ஆரோக்கிய உணவு

இதெல்லாம் சாப்பிட்டா கல்லீரல் எப்பவும் பத்திரமா இருக்கும் தெரியுமா!

மனித உடலிலேயே கல்லீரல் தான் மிகப்பெரிய உறுப்பு.உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு பல்வேறு முக்கியமான செயல்பாடுகளில் ஈடுபடுவதும் இதுவே. அதில் உடலில் சேரும் டாக்ஸின்களை வெளியேற்றுவது மற்றும் செரிமானத்திற்கு தேவையான பித்த நீரை சுரப்பது குறிப்பிடத்தக்கது.எனவே கல்லீரலில் சிறு பிரச்சனை என்றாலும், அதனால் உடலின் பல்வேறு செயல்பாடுகள் பாதிக்கப்படும். அதிலும் கல்லீரலில் உள்ள பிரச்சனை முற்றினால், உயிரைக் கூட இழக்க நேரிடும்.

சில நேரங்களில் கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தால், அதை தெரிந்து கொள்வது என்பது மிகவும் கடினம். ஏனெனில் கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தால், அதற்கு சில அறிகுறிகள் உள்ளன. ஆனால் அந்த அறிகுறிகள் சாதாரணமாக உடலில் அவ்வப்போது வரும் என்பதால், சரியாக அதனை கவனிக்காமல் விட்டுவிடுவார்கள். கல்லீரல் பாதிக்கப்படாமல் இருக்க என்ன உணவுகளை சாப்பிட வேண்டும் என்று தெரிந்து கொள்ளலாம்.

கருவளையம்
கல்லீரல் சரியாக இயங்காலிட்டால், சருமத்தில் பாதிப்பு மற்றும் சோர்வு போன்றவை ஏற்படும். அதிலும் குறிப்பாக கண்களைச் சுற்றி கருவளையங்கள் ஏற்பட்டு, சுருக்கங்களோடு காணப்படும்.

செரிமானப் பிரச்சனை கல்லீரலில் கொழுப்பானது அதிகம் சேர்ந்திருந்தால், தண்ணீர் கூட சரியாக வெளியேறாமல் இருக்கும். இத்தகைய பிரச்சனை உடலில் தெரிந்தால், அது கல்லீரல் பழுதடைந்துள்ளதற்கான அறிகுறியாகும்.

வெளுத்த சருமம் கல்லீரலில் பாதிப்பு இருந்தால், சில சமயங்களில் சருமத்தில் உள்ள நிறமிகள் நிறமிழந்து, சருமத் தோலானது திட்டுதிட்டாக ஆங்காங்கு வெள்ளையாக காணப்படும்.

அடர்ந்த நிற சிறுநீர் உடலில் இருந்து வெளியேறும் கழிவுகள் அடர்ந்த நிறத்தில் இருக்கும். இந்த மாதிரி எப்போதாவது ஏற்பட்டால், அதற்கு உடலில் வறட்சி என்று அர்த்தம். ஆனால், தொடர்ச்சியாக இருந்தால், அது கல்லீரல் பழுதடைந்ததற்கான அறிகுறியாகும்.

மஞ்சள் நிற கண்கள் கண்ணில் உள்ள வெள்ளை பகுதி மஞ்சள் நிறத்தில் காணப்பட்டால், அது மஞ்சள் காமாலையாக இருக்கலாம். அதாவது கல்லீரலில் தொற்றுநோய் ஏற்பட்டுள்ளது. எனவே அதற்கேற்ப முறையான சிகிச்சை செய்ய வேண்டும்.

வாய் கசப்பு கல்லீரலில் பைல் என்னும் நொதியானது உற்பத்தி செய்யப்படும். அந்த பைல் நொதி தான் கசப்பான சுவையை ஏற்படுத்துகிறது. எனவே வாயில் அதிக கசப்பு இருந்தால், கல்லீரலில் பாதிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம்.

