற்றும் மூச்சுப் பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள்.

இதயம் : ஆஸ்துமா என்பது நுரையிரல் சார்ந்த பிரச்சனை தான். ஆனால் இதய நோய் குறைபாடு இருப்பவர்களுக்கு ஆஸ்துமா பிரச்சனை வர அதிக வாய்ப்புகள் உண்டு. இதயத்திற்கு தேவையான ஆக்ஸிஜன் கொண்டு செல்லும் போது ஏற்படும் தடையினால் இதயம் பாதிப்படைகிறது.இதனால் ஆஸ்துமா வருவதற்கு கூட வாய்புகளுண்டு.

மகப்பேற்றிற்குப் பிந்தைய 40 நாட்களின் முக்கியத்துவம் என்ன? இவ்வளவு நீண்ட ஓய்வா?

உணவு : ஆஸ்துமாவை ஏற்படுத்துவதில் உணவுக்கு முக்கியப் பங்கு உண்டு. எந்த உணவால் ஆஸ்துமா வருகிறது என்பதைக் கண்டுபிடித்து, அந்த உணவைத் தவிர்த்தால் ஆஸ்துமா அடிக்கடி தொல்லை தராது. பால், தயிர், முட்டை, மீன், கருவாடு, நண்டு, கடல் மீன், கடலை, பருப்பு வகைகள், கொட்டை வகைகள், வாழைப்பழம், திராட்சைப்பழம், எலுமிச்சை, நெல்லிக்காய், கத்திரிக்காய், கொய்யா, தக்காளி, டால்டா, குளிர்பானங்கள், சர்பத், ரோஸ்மில்க், லஸ்ஸி, கோக் பானங்கள ஆகியவற்றை தவிர்ப்பது மிகவும் நல்லது.

புகை மற்றும் மது : ஆஸ்துமாவைத் தடுக்க விரும்பினால் புகைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். புகை பிடிப்பவர்களுக்கு மத்தியில் செல்லக் கூடாது.ஆஸ்துமா உள்ளவர்களுக்கு மதுவும் ஆகாது. மதுவில் இருக்கிற ‘மால்ட்’ எனும் பொருள் ஆஸ்துமாவைத் தூண்டுகிற காரணியாக இருக்கிறது.cover 04 1509780255

 

Related posts

ஞாபகமறதி நோய் ( தொடர்ச்சி)

nathan

கர்ப்ப கால பெண்களுக்கு இடுப்பு வலியை குறைக்க வழிகள்

nathan

ஆஸ்துமா வராமல் தடுப்பதற்கான சூப்பர் டிப்ஸ்….

nathan

செல்போனை பாதுகாப்பாக வைத்திருக்க டிப்ஸ்

nathan

பயனுள்ள மூலிகை மருத்துவ குறிப்புகள்

nathan

உங்களுக்கு தொியுமா ? எந்தவொரு நச்சு கூறுகளையும் உடலிலிருந்து அடித்து விரட்டும் இயற்கை பானம்!

nathan

குடல் புழுத் தொல்லை தடுப்பது எப்படி?

nathan

உங்களுக்கு தெரியுமா சர்க்கரை நோயாளிகளின் வரப்பிரசாதம் இந்த பூ….இருந்த தடமே தெரியாதாம்

nathan

உங்களுக்கு தெரியுமா ஆண், பெண் இருவரில் ஃபிட்டானவர் யார்…?

nathan