சரும பராமரிப்பு

உங்கள் சருமம் என்றும் 16 ஆக ஜொலிக்க அவகாடோவை பயன்படுத்தும் வழிகள் தெரியுமா!!

இயற்கை அன்னைக்கு நமக்கு எது சிறந்ததென்று தெரியும். அவள் நமக்கு சுவையான காய் கனிகளை அளித்துள்ளாள். அவற்றில் ஒன்று வெண்ணெய்ப் பழம் என்று அறியப்படும் நமது சொந்தக் கனியான அவகடோவாகும்.

அவகடோ அதன் பாலாடை போன்ற வெண்ணெய் போன்ற தன்மையினால் “இயற்கையின் வெண்ணெய்” என்று அழைக்கப்படுகிறது. இந்த சொர்க்கத்தின் பழத்தில் பி, சி, ஈ மற்றும் கே போன்ற வைட்டமின்கள், அமினோ அமிலங்கள் மற்றும் ஒமேகா – 3 கொழுப்பு அமிலங்கள், போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது. இவை உங்கள் கூந்தல், நகங்கள் மற்றும் சருமத்திற்கு ஊட்டமளிக்கிறது.

அவகடோ உங்கள் சரும அமைப்பை மேம்படுத்தி பருக்கள், முகப்பரு, வயது முதிர்வு காரணமாக ஏற்படும் புள்ளிகள் ஆகியவற்றிற்கு நிவாரணமளித்து மேலும் உங்கள் சருமத்தை மிருதுவாகவும் மென்மையாகவும் உணரச் செய்கிறது. இதர இயற்கையான மூலக்கூறுகளுடன் கலந்த அவகடோ முகப்பூச்சு உங்கள் சருமத்தின் மீது அற்புதங்களை நிகழ்த்தும். இந்தக் கட்டுரையில் நாங்கள் அதன் அற்புதமான நற்பலன்களைப் பற்றி உங்களுக்கு சொல்லவிருக்கிறோம் மேலும் அவகடோ முகப்பூச்சுக்களை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி என்று காட்டவிருக்கிறோம். விரைவாக ஒரு முறை பார்வையிடுவோம் வாருங்கள்.

தேன் மற்றும் அவகடோ முகப்பூச்சு: தேனில் நுண்ணுயிர் எதிர்ப்பு மூலக்கூறுகள் அடங்கியுள்ளது, இது பருக்கள் மற்றும் சருமம் தொடர்பான பிரச்சனைகளுக்கு குணமளிப்பதில் சிறப்பாக செயல்படுகிறது. தேன் ஒரு நல்ல மாய்ஸ்சுரைசர் ஆகும். இது அவகடோவுடன் கலக்கும் போது அற்புதங்களை செய்கிறது. இவை ஒன்றிணைந்து சருமத்துளைகளை சுத்திகரிக்கவும், சருமத்தை இறுக்கவும் மற்றும் வயது முதிர்வை குறைக்கவும் உதவுகிறது. இங்கே நீங்கள் அதை எப்படிப் பயன்படுத்தலாம் என்று கொடுக்கப்பட்டிருக்கிறது:

பயன்படுத்துவது எப்படி: 1. பழுத்த அவகடோவை மசித்துக் கொண்டு அத்துடன் 1 அல்லது 2 டேபிள் ஸ்பூன் தேனை கலந்து கொள்ளுங்கள். 2. இந்த கலவையை உங்கள் முகம் முழுவதும் பரவலாகத் தடவுங்கள். 3. 20 நிமிடங்களுக்கு அப்படியே விட்டுவிடுங்கள். 4. பிறகு சாதாரண தண்ணீரைக் கொண்டு கழுவுங்கள்.

வெள்ளரிக்காய் மற்றும் அவகடோ: வெள்ளரிக்காயில் உள்ள அதிகப்படியான நீர்ச்சத்து உங்கள் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது. அதை அவகடோவுடன் கலக்கும் போது இந்தக் கலவை ஒரு மாயஜாலம் போல செயல்படுகிறது.

பயன்படுத்துவது எப்படி: 1. அவகடோ பழக்கூழை மசித்துக் கொண்டு வெள்ளரிக்காய் சாற்றுடன் கலந்து கொள்ளுங்கள். 2. இந்த முகப்பூச்சை உங்கள் முகம் முழுவதும் சமமாகப் பூசுங்கள். 3. 15 முதல் 20 நிமிடங்களுக்கு அப்படியே விட்டுவிடுங்கள். 4. பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள். 5. வாரம் ஒரு முறை இந்த செயல்முறையை திரும்பத் திரும்பச் செய்யுங்கள்.

