மருத்துவ குறிப்பு

சர்க்கரை வியாதியை குணப்படுத்தும் புதிய சிகிச்சை!! முயன்று பாருங்கள்

நீரிழிவு நோய் என்பது தற்போதைய வாழ்க்கை முறையில் நிறைய இளைய தலைமுறையினரையும் பாதித்து வருகிறது. தவறான வாழ்க்கை முறை, தவறான உணவுப் பழக்கம், உடற்பயிற்சியின்மை போன்ற காரணங்களால் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
சரியான சிகச்சை முறைகள், மருந்துகள் மூலம் இந்த நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைக்க முடியும். இப்படி டயாபெட்டீஸ் நோயால் பாதிக்கப்பட்டவருக்கு உதவக் கூடிய வகையில் சில தகவல்களை நாங்க கூறயுள்ளோம்.

ஆராய்ச்சியாளர்கள் ஓரு ஸ்மார்ட் செயற்கை செல்களை உருவாக்கி உள்ளனர். இதன் மூலம் டயாபெட்டீஸ்யை எந்த வித வலியில்லாமலும் தொடர்ச்சியான ஊசிகள் இல்லாமலும் கட்டுப்படுத்தலாம். இந்த செயற்கை செல்கள் எப்பொழுது எல்லாம் குளுக்கோஸ் அளவு அதிகரிக்கிறதோ அப்பொழுது தானாகவே இன்சுலினை இரத்தத்தில் சுரக்கச் செய்கிறது.
எப்படி வேலை செய்கிறது ?

இந்த செயற்கை பீட்டா செல்கள் (artificial beta cells (ABCs)) நமது உடலில் உள்ள கணையத்தில் இயற்கையாகவே இன்சுலினை சுரக்கச் செய்யும் செல்களை போல செயல்பட்டு குளுக்கோஸ் அளவை கட்டுப்பாட்டில் வைக்கிறது.
இந்த செல்கள் டைப் 1 டயாபெட்டீஸ் மற்றும் டைப் 2 டயாபெட்டீஸ் போன்றவற்றிற்கு உதவுகிறது. இந்த செயற்கை பீட்டா செல்களை நோயாளிகளின் உடலில் செலுத்த வேண்டும். சில நாட்களுக்கு ஒரு முறை மறுபடியும் ஏற்ற வேண்டும். இது ஒரு வலியில்லாத ரிமூவ் பண்ண கூடிய ஸ்பின் பேஜ் ஆக செயல்படுகிறது.
இந்த செயற்கை பீட்டா செல்களை ஊசியின் மூலம் எலிக்கு செலுத்தும் போது 5 நாட்களில் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விடுகிறது.
எங்களுடைய ஆராய்ச்சியின் அடுத்த திட்டம் இந்த செல்களை பெரிய விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு ஆராய்ச்சி செய்து அதற்கான பலனை கண்டுபிடிப்பதே ஆகும் என்று சென் கு என்ற புரபொசர் யுனிவர்சிட்டி ஆஃப் நார்த் கலிபோர்னியாவிலிருந்து கூறுகிறார். மில்லியன் கணக்கான மக்கள் டயாபெட்டீஸ்யை கட்டுப்பாட்டில் வைக்க இன்சுலின் ஊசிகள் அல்லது மெக்கானிக் பம்ப்பை பயன்படுத்துகின்றனர்.

நீங்கள் சர்க்கரை நோய்க்கான மாத்திரைகள் மருந்துகள் எடுத்துக் கொள்ளும் போது அதில் உள்ள பெரிய மூலக்கூறுகள் நமது இரத்தத்தை அடைவதற்கு முன்னாடியே நமது சீரண என்ஜைம்கள் மற்றும் அமிலத்தால் அழிக்கப்பட்டு விடுகிறது.
எனவே தான் இப்பொழுது உள்ள சிகச்சை முறைகளால் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை சரியான அளவில் தானாகவே கட்டுப்பாட்டில் வைக்க முடிவதில்லை. கணைய இன்சுலின் செல்களை பரிமாற்றும் சிகச்சை செய்யும் போது ஒரு சிலருக்கு மட்டுமே பலன் கிடைக்கிறது.

இந்த செல்கள் பரிமாற்ற சிகச்சை செய்வதற்கு அதிகமான பணம், செல்களை வழங்குபவர் போன்றவைகளும் தேவைப்படுகின்றன. மேலும் நமது நோயெதிர்ப்பு சக்தி செல்களால் இந்த கணைய செல்கள் சில நேரங்களில் அழிக்கப்பட்டு விடுகின்றன. எனவே இந்த இயற்கை கணைய பீட்டா செல்களுக்கு பதிலாக செயற்கை பீட்டா செல்களை செலுத்தலாம் என்பதை நார்த் கரோலினா யுனிவர்சிட்டி சொல்லுகிறது.

இந்த செயற்கை பீட்டா செல்களில் சாதாரண செல்களை போல இரண்டு விதமான லிப்பிட் பிரிவுகள் உள்ளன. இந்த செல்களில் இன்சுலினை சுரக்கும் வால்வுகள் பொருத்தப்பட்டுள்ளன. இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரிக்கும் போது கெமிக்கல் மாற்றம் நடைபட்டு இந்த வால்வுகள் திறக்கப்பட்டு அதன் வெளிப்புற சவ்வை திறந்து இன்சுலினை சுரக்கிறது.

முதல் முறையாக இதற்கான செய்முறை காட்சி ஷாவவி சென் என்ற மருத்துவ ஆராய்ச்சியாளரால் கூஸ் ஆராய்ச்சி கூடத்தில் வைத்து செய்து காண்பிக்கப்பட்டது. செயற்கை செல்கள் குளுக்கோஸ் அளவின் மாற்றத்திற்கு ஏற்ப கெமிக்கல் செயலுக்கு உட்பட்டு இன்சுலின் வால்வுகள் திறக்கப்பட்டு அப்படியே இயற்கை கணைய பீட்டா செல்களை போல் இன்சுலினை சுரக்கச் செய்கிறது என்பது இந்த செய்முறை காட்சியின் போது காண்பிக்கப்பட்டது.

இந்த செயற்கை பீட்டா செல்கள் குளுக்கோஸ் அளவு அதிகரிப்புக்கு எதிராக லேப் டிஸ் டெஸ்ட் மூலம் எலியின் உடலில் விரைவாக செயல்படுவதையும் ஆராய்ச்சி செய்யப்பட்டது.

diabtes1 06 1509948747

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button