25.8 C
Chennai
Sunday, Jan 12, 2025
cover 08 1510123784
ஆரோக்கிய உணவு

4 வாரங்கள் சர்க்கரையை தவிர்த்தால் நம் உடல் சந்திக்கும் அற்புத மாற்றங்கள் தெரியுமா!

இன்றைக்கு எல்லாமும் சர்க்கரையாகத்தான் இருக்கிறது, ஆம், நாம் சாப்பிடும் பெரும்பாலான உணவுப் பொருட்களில் சர்க்கரை கலந்திருக்கிறது. அந்த சர்க்கரையை அளவில்லாமல் தொடர்ந்து நாம் எடுப்பதால் நம் ரத்தத்தில் சர்க்கரையளவு அதிகரித்து சர்க்கரை நோயில் ஆரம்பித்து எண்ணற்ற உடல் உபாதைகள் ஏற்படும்

இந்தியாவில் அதிகம் பேர் பாதிக்கப்படும் ஓர் நோய் என்றால் கண்ணை மூடிக் கொண்டு சர்க்கரை நோயை கை காட்டலாம். அந்த அளவுக்கு வயது வித்யாசங்களின்றி எங்கெங்கும் பரவியிருக்கிறது. சர்க்கரையை கட்டுப்படுத்த முடியுமா? அப்படியானால் எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரிந்து கொள்ளலாம். அதற்கு முன்பாக தொடர்ந்து நான்கு வாரங்கள் வரை நீங்கள் சர்க்கரையை எடுத்துக் கொள்ளாவிட்டால் உங்கள் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்று பலனை முதலில் தெரிந்து கொள்ளலாம்.

முதல் வாரம் : சர்க்கரையை நிறுத்த வேண்டும் என்று நீங்கள் முடிவெடுத்து அதனை உறுதியுடன் தொடரும் முதல் சில நாட்கள் மிகவும் கடினமானதாக இருக்கும். வெற்றிகரமாக முதல் வாரத்தை கடந்து விட்டால் வெற்றி உங்களுக்குத் தான். ஆரம்பத்தில் அடிக்கடி பசியெடுப்பது, நிறைய தண்ணீர் தாகம் எடுப்பது, சோர்வு, போன்றவை ஏற்படும். எதையாவது சாப்பிட்டுக் கொண்டேயிருக்க வேண்டும் என்று தோன்றிடும். என்ன தான் சாப்பிட்டாலும் நிறைவுத்தன்மை தோன்றாது. தலை வலிக்கும்.

இரண்டாவது வாரம் : முதல் ஏழு நாட்களில் இருந்த அவஸ்தைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கும். எட்டாம் நாளிலிருந்தே உங்கள் உடல் அதற்கு பழக ஆரம்பித்து விடும். நீங்களாக சர்க்கரை நிறைந்த சாக்லெட், ஸ்வீட் போன்றவற்றை தவிர்த்துவிடுவீர்கள். தலை வலி,மற்றும் சோர்வு முற்றிலுமாக குறைந்திடும். சர்க்கரைக்கு பதிலாக இனிப்பு நிறைந்த பழங்களை எடுத்துக் கொள்ளலாம்.

மூன்றாவது வாரம் : வழக்கத்தை விட உற்சாகமாக இருப்பீர்கள். சர்க்கரை அதிகம் எடுத்துக் கொள்ள அது உங்களுடை எண்ண வோட்டத்தை மாற்றிடும். எப்போதும் மந்தமாக இருக்குமாறு வைத்திருக்கும். சர்க்கரை அளவு எடுத்துக் கொள்வதை குறைத்தவுடன் இந்த நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறிடும். சுறு சுறுப்பாக இருப்பீர்கள்.

