முகப் பராமரிப்பு

மீண்டும் மீண்டும் தொட தூண்டும் மென்மையான சருமம் வேணுமா? இதை முயன்று பாருங்கள்!

சருமம் அழகாகவும் மென்மையாகவும் இருக்க வேண்டும் என்று நினைக்காத பெண்களே இல்லை.. அனைத்து பெண்களுக்குமே தங்களது சருமம் மென்மையாக இருந்தால் மிகவும் பிடிக்கும். குழந்தைகளின் கன்னங்கள் மென்மையாக இருக்கும். அதை யாருக்கு தான் தொட்டு பார்க்க வேண்டும் கிள்ளி விளையாட வேண்டும் என்ற ஆசை இருக்காது…?

உங்களது சருமத்தை கூட மென்மையாக மாற்றலாம்.. அதற்காக நீங்கள் தனியாக நேரம் செலவிட தேவையில்லை.. தினமும் செய்யும் விஷயங்களை சரியாக செய்தாலே போதுமானது.. சீக்கிரமாக உங்களது சருமத்தை மென்மையாக மாற்றிவிடலாம். இந்த பகுதியில் உங்களது சருமத்தை மென்மையாக்க சில குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை பயன்படுத்தி உங்களது சருமத்தை மென்மையாக மாற்றுங்கள்…!

தண்ணீர் தினமும் போதிய அளவில் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ள வேண்டும். இதனால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி, சருமம் பொலிவாகவும், மென்மையாகவும், வறட்சியின்றியும் இருக்கும்.

வியர்வை வியர்வை வெளியேறுவது என்பது மிகவும் இன்றியமையாதது. ஏனெனில் வியர்வையின் வெளியேறும் போது சருமத்துளைகளில் தங்கியுள்ள நச்சுக்களை அனைத்தும் வெளியேறி, சருமத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளும். எனவே தினமும் உடற்பயிற்சியை மேற்கொண்டு, வியர்வையை வெளியேற்ற வேண்டும்.

சோப்பு வேண்டாம் முகத்தை அடிக்கடி சோப்பு போட்டு கழுவினால், சருமம் வறட்சியுடன் காணப்படும். எனவே ஒரு நாளைக்கு 1-2 முறை கழுவினால் போதுமானது. வெறும் தண்ணீரால் தினமும் 4 முதல் 5 முறை கழுவலாம்.

இறந்த செல்களை நீக்கவும் சருமத்தில் தங்கியுள்ள இறந்தை செல்கள் மற்றும் அழுக்குகளை வெளியேற்ற, ஸ்கரப் செய்ய வேண்டும். இதனால் சரும மென்மைக்கு தடையாக இருக்கும், அந்த அழுக்கு படலத்தை முற்றிலும் வெளியேற்ற முடியும். ஸ்கரப் செய்ய பின்னர், ரோஸ் வாட்டர் கொண்டு சருமத்தை துடைத்தால், சருமத்துளைகள் சிறிதாகி, அழுக்குகள் உள்ளே புகாதவாறு தடுக்கும்.

ஆவிப்பிடித்தல் ஆவிபிடிப்பது சருமத்தின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இது அழுக்குளை வெளியேற்றுவதால் முகப்பருக்கள் வராமல் தடுக்கலாம். ஆவிப்பிடிப்பதால், சருமத்துளைகள் தளர்வடைந்து, சருமத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறி, சருமம் மென்மையாகும்.

தேங்காய் எண்ணெய் தேங்காய் எண்ணெய் ஒரு ஸ்பூன், ரோஸ் வாட்டர் ஒரு ஸ்பூன் ,தயிர் ஒரு ஸ்பூன் , இந்த மூன்றையும் நன்றாக கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவுங்கள். வாரத்தில் இரண்டு நாட்கள் இப்படி செய்வதனால் முக சுருக்கங்கள் காணாமல் போய் மென்மையான சருமம் கிடைக்கும்.

