ஆரோக்கிய உணவு

கால்சியம் உணவுகளை எடுத்துக் கொள்வதற்கு முன்னால் இதை நோட் செய்திருக்கிறீர்களா?அப்ப இத படிங்க!

நாம் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு கால்சியம் மிகவும் அவசியமான ஒன்றாகும். பற்கள் மற்றும் எலும்புகளின் வளர்ச்சிக்கு அத்தியவசித் தேவையாக கால்சியம் இருக்கிறது. அதோடு மட்டுமின்றி நரம்புகள் மற்றும் தசைகளின் செயல்பாடுகளுக்கும், ரத்தத்தில் இருக்கிற ஆல்கலைன் அளவு சீராக பராமரிக்கவும் கால்சியம் மிகவும் அவசியம்.

கால்சியம் பற்றாகுறை இருந்தால் உடலில் ஏராளமான நோய் பாதிப்பு உண்டாகிடும். இதனைத் தவிர்க்க கால்சியம் எப்படியெல்லாம் நாம் எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
ஒவ்வொருவருக்கும் அவருடைய வயது மற்றும் பாலினம் அடிப்படையில் கால்சியம் தேவைப்படும் அளவு வேறுபடும். நம் உடலில் கால்சியம் குறைபாடு இருக்கிறது என்பதை இந்த அறிகுறிகளை வைத்து கண்டு பிடிக்கலாம்.

நகம் :
உங்களுக்கு நகம் எளிதில் உடைகிறதா? அப்படியெனில் உங்களுக்கு கால்சியம் சத்து குறைவாக உள்ளது என்று அர்த்தம். நகங்கள் உடைவது மட்டுமின்றி, நகங்களில் தோல் உரிந்தாலும், அது உடலில் போதிய அளவில் கால்சியம் இல்லை என்பதற்கான அறிகுறி.

தசை இறுக்கம் : கால்சியம் உடலில் குறைவாக இருந்தால், அடிக்கடி திடீரென்று சதைகளுக்கு இறுக்கம் ஏற்படும். அதனைத் தொடர்ந்து தசைப் பிடிப்புகள் அல்லது வலியை உணரக்கூடும். கால்சியம் குறைவாக இருப்பதால் நரம்புகள் மற்றும் தசைகள் அதன் வலிமையை இழந்து, எளிதில் தளர்ச்சி அடைகிறது.இதனால் கை மற்றும் கால் மதமதப்புடன் இருப்பதாக தோன்றிடும்.

மறதி : கால்சியம் குறைபாட்டினால் ஞாபக மறதி ஏற்படும். ஏனெனில் கால்சியம் உடலில் குறைவாக இருக்கும் போது, அதன் எதிர்விளைவாக நரம்பு மண்டலம் மோசமாக பாதிக்கப்பட்டு, ஞாபக மறதியை ஏற்படுத்துகிறது.

சோர்வு : கால்சியம் குறைபாடு ஒருவரின் உடல் ஆரோக்கியத்தை மட்டுமின்றி, மன ஆரோக்கியத்தையும் தான் பாதிக்கும். கால்சியம் குறைபாடு, மன இறுக்கமும், மிகுதியான அளவில் உடல் சோர்வை சந்திக்கக்கூடும். மேலும் அடிக்கடி உடல்நிலை சரியில்லாதவாறு சோர்வாகவே உணர்வார்கள்.

சோடியம் : உணவுகளில் அதிகமாக உப்பு சேர்த்துக் கொண்டால் அது நம் உடலில் இருக்கும் கால்சியம் அளவை குறைத்திடும். அதனால் உப்பு அதிகமாக சேர்ப்பதை குறைத்திடுங்கள். உப்பு அதிகமாக எடுப்பதனால் கால்சியம் கரைந்து சிறுநீர் வழியாக வெளியேறிடும். இதனால் எலும்புகள் வலுவிழக்கும்.

கேஃபைன் : ஒவ்வொரு நாளும் காபியுடன் தான் பலருக்கும் நாளே துவங்குகிறது. அதன் பிறகு அலுவல் வேலை, வீட்டு வேலை போன்றவற்றுக்கு நடுவே பலமுறை காபி குடிக்கும் பழக்கம் நிறையவே இருக்கிறது. இதனை குறைக்க வேண்டும். நம் உடலில் அதிகமாக கேஃபைன் சேர்ந்திருந்தால் அது நம் உடலில் உள்ள கால்சியத்தை குறைத்திடும். ஒரு நாளைக்கு நான்கு அல்லது அதற்கும் மேல் காபி குடிப்பவர்கள் பலருக்கும் எலும்பு தொடர்பான நோய் ஏற்படும். ஒரு நாளைக்கு இரண்டு கப் காபி குடித்தாலே போதுமானது. கேஃபைன் உடலில் கால்சியம் உறியும் தன்மையை குறைத்திடும் என்பதால் குறைப்பது நல்லது.

சோடா : உணவு செரிக்கவில்லையெனில் பலரும் சோடா குடிக்கிறார்கள். இதைத் தவிர சுவைக்காகவும், டயட் என்ற பெயரில் சோடா எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதில் சேர்க்கப்பட்டிருக்கும் கெமிக்கல் நம் உடலில் சேருகின்ற கால்சியம் அளவைக் குறைத்திடும். சோடாவை அதிகமாக குடித்தால் அது நம் ரத்தத்தில் உள்ள போஸ்பேட் அளவை அதிகரித்திடும். இதனால் கால்சியம் கரைந்து சிறுநீர் வழியாக வெளியேறிடும். நம் உடலில் போஸ்பேட் அளவு அதிகரிக்க அதிகரிக்க நம் உடல் கால்சியம் உறியும் தன்மையை இழக்கிறது. ஒரு கிளாஸ் குடித்தால் எந்தப்பிரச்சனையும் இல்லை. ஆனால் தொடர்ந்து அதிகப்படியாக குடித்து வந்தால் ஆபத்து.