வயிறு வீக்கம் கல்லீரலானது பெரும் பாதிப்பிற்கு ஆளாகியிருந்தால், அவை வயிற்றின் அடிப்பகுதியில் வீக்கத்தை ஏற்படுத்தும்

வாய் துர்நாற்றம்: கல்லீரலானது சரியாக இயங்கவில்லையெனில், வாயிலிருந்து கடுமையான நாற்றம் வரும். ஏனெனில் அப்போது உடலில் அமோனியா அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டிருக்கும்.

செரிமானம் : கல்லீரலில் கொழுப்பானது அதிகம் சேர்ந்திருந்தால், தண்ணீர் கூட சரியாக வெளியேறாமல் இருக்கும். இத்தகைய பிரச்சனை உடலில் தெரிந்தால், அது கல்லீரல் பழுதடைந்துள்ளதற்கான அறிகுறியாகும். இந்த பாதிப்புகள் எல்லாம் தெரிந்தால் உங்கள் கல்லீரல் பழுதடைந்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம், இதனை முறையாக டெஸ்ட்கள் செய்து உறுதி செய்து கொள்வது மிகவும் அவசியமாகும். கல்லீரலை ஆரோக்கியமாக பராமரிக்கவும், ஏதேனும் பாதிப்பு ஏற்ப்பட்டிருந்தால் அதன் தீவிரத்தை குறைக்கவும் நீங்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளுங்கள்.

ஆப்பிள் சீடர் வினிகர் ஒவ்வொரு சாப்பாட்டிற்கு முன்னரும் இந்த ஆப்பிள் சீடர் வினிகரை எடுத்துக் கொள்வது கல்லீரலுக்கு மிகவும் நல்லது. ஒரு டம்ளர் நீரில் ஒரு ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரைக் கலந்து, அத்துடன் ஒரு ஸ்பூன் தேனையும் கலந்து குடிக்கலாம். தினமும் 3 முறை இதைக் குடித்து வந்தால் கல்லீரல் சுத்தமாகும்.

டான்டேலியன் ரூட் தேநீர் டான்டேலியன் வேரில் தயாரிக்கப்பட்ட டீயை தினமும் இரு முறை குடித்து வந்தால், கல்லீரல் செயல்பாடுகள் அதிகரிக்கும். கொதிக்கும் நீரில் இந்த வேர்களைச் சிறிது சேர்த்து, அந்த நீரை அருந்துவதும் நல்லது.

நெல்லிக்காய் வைட்டமின் சி அதிகமுள்ள நெல்லிக்காயைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், கல்லீரலின் செயல்பாடுகள் நன்றாக இருக்கும். அதிலும் ஒரு நாளுக்கு 5 நெல்லிக்காய்கள் வரை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் வலுவடையும். வேண்டுமானால் தயிர், உப்பு ஆகியவற்றுடன் நெல்லிக்காயைச் சேர்த்து பச்சடியாகவும் சாப்பிடலாம்.

அதிமதுரம் சில கல்லீரல் நோய்களுக்கு அருமையான ஆயுர்வேத மருந்தாக விளங்குகிறது அதிமதுரம். இந்த அதிமதுரத்தின் வேரை நன்றாகப் பொடித்து, அதை டீத்தூளுடன் கொதிக்கும் நீரில் போட வேண்டும். சிறிது நேரம் கழித்து, அதை வடிகட்டி குடிக்கலாம். ஒரு நாளைக்கு இரு முறை குடிப்பது உசிதம்.

மஞ்சள் தினமும் மஞ்சளை உணவில் சேர்த்துக் கொள்வதால் நம் உடலுக்குப் பலப்பல நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக, ஹெப்பாடிட்டிஸ் பி மற்றும் சி ஆகியவற்றுக்குக் காரணமான வைரஸ்கள் பரவுவதை மஞ்சள் தடுக்கிறது. அதற்கு தினமும் பாலுடன் அல்லது ஒரு ஸ்பூன் தேனுடன் அரை ஸ்பூன் மஞ்சளைக் கலந்து குடிக்கலாம்.

