மருத்துவ குறிப்பு

கற்றாழையின் 10 முக்கியப் பலன்கள்..!! இதை முயன்று பாருங்கள்

தீக்காயங்களையும் வெட்டுக்காயங்களையும் குணப்படுத்த கற்றாழைச் சோறு பயன்படும் என்பது பலரும் அறிந்த ஒன்று. எனினும், அது இன்னும் பலப்பல அதிசய பலன்களை அளிக்கக்கூடியது என்று இப்போது தெரியவருகிறது. அழகுத் தயாரிப்பு நிபுணர்கள், அழகைக் கூட்டும் பண்புக்காக கற்றாழைச் சோற்றைப் பரிந்துரைக்கின்றனர், அதேபோல் உடல்நலத் துறை நிபுணர்களும் உடல் எடை குறைக்க அது உதவுகிறது என்று உறுதியாகக்கூறுகின்றனர். கற்றாழைச் சோற்றின் முக்கியமான 10 பலன்களை இந்தக் கட்டுரையில் காண்போம்:

மேக்கப்பை அகற்றுவதற்குப் பயன்படுகிறது (As a makeup remover)
இன்று பல்வேறு மேக்கப் ரிமூவர் தயாரிப்புகள் விற்பனைக்குக் கிடைக்கின்றன, ஆனால் அவற்றில் பல உங்கள் மென்மையான சருமத்திற்கு தீங்கு விளைவிக்க வாய்ப்புள்ளது. எனினும், அழகுக்கலை நிபுணர்கள் பலரும் அவற்றுக்குப் பதிலாக பட்டாணி அளவு சுத்தமான கற்றாழைச் சோற்றை காட்டன் பேடில் வைத்து மேக்கப்பை அகற்றப் பயன்படுத்தலாம், அது பாதுகாப்பானது என்று பரிந்துரைக்கின்றனர்.

ஃபேஸ் வாஷாகப் பயன்படுத்தலாம் (As a face wash)
அதிக உணர்திறன் கொண்ட சருமம் கொண்டவர்கள், முகம் கழுவுவதற்கும் கற்றாழைச் சோற்றைப் பயன்படுத்தலாம் என்றும் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ஃபேஸ் மாஸ்க்காகவும் அதனைப் பயன்படுத்தலாம். இதனை தேங்காய் எண்ணெயுடன் கலந்து பயன்படுத்தினால், சருமத்திற்கு ஈரப்பதத்தை அளித்து, தக்கவைக்கிறது.
எடை குறைப்பதற்குப் பயன்படுகிறது (For weight loss)
கற்றாழையில் பல வைட்டமின்களும் தாதுக்களும் உள்ளன, இது உடல் எடை குறைப்புக்கு உதவுகிறது என்று கருதப்படுகிறது, மேலும் இதிலுள்ள அமிலங்களும் நொதி உடல்நலத்தை மேம்படுத்துகின்றன என்றும் கூறப்படுகிறது.

முடி உதிர்வதைக் குறைக்க உதவுகிறது (To cure hair fall)
கற்றாழையில் உள்ள புரோட்டியோலிட்டிக் நொதியானது, தலையின் சருமத்தில் உள்ள சேதமடைந்த செல்களை சரிப்படுத்த உதவுகிறது. முடி வளர்ச்சியையும் மேம்படுத்துகிறது, தலையில் பொடுகு மற்றும் அரிப்பு ஏற்படும் வாய்ப்பையும் குறைக்கிறது. சிறந்த கண்டிஷனராகவும் செயல்படுகிறது!

இருமலிலிருந்து நிவாரணம் பெற உதவுகிறது (Relieve cough)
இருமல் மற்றும் ஜலதொஷத்தில் இருந்து நிவாரணம் பெறவும் கற்றாழை உதவுகிறது.

பெண்ணுறுப்பு நோய்த்தொற்றுகளைக் குறைக்க உதவுகிறது (Reduce vaginal infections)
கற்றாழையில் பூஞ்சை எதிர்ப்புப் பண்பு அதிகமுள்ளது, இதனால் வறண்டுபோன, அழற்சி உள்ள சருமத்தின் மீது இதனைப் பூசினால் நோய்த்தொற்றினால் ஏற்படும் அரிப்பு, எரிச்சல் போன்ற அறிகுறிகள் குறையும். எனினும், இதனைப் பயன்படுத்தும் முன்பு உங்கள் மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுவதே நல்லது.
மலச்சிக்கல் ஏற்படும் வாய்ப்புகளைக் குறைக்கிறது (Lower the chances of constipation)
கற்றாழை ஒரு மலமிளக்கியாகவும் செயல்படும் என்று கூறப்படுகிறது. இது செரிமானத்தை மேம்படுத்துகிறது என்றும் கூறப்படுகிறது.

பாதத்திற்கான மாஸ்க் (As a foot mask)
உங்கள் பாதம் பட்டு போல மென்மையாக, அழகு நிபுணர்கள் கற்றாழைச் சோற்றைப் பரிந்துரைக்கின்றனர். கற்றாழைச் சோற்றை ஓட்மீல் மற்றும் பாடி லோஷனுடன் கலந்து பயன்படுத்தினால் மிகுந்த பலன்களைக் கொடுக்கும். அது இறந்த செல்களை அகற்றவும் பாதத்திற்கு ஈரப்பதத்தை அளிக்கவும் உதவுகிறது.

புருவங்களை மென்மையாக்கும் ஜெல்லாகப் பயன்படுகிறது (As a smoothing eyebrow gel)
கற்றாழையில் பல இயற்கையான தாதுக்கள் உள்ளன, உங்கள் புருவங்களுக்கு அழகிய வடிவம் கொடுக்க அவை மிகவும் உதவும். புருவங்களில் அளவுக்கு அதிகமாக ரோமங்களை அகற்றிவிட்டிருந்தால், தினமும் பென்சில் கொண்டு புருவங்களை வரையத் தேவையில்லை! கற்றாழைச் சோற்றையும் விளக்கெண்ணெயையும் சம அளவு கலந்து கொண்டு தினமும் புருவங்களில் பூசுங்கள், சில நாட்களில் வித்தியாசத்தைக் காணலாம்!

மவுத்வாஷாகப் பயன்படுகிறது (As a mouthwash)
வேதிப்பொருள்கள் நிறைந்த மவுத்வாஷ் தயாரிப்புகளைவிட கற்றாழை மவுத்வாஷாகப் பயன்படுத்துவது பாதுகாப்பானது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஈறு வீக்கத்தைக் குறைக்கவும் கற்றாழையில் உள்ள பொருள்கள் உதவுகின்றன.24 1495609704 2 incredible ways to use aloe vera for overa 1

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button