நான்காவது வாரம் : சர்க்கரை அதிகமாக எடுத்துக் கொண்டால் அது க்லைகேசன் என்ற உற்பத்திக்கு காரணியாக இருக்கும். கொலாஜன் மற்றும் எலாஸ்டின் ஆகிய இரண்டு முக்கிய ப்ரோட்டீன் தான் சருமம் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் இருபதற்கு முக்கிய காரணியாக சொல்லப்படுகிறது. சர்க்கரை இந்த உற்பத்தியை தடுத்திடுகிறது. இதனால் சருமத்தில் வறட்சி ஏற்பட்டு பல்வேறு பாதிப்புகள் உண்டாகும். இதனால் சர்க்கரையை தவிர்த்தால் உங்கள் சருமம் இயற்கையாகவே பொலிவு பெரும். அதை விட சர்க்கரை அளவு இல்லாததால் நம் உடலுக்கு தேவையான எனர்ஜியை எடுத்துக் கொள்ள கொழுப்பை எடுத்துக் கொள்ள ஆரம்பிக்கும். இதனால் கொழுப்பு குறைந்திடும். நாளைடைவில் உடல் எடை குறைந்திடும்.

ஏன் தேவை சர்க்கரை ? : நம் உடல் சீராக இயங்குவதற்கு சர்க்கரை கண்டிப்பாக தேவை. சர்க்கரையில் அதிகப்படியான கார்போஹைட்ரேட் நிறைந்திருக்கும். இதைத் தவிர சர்க்கரையில் குளுக்கோஸ், ஃப்ரூட்கோஸ் மற்றும் கலாக்டோஸ் ஆகியவை இருக்கும். கார்போஹைட்ரேட் எல்லாம் நாம் சாப்பிட்டதும் செரிமானமாகி குளுக்கோஸாக மாறிடும். அது நமக்கு எனர்ஜியை கொடுத்திடும். நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லும் துரிதமாக செயல்படுவதற்கு சர்க்கரை தேவைப்படுகிறது.

சர்க்கரை அளவு : நாம் வாங்கும் உணவுப் பொருளில் அதில் சேர்க்கப்பட்டிருக்கும் பொருட்களின் பட்டியல் அதில் சேர்க்கப்பட்டிருக்கும் அளவைப் பொருத்து வரிசைப்படுத்தியிருப்பார்கள் முதல் ஐந்து இடங்களில் சர்க்கரை இடம் பெற்றிருந்தால் அதில் அதிகப்படியான சர்க்கரை இருக்கிறதென்று அர்த்தம்.

சர்க்கரை நோய் : நம் உடலின் இயக்கத்திற்கு அவ்வளவு முக்கியமான சர்க்கரை எப்போது எமனாக மாறுகிறது தெரியுமா ? ரத்தத்தில் அதிக அளவில் குளுகோஸ் சேரும்போது தான். நமது செரிமான அமைப்பு நாம் என்ன உணவு சாப்பிட்டாலும் அதை குளுக்கோஸாக உடைக்கிறது. இந்த குளுக்கோஸ் இன்சுலின் என்ற ஹார்மோன் உதவியுடன் இரத்தத்தின் மூலம் உறிஞ்சப்படுகிறது. உடலினால் இன்சுலின் உற்பத்தி செய்ய முடியவில்லை அல்லது அதை திறம்பட பயன்படுத்த முடியவில்லை எனும் போது சர்க்கரை நோய் ஏற்படுகிறது.இது ஏன் நடக்கிறது என்பதற்கான காரணங்கள் சில உள்ளன.

காரணம் : இப்பிரச்சனை நடப்பதற்கு முக்கிய காரணங்களாக அறியப்படுபவை, மரபணு மாற்றம், பீட்டா செல்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவது, உடல் பருமன், உடல் உழைப்பு இல்லாதது,நாள்பட்ட மருத்துவம், முதுமை, கணையத்தில் ஏதேனும் நோய்த் தொற்று ஏற்படுவது போன்றவை தான் முக்கிய காரணங்களாக இருக்கிறது. ரத்தப்பரிசோதனை மூலமாக உங்கள் உடலில் உள்ள ரத்தச் சர்க்கரை அளவை அறிந்திடலாம்.