ஓட்ஸ் மற்றும் அவகடோ: வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு இந்த சிகிச்சை மிகவும் பயனுள்ளது. ஓட்ஸ் சரும எரிச்சலுக்கு குணமளிக்க உதவுகிறது மேலும் சருமத்தை மாய்ஸ்சரைஸ் செய்து சருமத்திற்கு ஈரப்பதமளிக்கிறது.

பயன்படுத்துவது எப்படி: 1. வேகவைத்த ஓட்ஸையும் அவகடோவையும் ஒன்றாகக் கலந்துக் கொள்ளுங்கள். 2. இந்தக் கலவையை உங்கள் முகத்தில் சமமாகத் தடவுங்கள். 3. உலரும் வரை கலவையை அப்படியே விட்டுவிடுங்கள். 4. பிறகு சாதாரணத் தண்ணீரைக் கொண்டு கழுவி விடுங்கள். 5. இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை இவ்வாறு தொடர்ந்து செய்யுங்கள்.

வாழைப்பழம் மற்றும் அவகடோ: வாழைப்பழம் உங்கள் சருமத்தை மென்மையாக்கக்கூடிய உயர் அளவு வைட்டமின்களையும் ஊட்டச்சத்துக்களையும் தன்னுள்ளே கொண்டுள்ளது. இதிலுள்ள ஆன்டி – ஆக்சிடன்ட்டுக்கள் மற்றும் ஆன்டி பாக்டீரியா மூலக்கூறுகள் சருமத்தைப் பாதுகாக்க உதவுவதோடு தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களுக்கு எதிராக போராடுகிறது. மருக்கள் மற்றும் பருக்களுக்கு சிகிச்சையளிப்பதில் வாழைப்பழமும் அவகடோவும் ஒன்றிணைந்து சிறந்த இணையாக செயல்படுகின்றன.

பயன்படுத்துவது எப்படி: 1. ஒரு கிண்ணத்தில் அவகடோ பழத்தை மசித்துக் கொள்ளுங்கள். 2. ஒரு வாழைப்பழத்தை உரித்து சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள். 3. ஒரு முள் கரண்டியின் உதவியுடன் அவற்றை ஒன்றாகக் கலந்துக் கொள்ளுங்கள். அதை மென்மையான பேஸ்டாக செய்து விட்டதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். 4. இந்த முகப்பூச்சை உங்கள் முகம் முழுவதும் பூசுங்கள். 5. 15 முதல் 20 நிமிடங்களுக்கு அப்படியே விட்டுவிடுங்கள். 6. பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள். 7. இந்த முறையை தினமும் தொடர்ந்து செய்யுங்கள்.

கெட்டித் தயிர் மற்றும் அவகடோ முகப்பூச்சு: கெட்டித் தயிரில் நல்ல பாக்டீரியாக்கள் அடங்கியுள்ளன. இது உங்கள் சருமத்தை பாதுகாத்து ஈரப்பதமளிக்கிறது. அது மட்டுமல்ல இது பருக்களை உண்டு பண்ணும் பாக்டீரியாக்களை கொல்லவும் உதவுகிறது.

பயன்படுத்துவது எப்படி: 1. ஒரு கிண்ணத்தில் ஒரு அவகடோவை மசித்துக் கொள்ளுங்கள். 2. சுத்தமான கெட்டித் தயிரை எடுத்துக் கொண்டு அதை அவகடோ பேஸ்டுடன் கலந்துக் கொள்ளுங்கள். 3. அதை உங்கள் சருமத்தில் சமமாகப் பரவும் படி தடவுங்கள். 4. இந்த முகப்பூச்சை 15 முதல் 20 நிமிடங்களுக்கு அப்படியே விட்டுவிடுங்கள். 5. பிறகு சாதாரணத் தண்ணீரில் கழுவுங்கள். 6. நீங்கள் இந்த முகப்பூச்சை தினமும் பயன்படுத்தலாம்.

