மருத்துவ குறிப்பு

முட்டை சைவமா? அசைவமா? நீண்ட நாள் கேள்விக்கான விடையை கண்டுபிடிச்சாச்சு!அப்ப இத படிங்க!

இந்த உலகில் காலம் காலமாக இருக்கும் பல கேள்விகளுக்கு நம்மால் விடை கண்டறிய முடியாது. அவை என்ன தான் ஒரு எளிமையான விஷயங்களாய் தெரிந்தாலும் கூட, அதற்கான உண்மையை நம்மால் திட்டவட்டமாக சொல்லிவிட முடியாது. அது போன்ற ஒரு கேள்வி தான் முட்டை என்பது சைவமா அசைவமா என்ற ஒரு கேள்வி…!!

நமக்கு தெரிந்து முட்டையில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. வளரும் குழந்தைகளுக்கு முட்டை ஒரு ஆரோக்கியமான உணவாக உள்ளது. இது பலவகையான மேற்கத்திய உணவுகளிலும் சுவையை கூட்டுவதற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சிலர் முட்டையை அசைவம் என்று வெறுத்து ஒதுக்கிவிடுகின்றனர். அதே சமயம் சிலர் முட்டையை சைவம் தான் என்று உணவில் சேர்த்துக் கொள்கின்றனர்… உண்மையில் முட்டை என்பது சைவமா அல்லது அசைவமா என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் அனைவரும் இருக்கும். இந்த பகுதியில் முட்டை சைவமா அல்லது அசைவமா என்பது பற்றி விரிவாக காணலாம்.

தெரியாத உண்மை முட்டையை பற்றிய பல தெரியாத கருத்துக்கள் பரவி வருகின்றன. முட்டை சைவமா அல்லது அசைவமா என்ற ஒரு கேள்வி பலரிடையே உள்ளது. முட்டை ஒரு அசைவ உணவு என்று பலரும் கூறுகின்றனர். இந்த கருத்தை பலரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். ஏனென்றால் அசைவு உணவு என்று சதை அல்லது உயிர் உள்ள உணவுகளை தான் கூறுகின்றனர். ஆனால் முட்டையில் எந்த ஒரு உயிரோ அல்லது சதைப்பகுதியோ இல்லாத காரணத்தால் இது சைவ உணவு தான் என்ற ஒரு கருத்து உள்ளது.

கோழியில் இருந்து தானே வருகிறது? கோழியில் இருந்து தான் முட்டை வருகிறது. ஆனால் இது கோழியை கொன்று வருவதில்லை. மிருகங்களிடம் இருந்து பெறப்படும் அனைத்து பொருட்களுமே அசைவ உணவு கிடையாது. உதாரணமாக பால் என்பது பசுவிடம் இருந்து தான் பெறப்படுகிறது. அதற்காக பாலை நாம் அசைவம் என்று சொல்வது கிடையாது.

முட்டையின் வெள்ளை கரு முட்டையின் வெள்ளை கருவில் புரோட்டின் நிறைந்துள்ளது. ஆனால் இதில் விலங்கு செல்கள் என்பது சிறிதளவு கூட கிடையாது. இதனால் தான் முட்டையின் வெள்ளைக்கரு ஒரு சைவ உணவாகும். மேலும் முட்டையின் வெள்ளைக்கருவை கொண்டு சமைக்கப்படும் அனைத்து உணவுகளுமே அறிவியல் ரீதியாக சைவ உணவுகள் தான்.

மஞ்சள் கருவும் தான்.. ஆனால்? மஞ்சள் கருவின் பெரும்பகுதி கொழுப்பு, கொழுப்பு மற்றும் புரதம் ஆகியவற்றின் கலவை ஆகும், ஆனால் கியூம செல்களை முழுமையாக மஞ்சள் கருவில் இருந்து பிரித்தெடுக்க முடியாது என்பதால் மஞ்சள் கரு ஒரு அசைவம் ஆகும்.

கோழிக்குஞ்சு? சந்தைகளில் கிடைக்கும் பெரும்பாலன முட்டைகள் குஞ்சு பொரிக்காத தன்மை உடையவை. எனவே இதில் இருந்து கோழிக்குஞ்சுகள் வெளிவருவதற்கான சாத்தியக் கூறுகள் கிடையாது.

ஆரோக்கியம் முட்டை சைவமோ அசைவமோ ஆனால் அது ஆரோக்கியத்திற்கு மிக மிக சிறந்தது என்பதில் எந்த விதமான குழப்பமும் வேண்டாம். தொடர்ந்து முட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை காணலாம்.