ஆளி விதைகள் இரத்தத்தில் உள்ள சில ஹார்மோன்கள் கல்லீரலை சில சமயம் சேதப்படுத்துகின்றன. இதைத் தவிர்க்க, ஆளி விதைகளை நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பப்பாளிப் பழம் கல்லீரல் நோய்க்கு பப்பாளிப்பழம் ஒரு அருமையான மருந்தாகும். தினமும் ஒரு ஸ்பூன் எலுமிச்சைச் சாற்றுடன் 2 ஸ்பூன் பப்பாளிப்பழச் சாற்றைத் தொடர்ந்து 4 வாரங்கள் சாப்பிட்டு வருவது பலன் கொடுக்கும்.

கேரட் ஜூஸ் அரை டம்ளர் கீரை ஜூஸ் மற்றும் அரை டம்ளர் கேரட் ஜூஸ் ஆகியவற்றைத் தினமும் 3 மணிநேரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் நோய் ஓடிப் போகும்.

வேண்டாம் : மது அருந்துவது கல்லீரலுக்கு மிகவும் கேடானது. எனவே, கல்லீரல் நன்றாக இருக்க வேண்டும் என்றால் மது அருந்துவதை உடனே நிறுத்த வேண்டும். அதேப்போல் சிகரெட் புகைப்பதையும் கண்டிப்பாக நிறுத்த வேண்டும்.

நட்ஸ் : கல்லீரல் நோய்கள் எதுவும் வராமல் இருக்க இந்த இரண்டையும் தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. இதனால் அவற்றில் உள்ள க்ளுடாதியோன், கல்லீரலில் தங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றும்

காய்கறிகள் கல்லீரலைக் காப்பாற்ற பசுமையான காய்கறிகளையும், ஆப்பிளையும் நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் காய்கறிகள் பித்தநீரை சீராக சுரக்க உதவுவதுடன், ஆப்பிளில் உள்ள பெக்டின் செரிமான பாதையில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, கல்லீரலில் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கும்.

க்ரீன் டீ இதில் நிறைய கேட்டச்சின்கள் இருப்பதால் கல்லீரலுக்கு மிகவும் நல்லது. தினமும் 3 முதல் 4 கப் க்ரீன் டீயைக் குடித்து வந்தால், கல்லீரல் தொடர்பான பிரச்சனைகளுக்கு நிவாரணம் கிடைக்கும்.

உடற்பயிற்சி தினமும் குறைந்தது 40 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்து வந்தால், நன்றாக செரிமானம் ஆகும்; நிறைய வியர்க்கவும் செய்யும். இவ்விரண்டும் கல்லீரல் பாதிப்படைவதை வெகுவாகத் தவிர்க்கும். மேலும் வாரத்திற்கு 5 முறையாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

பூண்டு : கல்லீரல் தொற்றை சீராக்குவதில் முக்கிய் இடம் வகிப்பது பூண்டு. இது கல்லீரலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்ற பெரிதும் உதவிடும். இதில் இருக்கும் allicin மற்றும் selenium கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

திராட்சை : திராட்சையில் glutathione எனப்படும் வீரியமிக்க ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் இருக்கிறது. இது கல்லீரலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றச் செய்திடும். தினமும் காலையில் திராட்சை ஜூஸ் குடிக்கலாம்.

பீட்ரூட் : பீட்ரூட் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் அதிகப்படியான ஃப்ளேவனாய்ட்,பீட்டா கரோட்டீன் இருக்கிறது. இது கல்லீரலின் செயல்பாடுகளுக்கு பெரிதும் உதவிடும். அதோடு பீட்ரூட் இயற்கையாகவே ரத்தத்தை சுத்தப்படுத்தும் ஆற்றல் கொண்டது

எலுமிச்சை : எலுமிச்சையில் இருக்கும் D-Limonene என்ற ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் கல்லீரல் செயல்பாட்டிற்கு பெரிதும் உதவிடும். ஆரோக்கியமான என்சைம்களை அதிகரிக்கச் செய்து உடலில் இருக்கும் தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றிடும். நீங்கள் தினமும் குடிக்கப் பயன்படுத்தும் தண்ணீரில் ஒரு துண்டு எலுமிச்சையை போட்டு விடுங்கள். அந்த தண்ணீரையே நாள் முழுவதும் குடிக்கலாம்.

cover 13 1510566563

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button