சிறுநீர் : சர்க்கரை அளவுகளில் ஏற்படக்கூடிய உயர்வு, இரத்த ஓட்டத்தில் காணப்படும் திரவங் களின் அளவை உயர்த்தக்கூடியதான ஓஸ் மொலாலிட்டியை அதிகரிக்கும். இது சிறுநீரகத்திற்கு அதிக அழுத்தம் கொடுத்து, அதிக அளவிலான சிறுநீரை உருவாக்கும் படி செய்வதால் சிறுநீர் பிரச்சனை ஏற்படும். சிறுநீர் கழிக்க வேண்டும் என்பது போன்ற உணர்வு அடிக்கடி உங்க ளுக்கு ஏற்படுமாயின், உங்களுக்கு சர்க் கரை நோய் இருக்கக்கூடும். அதே போல அதீத தண்ணீர் தாகம் ஏற்படும்.

கண் பார்வை : அதிக அளவிலான குளுக்கோஸ், சர்க்கரை நோயாளியின் இரத்தம் மற்றும் திசுக்களில் இருந்து திரவத்தை வெளியேற்றுவதி னால், அது அவரின் கண் பார் வையை மங்கச் செய்யும். மே லும் இது கண்களின் கூர்ந்து நோக்கும் திறனை பாதிக்கும்.

எடை குறைவு : உயிரணுக்களுக்கு தேவையான குளுக்கோஸ் கிடைக்காததனால், உடல் தனக்கு தேவையான சக்தியை கொழுப்பு நிறைந்த திசுக்களை உடைத்து எடுத்துக் கொள்ள தலைப்படும். இதனால் எடை குறைவு ஏற்படும் . அதே நேரத்தில் சர்க்கரையை உபயோகித்து தனக்குத் தேவைப்படும் சக்தியைப் பெற்றுக்கொள்ள இயலாது. இதனால், அந்நோயாளி உடற் சோர்வு, அசதி போன்ற தொல்லைகளுக்கு ஆளாக நேரிடும். உயிரணுக்களால், இரத்த ஓட்டத்தில் இருக்கக் கூடிய குளுக்கோஸை, இன்சுலினின் உதவியின்றி உறிஞ்ச இயலாது. அதனால் அவற்றின் ஆற்றல் குறைந்து காணப்படும்.

மரத்துப் போகுதல் : இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரி ப்பதனால், நரம்பு மண்ட லம் குறிப்பிடத்தக்க அளவிலான பாதிப்புக்கு ஆளாகும். சர்க்க ரை நோய் நீண்ட காலம் வரையில் கண்டு பிடிக்கப்படாமலே இருக்கும் பட்சத்தில், அது கைகளில் அடிக்கடி சிலிர்ப்பது போன்ற உணர்வைக் கொடுக்கும் அல்லது உணர்வு கள் ஏதுமின்றி மரத்துப் போகச் செய்யும்.

காயம் : இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிக ரிக்கும் பட்சத்தில், உடலின் நோய் எதிர்ப்பு மையமானது, சீராக இயங்கும் ஆற்றலை இழந்துவிடும். திசுக்களில் காணப்படும் சீரற்ற நீர் சமன்பாடு, வெட்டுக் காயங்கள் குணமடைவதை தாமதப்படுத்தும்.

cover 08 1510123784

Related posts

பூண்டை அதிகமாக சாப்பிட்டால் இவ்வளவு ஆபத்தா? தெரிஞ்சிக்கங்க…

nathan

மஞ்சளில் இவ்வளவு மருத்துவ குணம் இருக்கா?தெரிஞ்சிக்கங்க…

nathan

பெண்களே தட்டையான வயிற்றைப் பெற வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

தினமும் காலையில் ஒரே ஒரு அத்திப்பழம்-அதிக சத்துகள் நிறைந்துள்ளது

nathan

உங்களுக்கு தெரியுமா குழந்தையுடன் பயணிக்கும் போது எடுத்துச் செல்ல வேண்டிய வீட்டு உணவுகள்!!!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… வயிறு தட்டையா ஸ்லிம்மா இருக்கணும்னா இந்த இஞ்சி-சீரகத் தண்ணி குடிங்க!

nathan

வயிற்று உப்புசம் போன்ற பிரச்சனைகளை போக்கும் சோம்பு !!

nathan

பெருஞ்சீரகம்! வெறும் வயிற்றில் குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா?

nathan

மருத்துவ பண்புகள் நிறைந்த வெங்காயம் மோர்!…

sangika