கண்களுக்கு… லுடீன் மற்றும் ஸீக்ஸாக்தைன் ஆகிய கரோட்டினாய்டு பொருட்களை கொண்டிருக்கும் முட்டை கருவிழி செயலிழப்பை தடுப்பதால், உங்களுடைய கண்களுக்கு பாதுகாப்பும், ஆரோக்கியமும் கிடைக்கின்றன. இவற்றின் மூலம் கண்புரைகள் உருவாவதையும் தவிர்க்க முடியும்.

புரத சத்து உடல் உறுப்புகள் வளரவும், திசுக்களை சீரமைக்கவும் தேவையான புரதங்கள் முட்டையில் பெருமளவு நிரம்பியுள்ளன.

கால்சிய தேவை… நமது உடலின் எலும்புகள் மற்றும் பற்களின் உறுதிக்குத் தேவையான வைட்டமின் டி வேக வைத்த முட்டையில் அதிகளவு உள்ளது. இந்த வைட்டமின் கால்சியத்தை அதிகளவில் கிரகித்துக் கொள்வதால், உடலின் உறுதியும் அதிகரிக்கிறது.

தினமும் ஒரு முட்டை முட்டையிலுள்ள ஒற்றை செறிவூட்டப்படாத மற்றும் பல்படி செறிவூட்டப்படாத கொழுப்புகள், செறிவூட்டப்பட்ட கொழுப்புகளால் வரும் இதய நோய்கள், மாரடைப்பு மற்றும் இரத்தம் உறைதல் தொடர்பான பிரச்சனைகளை குறைப்பதால், தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது நல்லது என்று ஒரு ஆய்வு முடிவில் சொல்லப்பட்டுள்ளது.

கோலைன் முட்டையில் உள்ள கோலைன் என்ற பொருள் நரம்பு மண்டலம் மற்றும் இதய நரம்பு மண்டலம் ஆகியவற்றின் பிரச்சனைகளைக் குறைக்கிறது. மேலும், மூளையைக் கட்டுப்படுத்தி, அது சிறப்பாக இயங்கவும் உதவுகிறது.

நல்ல கொழுப்பு முட்டையில் நிரம்பியிருக்கும் நல்ல கொழுப்புகள், பிரச்சனைகளை உண்டாக்கும் மோசமான கொழுப்புகளை குறைக்கின்றன. மேலும், ஒன்றுக்கும் அதிகமாக சாப்பிட்டாலும் வேறெந்த விளைவுகளையும் முட்டை ஏற்படுத்துவதில்லை.

வைட்டமின் டி வைட்டமின் டி என்பது நமது உடலுக்கு தேவையான இன்றியமையாத சத்துக்களில் ஒன்றாகும். இயற்கையான முறையில் வைட்டமின் டி நிரம்பியுள்ள உணவுப் பொருளாக முட்டை உள்ளது.

மார்பக புற்றுநோய் முட்டையை தினமும் சாப்பிட்டு வந்தால் மார்பக புற்றுநோய் வருவதற்கான வாயப்புகளை குறைக்க முடியும். இது மட்டுமல்லாமல், பல்வேறு பிரச்சனைகளையும் துரத்தியடிக்கும் முட்டையை உணவின் ஒரு பகுதியாக வைத்திருக்க வேண்டியது அவசியம்.

அழகு பராமரிப்பு முடி மற்றும் நகத்தின் ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கான முக்கிய ஊட்டச்சத்துக்களான கந்தகம் மற்றும் வைட்டமின் பி12 நிரம்பியுள்ள உணவாக முட்டை உள்ளது. உங்களுக்கு முடி உதிர்வடையும் பிரச்சனை அதிகமாக இருந்தால், கந்தகம் அதிகளவு உள்ள முட்டையை சாப்பிடுங்கள் பிரச்சனை தீர்ந்துவிடும்.

உடல் எடை குறைய.. உடல் எடை குறைய சாப்பிடாமல் இருப்பது என்பது ஒரு தீர்வாக அமையாது. அதே சமயம் வழக்கத்தை விட குறைந்த கலோரிகளையே சாப்பிட வேண்டும். காலையில் ஒரு முட்டையை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கின்றன. முட்டை உடல் எடையை அதிகரிக்கும். ஆனால் காலை நேரத்தில் ஒரு முட்டையை மட்டும் சாப்பிடுவது என்பது உங்களது மற்ற உணவு தேவைகளை குறைப்பதால், உடல் எடை குறையும்.

