சரும பராமரிப்பு

உங்களுக்கு தெரியுமா இதை அக்குளில் தடவினால், கருமை போவதோடு, ஷேவ் பண்ணவே அவசியமிருக்காது…!

பெண்கள் தங்களது சருமம் மென்மையாக ரோமங்களின்றி இருக்கவே விரும்புவர். ஆனால் பெண்களின் அழகைக் கெடுக்கும் வகையில், கை, கால், முகம், அக்குள் போன்ற பகுதிகளில் தேவையற்ற முடிகள் வளரும். அதிலும் அக்குள் பகுதியில் வளரும் முடி, அப்பகுதியை கருமையாக வெளிக்காட்டும். இதனால் பல பெண்கள் ஸ்லீவ்லெஸ் உடைகளை அணிய கூச்சப்படுவார்கள்.

என்ன தான் அக்குளில் வளரும் முடி அப்பகுதிக்கு பாதுகாப்பை வழங்கினாலும், அசிங்கமான தோற்றத்தைக் கொடுப்பதால், அதை பல பெண்கள் ஷேவ் செய்வார்கள். இப்படி ரேசர் கொண்டு ஷேவ் செய்தால், அது அப்பகுதியில் அரிப்பை உண்டாக்கி, அசௌரியத்தைக் கொடுக்கும்.

எனவே தமிழ் போல்ட் ஸ்கை அக்குளில் இருக்கும் கருமையைப் போக்கவும், அப்பகுதியில் வளரும் முடியை இயற்கை வழியில் நீக்கவும் சில எளிய முறைகளைக் கீழே கொடுத்துள்ளது.

மஞ்சள் சிகிச்சை தேவையான பொருட்கள்: மஞ்சுள் சிகிச்சையை செய்வதற்கு 1/2 கப் மஞ்சள் தூள், ரோஸ் வாட்டர் அல்லது குளிர்ந்த பால், வெதுவெதுப்பான நீர் மற்றும் துண்டு போன்ற பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளுங்கள்.

செய்யும் முறை: * ஒரு பௌலில் மஞ்சள் தூள் மற்றும் பால் அல்லது ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். * பின் அதை அக்குளில் தடவி 20-30 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும். பின்பு வெதுவெதுப்பான நீரில் நனைத்த துண்டால் அக்குளைத் துடைத்து எடுக்க வேண்டும். * இந்த சிகிச்சையை அடிக்கடி செய்து வருவதன் மூலம், அக்குளில் உள்ள மயிர்கால்கள் தளர்ந்து, உதிர்ந்துவிடும்.

பேக்கிங் சோடா சிகிச்சை தேவையான பொருட்கள்: பேக்கிங் சோடா சிகிச்சையை மேற்கொள்வதற்கு தேவையான பொருட்களாவன,

* பேக்கிங் சோடா * தண்ணீர்

ஒரு பௌலில் பேக்கிங் சோடாவைப் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். முக்கியமாக பேஸ்ட்டானது மிகவும் நீர்மமாக இல்லாமல் ஓரளவு கெட்டியான பதத்தில் இருக்க வேண்டும்.

பயன்படுத்தும் முறை: * தயாரித்து வைத்துள்ள பேஸ்ட்டை இரவில் படுக்கும் முன் அக்குளில் தடவி, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். * பின்பு மறக்காமல் மாய்ஸ்சுரைசரை அப்பகுதியில் தடவுங்கள். இல்லாவிட்டால், அப்பகுதி வறட்சியடைந்து அரிப்பை ஏற்படுத்தும்.

குறிப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ள எளிய சிகிச்சைகளை வாரத்திற்கு 2-3 முறை பின்பற்றி வந்தால், அக்குளில் முடி வளர்வதைத் தடுக்கலாம். எனவே இனிமேல் கெமிக்கல் கலந்த பொருட்களால் அக்குள் முடிகளை நீக்காமல், இயற்கை வழிகளைப் பின்பற்றுங்கள். இதனால் எவ்வித பக்கவிளைவும் இருக்காது மற்றும் சருமமும் ஆரோக்கியமாக இருக்கும்.underarms 01 1512120700

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button