தலைமுடி சிகிச்சை

நீளமான முடியை பெற சர்க்கரை ஸ்க்ரப் எப்படி பயன்படுத்தலாம் என தெரியுமா?அப்ப இத படிங்க!

இன்றைய மிக பரபரப்பான நாட்களில், தலை முடி பராமரிப்பு என்பது மிகவும் கடினமான ஒன்றாக பாவிக்கப்படுகிறது. தலைக்கு எண்ணெய் தேய்ப்பதே ஒரு பெரிய வேலையாக பார்க்கப்படுகிறது. ஆகையால், வெளியில் இருக்கும் மாசு மற்றும் வேறு பிரச்சனைகளால் தலை முடி பாதிக்கப்பட்டு, வளர்ச்சி குறைபாடு தோன்றுகிறது.

பெரும்பாலும், தலைக்கு வாரத்தில் ஒரு முறை எண்ணெய் தேய்த்து குளிப்பது மட்டுமே சிலரின் வழக்கமாக உள்ளது. இதை விட அதிக பராமரிப்பு தலை முடிக்கு வழங்க படுவதில்லை. இன்றைய மாசு நிறைந்த சமூகத்தில், அதிகமாக வெளியில் பயணிக்கும் நிலையில், எண்ணெய் தேய்ப்பதும், ஷாம்பு பயன்படுத்தி தலையை அலசுவதும் மட்டும் பயன் அளிப்பதில்லை. இதனுடன் சேர்த்து தலைக்கு ஸ்க்ரப் செய்வதும் அவசியம். ஸ்க்ரப்பிங் செய்வதால், உச்சந்தலை மற்றும் முடி பகுதி சுத்தமாகிறது. வேர்க்கால்கள் ஆரோக்கியமாகிறது. இதனால் முடி வளர்ச்சி அதிகமாகிறது.

எண்ணெய் மற்றும் ஷாம்பூவால் ஓரளவுக்கு மட்டுமே தலை சுத்தமாகிறது. இதனால் ஸ்க்ரப் பயன்படுத்தி, தலை முடியை அதிகமாக புத்துணர்ச்சி அடைய செய்து, தூய்மை படுத்தி, முடி வளர்ச்சியை அதிகரிக்கலாம். தற்போது, கடைகளில் பல வித ஸ்க்ரப் கிடைக்க படுகிறது. அவற்றை வாங்கியும் பயன்படுத்தலாம். அல்லது, வீட்டிலேயே எளிய முறையில் ஸ்கரப் தயாரித்தும் பயன்படுத்தலாம்.
இந்த தொகுப்பில், பழுப்பு சர்க்கரை மற்றும் சில இயற்கை மூலப்பொருட்கள் கொண்டு ஸ்க்ரப் தயார் செய்வதை பற்றி பார்க்கலாம். இதனை படித்து, பயன்படுத்தி இயற்கையான முறையில் பக்க விளைவுகள் ஏதும் இல்லாமல், நீளமான அழகான பளபளப்பான கூந்தலை பெறலாம்.

பழுப்பு சர்க்கரையின் நன்மைகள் : பழுப்பு சர்க்கரை கொண்டு ஸ்க்ரப் செய்வதால் பலவித நன்மைகள் தலை முடிக்கு கிடைக்கிறது. தலையில் உள்ள அழுக்கு, பிசுபிசுப்பு, எண்ணெய் தன்மை, இறந்த செல்கள் போன்றவற்றை நீக்க இது உதவுகிறது. உச்சந்தலையை தொற்றில் இருந்து பாதுகாக்கிறது. இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. உச்சந்தலையை ஈரப்பதத்துடன் வைக்கிறது. வறட்சி, அரிப்பு, பொடுகு, முடி சுருள்வது போன்றவை தடுக்கப்படுகிறது. முடி உதிர்வு தடுக்கப்படுகிறது. முடி வளர்ச்சி அதிகரிக்கிறது.

ஸ்க்ரப் 1: தேவையான பொருட்கள்: பழுப்பு சர்க்கரை- 2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் -3 டேபிள் ஸ்பூன் காய்ச்சாத பால் – 5-8 டேபிள் ஸ்பூன்

பயன்படுத்தும் முறை : இந்த ஸ்கரபை தயாரிக்க, முதலில் மேலே குறிப்பிட்டுள்ள அளவு பால் மற்றும் எண்ணெய்யை ஒன்றாக கலக்கவும். இரண்டும் ஒன்றாக கலக்க சற்று நேரம் பிடிக்கும். ஆகையால் தொடர்ந்து கலக்கவும். பாலும் எண்ணெய்யும் ஒன்றாக கலந்தவுடன் பழுப்பு சர்க்கரையை சேர்க்கவும். எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த கலவை மிகவும் கெட்டியாக இருந்தால் மேலும் சிறிதளவு பால் சேர்த்து கொள்ளலாம். இந்த கலவையை தலையில் நன்றாக தடவவும். தடவி நன்றாக ஸ்க்ரப் செய்யவும். மிக நீண்ட நேரம் ஸ்க்ரப் செய்வதால் தலையில் எரிச்சல் உண்டாகும். 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் தலையை அலசவும். பிறகு எப்போதும் போல் ஷாம்பு கொண்டு தலையை அலசவும். 2 வாரங்களுக்கு ஒரு முறை இதனை செய்யலாம்.