எலுமிச்சை மற்றும் அவகடோ: எலுமிச்சம் பழத்தில் சிட்ரிக் அமிலம் உள்ளது. இது சருமத்தின் இறந்த செல்களை அகற்றி சருமத்திற்கு புத்துயிர் அளிக்க உதவுகிறது. இதன் பாக்டீரியா எதிர்ப்பு மூலக்கூறுகள் பருக்களுக்கு எதிராக போராடுகிறது.

பயன்படுத்துவது எப்படி: 1. அவகடோவை ஒரு கிண்ணத்தில் மசித்துக் கொள்ளுங்கள். 2. எலுமிச்சையை பாதியாக நறுக்கிக் கொள்ளுங்கள். 3. எலுமிச்சையிலிருந்து சாற்றை பிழிந்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். 4. இந்த எலுமிச்சம் சாற்றை அவகடோ பேஸ்டுடன் கலந்து கொள்ளுங்கள். 5. இந்தக் கலவையை உங்கள் முகத்தில் தடவுங்கள். திறந்த காயங்கள், கண்கள் அல்லது உதடுகளின் மேல் தடவக்கூடாது. 6. 15 நிமிடங்கள் வரை இந்தக் கலவையை உங்கள் முகத்தின் மீது அப்படியே விட்டுவிடுங்கள். 7. சாதாரணத் தண்ணீரைக் கொண்டு உங்கள் முகத்தைக் கழுவுங்கள். 8. சுத்தமான டவலில் முகத்தைத் துடையுங்கள். 9. வாரத்தில் 2 முதல் 3 முறை இந்த செயல்முறையை தொடர்ந்து செய்து வாருங்கள். 10. பகல் பொழுதில் நீங்கள் வெளியே செல்வதாக இருந்தால் சன்ஸ்கிரீன் லோஷனைப் பயன்படுத்துங்கள்.

தேங்காய் எண்ணெய் மற்றும் அவகடோ முகப்பூச்சு: தேங்காய் எண்ணெய் பருக்களை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை கொல்வதோடு உங்கள் சருமத்திற்கு சிறந்த மாய்ஸ்டுரைஸராகவும் செயல்படுகிறது. தேங்காய் எண்ணையில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் மூலக்கூறுகள் வயது முதிர்வு மற்றும் சூரிய ஒளிக்கதிர்களால் ஏற்படும் சேதங்களிலிருந்து சருமத்தை பாதுகாக்கிறது. நீங்கள் வறண்ட சருமம் கொண்டவராக இருந்தால் இந்த முகப்பூச்சு உங்கள் சருமத்திற்கு சிறந்த உணவாகும்.

பயன்படுத்துவது எப்படி: 1. ஒரு கிண்ணம் மசித்த அவகடோவுடன் ஒரு டேபிள் ஸ்பூன் தூய தேங்காய் எண்ணையை கலந்துக் கொள்ளுங்கள். 2. இந்தப் பொருட்களை நன்றாகக் கலந்துக் கொள்ளுங்கள். 3. இந்தக் கலவையை உங்கள் சருமத்தில் தடவுங்கள். 4. 15 முதல் 20 நிமிடங்களுக்கு அப்படியே விட்டுவிடுங்கள். 5. பிறகு சாதாரணத் தண்ணீரில் கழுவுங்கள். 6. அழகான சருமத்தைப் பெற இந்த செயல்முறையை தினமும் தொடர்ந்து செய்யுங்கள்.

மஞ்சள், கெட்டித் தயிர் மற்றும் அவகடோ முகப்பூச்சு: மஞ்சளில் குர்குமின் என்னும் பொருள் உள்ளது. இது உங்கள் சருமத்திற்கு புத்துயிர் அளித்து பருக்கள், எக்சீமா மற்றும் கரு வளையங்களிலிருந்து விடுதலையளிக்கிறது. மஞ்சள் அவகடோ மற்றும் கட்டித் தயிருடன் சேரும் போது சுருக்கங்களற்ற மற்றும் தெளிவான சருமத்திற்கான மிகச் சிறந்த முகப்பூச்சாக உருவாகிறது.