ஃபேஸ் வாஷ் முகத்திற்கு சோப்பை பயன்படுத்துவதால் முகம் நாளடைவில் வறண்டுவிடுகிறது. எனவே நீங்கள் முகத்திற்கு ஃபேஸ் வாஷ் பயன்படுத்துங்கள். எண்ணெய் சருமம் உள்ளவர்கள் கண்டிப்பாக ஃபேஸ் வாஷ் அல்லது கடலை மாவு போன்ற பொருட்களை தான் முகத்திற்கு பயன்படுத்த வேண்டும்.

தேன் முகத்தை முதலில் வெதுவெதுப்பான நீரை கொண்டு கழுவிக் கொள்ளுங்கள். அதன் பிறகு தேன், கரும்பு சர்க்கரை, எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் 5 நிமிடங்கள் தேய்க்க வேண்டும். மேலும் அதிகமாக சாப்ட்டான முகம் வேண்டும் என்றால் 10 முதல் 15 நிமிடங்கள் முகத்தில் மசாஜ் செய்யலாம். பிறகு முகத்தை வெதுவெதுப்பான நீரை கொண்டு கழுவி விட வேண்டும்.

தக்காளி தக்காளி உங்களது ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல அழகிற்கும் நன்மை செய்கிறது. தக்காளியை நன்றாக அரைத்து உங்களது முகத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இது போன்று செய்வதால் உங்களது முகம் ஒரு குழந்தையின் முகத்தை போல மென்மையாக மாறிவிடும். இதனால் சரும துளைகளும் மூடிவிடும்

கற்றாழை கற்றாழை உங்களது முகத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் மருந்தாகிறது. இந்த கற்றாழையை நீங்கள் வாரத்தில் மூன்று முறை உங்களது முகத்திற்கு பயன்படுத்தலாம். கற்றாழை, தேன் மற்றும் எலுமிச்சை சாறை கலந்து முகத்தில் அப்ளை செய்ய வேண்டும். அதன் பின்னர் 10 முதல் 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி விட வேண்டும். இதன் மூலம் மென்மையான சருமம் உங்களுக்கு கிடைக்கும்.

வெதுவெதுப்பான நீர் உங்களது சருமம் மிகவும் மென்மையாக இருக்க வேண்டும் என்றால் நீங்கள் வெதுவெதுப்பான நீர் அல்லது குளிர்ச்சியான நீரில் குளிக்க வேண்டும். எப்போது சூடான நீரை சருமத்திற்கு பயன்படுத்துவே கூடாது. அது சருமத்தை வறட்சியாக்கிவிடும்.

மாஸ்சுரைசர் நீங்கள் குளித்து முடித்தவுடன் உடனடியாக உங்களது சருமத்திற்கு மாஸ்சுரைசர் பயன்படுத்த வேண்டும். மிக நீண்ட நேரம் கழித்து எல்லாம் மாய்சுரைசர் பயன்படுத்தினால் அவ்வளவாக பலன் கிடைக்காது. வறண்ட சருமம் உள்ளவர்கள் பேபி ஆயிலை பயன்படுத்தி மசாஜ் செய்யலாம்.

சன் க்ரீம் உங்களது சருமத்தை வெயில் பெருமளவில் பாதிக்கும். எனவே தினமும் வெளியில் செல்வதற்கு 15 நிமிடங்களுக்கு முன்னர் சன் க்ரீம் பயன்படுத்த மறந்துவிடாதீர்கள். சன் க்ரீம் பயன்படுத்தியதும் வெயிலில் சென்றுவிட கூடாது. மாய்சுரைசர் மற்றும் சன் ஸ்கீரின் இரண்டுமே உள்ள க்ரீம்களை வாங்கி பயன்படுத்தலாம்.

உணவுகள் ஆரோக்கியமான உணவு உங்களது சருமத்தின் ஆரோக்கியத்தை பாதுகாத்து, சருமத்தை மென்மையாக வைத்திருக்க உதவுகிறது. எனவே பச்சைக்காய்கறிகள், பழங்கள், கீரைகள், ஜூஸ் வகைகள் போன்றவற்றை சாப்பிட மறக்க வேண்டாம்.

05 1459857289 faceskin 04 1512384821

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button