ஸ்க்ரப் 2: தேவையான பொருட்கள்: பழுப்பு சர்க்கரை – 2 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா – 2 டேபிள் ஸ்பூன் எதாவது ஒரு எண்ணெய் – 5-8 டேபிள் ஸ்பூன்

பயன்படுத்தும் முறை : பழுப்பு சர்க்கரை மற்றும் பேக்கிங் சோடாவை ஒன்றாக கலந்து கொள்ளவும். இரண்டும் கலந்தவுடன் இதனுடன் எண்ணெய்யை சேர்க்கவும். மூன்று மூல பொருட்களையும் நன்றாக கலந்து கொள்ளவும். இவை எல்லாம் சேர்ந்து பழுப்பு நிறத்தில் காட்சியளிக்கும். இதனை தலையில் தடவவும். நன்றாக 20 நிமிடம் மசாஜ் செய்யவும். பிறகு 15 நிமிடம் தலையை ஊற விடவும். பிறகு ஷாம்பூவால் தலையாய அலசவும். வாரத்திற்கு ஒரு முறை இதனை செய்யலாம்.

ஸ்க்ரப் 3: தேவையான பொருட்கள்: பழுப்பு சர்க்கரை – 2 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் – 2 டேபிள் ஸ்பூன் கண்டிஷனர் – 2 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் – 15 துளிகள்

பயன்படுத்தும் முறை : பழுப்பு சர்க்கரை மற்றும் ஓட்ஸ் ஆகிய இரண்டிற்கும், ஸ்க்ரப்பிங் தன்மை உண்டு. இதனை பயன்படுத்துவதால் தலையில் அடைந்திருக்கும் அழுக்குகள் வெளியேறுகிறது. இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. ஓட்ஸ் மற்றும் பழுப்பு சர்க்கரையை நன்றாக கலக்கவும். கலந்த பின் இதனுடன் நீங்கள் பயன்படுத்தும் கண்டிஷனர் 2 ஸ்பூன் சேர்க்கவும். இந்த கலவையுடன் ஆலிவ் எண்ணெய்யை சேர்த்து கலக்கவும். இந்த கலவையை உங்கள் தலையில் தடவவும். 15 நிமிடம் நன்றாக மசாஜ் செய்யவும். பிறகு தலையை குளிர்ந்த நீரால் அலசவும். வாரத்திற்கு ஒரு முறை இதனை செய்யலாம்.

ஸ்க்ரப் 4: தேவையான பொருட்கள் : பழுப்பு சர்க்கரை -2 ஸ்பூன் எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன் ஜோஜோபா எண்ணெய் – 2 ஸ்பூன் கடல் உப்பு – 1 ஸ்பூன்

பயன்படுத்தும் முறை : இந்த ஸ்கரப்பை பயன்படுத்துவதால் பொடுகு குறையும். முடி உதிர்வு குறைக்க பட்டு வளர்ச்சி அதிகமாகும். பழுப்பு சர்க்கரையுடன் கடல் உப்பை சேர்த்து கலக்கவும். இந்த கலவையுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்க்கவும். இவற்றுடன் ஜோஜோபா எண்ணெய்யை சேர்த்து கலந்து ஸ்க்ரப் தயார் செய்யவும். இந்த ஸ்கரப்பை தலையில் தடவி 15 நிமிடம் மசாஜ் செய்யவும் . பின்பு குளிர்ந்த நீரால் தலையை அலசவும்.

கூந்தல் வளர்ச்சி : பழுப்பு சர்க்கரையை பயன்படுத்தி ஸ்க்ரப் தயாரிக்கும் முறைகளை தெரிந்து கொண்டீர்களா. இதனை முயற்சித்து, நீளமான கூந்தலை பெறலாம். விலை குறைவாக கிடைப்பதால் இதனை எல்லா மக்களும் வாங்கி தயாரித்து பயன் பெறலாம். பக்க விளவுகளும் இல்லாதது. இரசாயன பொருட்கள் கலந்த சந்தை பொருட்களை வாங்கி பயன்படுத்தி தலை முடியின் பொலிவையே இழந்து தவிக்கும் பெண்களுக்கு இது ஒரு அற்புதமான மாற்றாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

24 1511514025 5

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button