பயன்படுத்துவது எப்படி: 1. ஒரு கிண்ணத்தில் ஒரு அவகடோவை மசித்துக் கொள்ளுங்கள். 2. ஒரு கிண்ணம் அவகடோவிற்கு ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூளை சேர்த்துக் கொள்ளுங்கள். 3. அந்தக் கிண்ணத்தில் ஒரு டேபிள் ஸ்பூன் கட்டித்தயிரை சேர்த்துக் கொள்ளுங்கள். 4. இந்த பொருட்களை நன்றாகக் கலந்துக் கொள்ளுங்கள். 5. இந்தக் கலவையை உங்கள் முகத்தில் தடவுங்கள். 6. 20 நிமிடங்களுக்கு இந்தக் கலவையை உங்கள் முகத்தில் அப்படியே விட்டுவிடுங்கள். 7. சாதாரண நீரில் அதைக் கழுவி டவல் கொண்டு துடையுங்கள். 8. வாரத்தில் 2 முதல் 3 முறை இந்த செயல்முறையை தொடர்ந்து செய்யுங்கள்

முட்டையின் மஞ்சள் கரு, முட்டையின் மஞ்சள் கருவில் புரதம் மற்றும் ஏ, பி2 மற்றும் பி3 போன்ற பல்வேறு வைட்டமின்கள் அடங்கியுள்ளன. இது உங்கள் சரும செல்களில் ஈரப்பதத்தை தக்கவைத்து உங்கள் சருமத்தை மிருதுவாகவும் மென்மையாகவும் உணரச் செய்கிறது.

பயன்படுத்துவது எப்படி: 1. பாதி கனிந்த அவகடோவையும் வாழைப்பழத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள். 2. முட்டையிலிருந்து மஞ்சள் கருவை தனியாகப் பிரித்து எடுத்துக் கொள்ளுங்கள். 3. ஒரு கிண்ணத்தில் முட்டையின் மஞ்சள் கரு, அவகடோ மற்றும் வாழைப்பழத்தை கலந்துக் கொள்ளுங்கள். 4. இதை நல்ல அடர்த்தியான பேஸ்டாகத் தயாரித்துக் கொள்ளுங்கள். 5. இந்தக் கலவையை உங்கள் முகத்தில் சமமாகத் தடவுங்கள். 6. 10 முதல் 15 நிமிடங்களுக்கு இந்தக் கலவையை உங்கள் முகத்தில் அப்படியே விட்டுவிடுங்கள். 7. சாதாரண நீரில் அதைக் கழுவி அப்படியே உலர விடுங்கள். 8. நீங்கள் கனவு காணும் சருமத்தைப் பெற இந்த செயல்முறையை தினமும் தொடர்ந்து செய்யுங்கள்.

க்ரீன் டீ மற்றும் அவகடோ முகப்பூச்சு: க்ரீன் டீயில் ஆன்டி ஆக்சிடன்ட்டுகளும் மற்றும் எபிகல்லோ கேடிசின் கலேட் (ஈஜிசிஜி) என்னும் வேதிப் பொருளும் அடங்கியுள்ளது. இது வீக்கத்திற்கு நிவாரணமளித்து மேலும் உங்கள் மென்மையாக்குகிறது. இந்த பொருட்கள் ஒன்றாகக் கலக்கும் போது உங்கள் சருமத்திற்கான ஒரு அற்புத முகப்பூச்சு கிடைக்கும்.

பயன்படுத்துவது எப்படி: 5 1. ஒரு கைப்பிடி பச்சைத் தேயிலை இலைகளை நீரில் ஊறவிடுங்கள். 2. ஒரு முழு அவகடோவை கிண்ணத்தில் மசித்துக் கொள்ளுங்கள். 3. ஒரு முள் கரண்டி கொண்டு இந்த இரண்டு பொருட்களையும் நன்றாகக் கலந்துக் கொள்ளுங்கள். 4. இந்த கலவையை உங்கள் முகம் முழுவதும் தடவுங்கள். 5. 15 முதல் 20 நிமிடங்களுக்கு இந்தக் கலவையை உங்கள் முகத்தில் அப்படியே விட்டுவிடுங்கள். 6. சாதாரண நீரில் அதைக் கழுவுங்கள். 7. இந்த செயல்முறையை தினமும் தொடர்ந்து செய்யுங்கள்.முன்னெச்சரிக்கை: சிலருக்கு இதிலுள்ள பொருட்கள் ஓவ்வாமையை ஏற்படுத்தலாம். எனவே எப்பொழுதும் பயன்படுத்தும் முன் முதலில் சருமப் பரிசோதனையை செய்யுங்கள். மேலும் படியுங்கள்: சருமப் பராமரிப்பு, அவகடோ.11 29 1511958879

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button