தினமும் : தினமும் நாம் சாப்பிடும் உணவைத் தாண்டி கால்சியம் சப்ளிமெண்ட் எடுத்துக் கொள்ளலாம், இப்போது கால்சியம் பவுடர், கால்சியம் டிரிங், கால்சியம் டேப்ளெட்,கால்சியம் கேப்சூல் என பல வடிவங்களில் கிடைக்கிறது.   உங்கள் உடலில் அதிகப்படியான கால்சியம் பற்றாகுறை இருந்தால் இது போன்ற சப்ளிமெண்ட் எடுத்துக் கொள்ளலாம். இப்படி மாத்திரை எடுத்துக் கொள்வதற்கு முன்னால் மருத்துவ ஆலோசனை பெற்றிடுங்கள். உணவு சாப்பிட்டவுடன் கால்சியம் மாத்திரை எடுத்துக்கொள்ளுங்கள். தாமதப்படுத்தாமல் சிறிது நேரத்திலேயே எடுத்துக் கொள்வது நல்லது. தினமும் அதிகப்படியான கால்சியம் சப்ளிமெண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். உங்கள் உடலுக்கு தேவையான அளவு கால்சியம் கிடைத்து விட்டால் மாத்திரை எடுத்துக் கொள்வதை நிறுத்திட வேண்டும். கால்சியம் அதிகமானால் அது பல்வேறு உபாதைகளை ஏற்படுத்திடும்.

மக்னீசியம் : நம் உடல் கால்சியம் கிரகத்திக் கொள்ள மிகவும் அவசியமான ஒன்று மக்னீசியம். மக்னீசியம் மற்றும் கால்சியம் இரண்டின் மெட்டபாலிசமும் கிட்டத்தட்ட ஒன்றாகவே இருக்கும். நம் உடலில் மக்னீசியம் போதுமானளவு இருந்தால் மட்டுமே அவை கால்சியத்தை கிரகத்திக் கொள்ள உதவிடும்.இதனால் கால்சியத்திற்கு தருகின்ற அதேயளவு முக்கியத்துவத்தை மக்னீசியம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வதிலும் இருக்க வேண்டும். பாதாம், முந்திரி, பூசணி விதைகள்,முழு தானியங்கள், வெள்ளரி, அவகேடோ,ப்ரோக்கோலி,கீரை ஆகியவற்றில் மக்னீசியம் நிறைந்திருக்கிறது.

விட்டமின் டி : விட்டமின் டி நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். இதுவும் மக்னீசயம் போலத்தான் கால்சியம் உறிந்து கொள்ள பயன்படுகிறது. வெண்ணைய்,முட்டை, சீஸ் போன்றவற்றில் விட்டமின் டி நிறைந்திருக்கிறது.

சூரிய ஒளி : இயற்கையாகவே விட்டமின் டி பெற்றுக் கொள்ள ஒரு வழி நேரடி சூரிய ஒளியில் படுமாறு நீண்ட நேரம் இருப்பது. தினமும் குறைந்தது அரைமணி நேரமாவது வெயில் படுமாறு நிற்க வேண்டும். பகல் நேரத்தை விட விடியற்காலையில் நிற்பது தான் மிகவும் நல்லது. இதனைத் தவிர கால்சியம் அதிகமிருக்கும் உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது எந்த உணவுகளில் எல்லாம் கால்சியம் அதிகமாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

கருப்பு உளுந்து : கருப்பு உளுந்து கால்சியம் சத்து நிறைந்தது. அதேபோல் சோயபீன், கொள்ளு போன்றவைகளில் கால்சியம் சத்து காணப்படுகின்றன. அதேபோல் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் கொண்ட மீன் உணவுகளை உட்கொள்ளலாம். உணவியல் நிபுணர்கள் கூறியுள்ள இவற்றை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் எலும்பு உடைதல் நோய்களில் இருந்து தப்பிக்கலாம்.

பேரீட்சை : பேரிச்சம்பழத்தில் கால்சியம், மாங்கனீஸ் உள்ளது. அதேபோல் தாமிரச்சத்துக்களும், மங்கனீசியமும் காணப்படுகின்றன. இது எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.

ராகி : 100 கிராம் ராகியில் 330 மில்லிகிராம் முதல் 350 மில்லி கிராம் கால்சியம் சத்து உள்ளது. எனவே ராகி சாப்பிடுவதன் மூலம் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கும்

தயிர் : பால், கால்சியம் சத்து நிறைந்த உணவாகும். இதை பெண்கள் கண்டிப்பாக அருந்த வேண்டும். மாதவிடாய் காலத்தில் ஏற்படும் சிக்கல்களை சரி செய்ய பால் மிகவும் அவசியம். பால் அருந்த பிடிக்காதவர்கள் தயிர் எடுத்துக் கொள்ளலாம். பாலில் இருக்கும் அளவு கால்சியம் சத்து, தயிரிலும் உண்டு.

சீஸ் : பாலை கொண்டு உருவாகும் சீஸிலும் அதிக கால்சியம் சத்து உண்டு. அத்திப்பழத்தில் கால்சியம் மற்றும் இரும்பு சத்து இருக்கும். இதனை தினமும் எடுத்துக் கொள்ளலாம். இது உங்கள் உடலில் கால்சியம் அதிகரிக்கும்.

10 1510301861 8

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button