06 1428316750 coverimage 21 1511251261

Related Articles

28 Comments

  1. முட்டை மாட்டு பால் மாட்டு இறைச்சி எல்லாமே அசைவம் சந்தேகம் இல்லை சுய அறிவாளி சொல்லுவது உண்மை

    1. Vijayai Vk Kumar கோழி வளப்பவர்கள் என்ன மதமோ அந்த மதம்…. 😆😆😆😆😆😆😅😅😅😅…….

  2. முர்த்திசுகந்திமுர்த்திசுகந்தி சுகந்தி says:

    சாப்புட்ட ரெண்டும்இல்லை

  3. என்ன தான் விளக்கங்கள் பல வைத்து முட்டையை சைவம் என வாதிட்டாலும் முன்னோர்களால் அசைவமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட முட்டையை சைவ உணவாளர்கள் ( ஒரு சிலரை தவிர்த்து) உணவில் சேர்ந்துக்கொள்ளப்போவதில்லை…

  4. Loosu pakki muddaila ujir annu illa enral kolikku mudda vaikkamal 20nal summa kidanthu kunsu porikkume muddajil ulla ujir annu than kolijin udal veppaththal kunsaka velijila varuthu nangal athika veppaththa pajan paduththi atha kondu thindurrom nijum unra pathivm pe punnakku

  5. முட்டை உயிர் கொலையில் வராது.21 நாள் அடை காத்து 18 நாளில் குஞ்சுகள் உயிர் வந்து 21 ஆம் நாள் கால்களால் உதைத்து முட்டை உடைத்து வெளியே வரும்.அதை சாப்பிடுவது தான் அசைவம்
    Zoology professor விளக்கம்

  6. பால் ஒரு சைல உணவு போலமுட்டையும் ஒரு சைவ உணவு தான் ஆகுல் எல்லா முட்டையும் சைவ உணவு இல்ல. சேவல் சேர்ந்து அதில் இருந்து வந்த முட்டையின் சிவப்பு கருவில் ஒரு சின்ன மிளகு அளவு புள்ளி இருக்கும் இந்த புள்ளிதான் கரு இது வளர்ச்சி அடைந்து குஞ்சாகவெளிவரும் பசிவப்பு கருவில் சேவல் சேராமலும் கோழிகள் முட்டை இடலாம், ஆகுல் இந்த முட்டையில் குருசு பொரிக்காது. ஆகவே இந்த முட்டையை சைவ முட்டை எனலாம் இதில் ஏதாவது விளங்காமல் இருந்தால் மிருக வைத்தியர்களிடம் விளக்கம் கேட்கலாம் பெரிய கோயில் மன்னனகளில் செலவு சுருக்கத்திற்காக தனிய லேட்டு கோழிகளை வளர்ப்பர்.உள்ள மிகுதி பாகம் குஞ்சு பிறகது ஒரு நாளைக்கு அதற்கு உணவாக மாறும் குஞ்சு பிறந்து ஒரு நாளைக்கு அதற்கு ஒரு உண தேவையில் லை

  7. இது அப்பா சைவம், அம்மா அசைவம் என்று கூறுவது போலுள்ளது. ஆனால் இப்படியும் எடுத்துக் கொள்ளலாம். எண்ணெயில் பொரித்தால், சைவம் என்றும் முட்டையிலிருந்து குஞ்சு பொரித்தால் அசைவமாகும்.

  8. பசிக்கிறவனுக்கு எது கிடைத்தாலும் அது அமுதம் தான்

  9. உயிரினங்களில் இருந்து வரும் அனைத்தும் பாலாக இருந்தாலும் முட்டையாக இருந்தாலும் அசைவம்தான்

  10. உண்மையானபதில்அசைவம்தான்கோழிஇருந்துதனேமுட்டைகிடைக்கிரதுஅல்லவகோழிஎன்பதுஅசைவம்தனேஅதில்இருந்துகிடைப்பதும்அசைவம்தான்

  11. சைவம்எனக்கு.ஏன்னாபிடித்திருப்பதால்

  12. உயிருள்ள விலங்குகளிடம் இருந்து கிடைக்கும் அனைத்தும் அசைவம் என்ற உண்மையை மறைத்து பல நூறு ஆண்டுகளாக பார்ப்பனர்கள் மாட்டு பாலை சைவம் என்று சொல்லி அதை சாப்பிட்டு முட்டை, கோழி,ஆடு மற்றும் மாடுகளை அசைவம் என்று சொல்லி வந்தனர்!
    பார்ப்பனர்கள் இப்போது முட்டையை சாப்பிட துவங்கிவிட்டனர் ஆகையால் முட்டையும் சைவ உணவுதான் என்று கூற துவங்கிவிட்டனர்! வருங்காலங்களில் கோழி,ஆடு,மாடுகளும் சைவ உணவாக மாற்றப்படவும் வாய்ப்பு இருக்கிறது!
    பார்ப்பனர்களின் அகராதியில் அவர்களுக்கு எது சாதகமோ அது நல்லது
    எது பாதகமோ அது கெட்டது!!!

  13. அசைவமே முட்டையில்ஒருஉயிர்உள்ளது

  14. கோழிய ஐயர் வளத்தா சைவம் 😅
    ஏனையோர் வளர்த்தா அசைவம் 😅😂

  15. முட்டை சமைத்தால் சைவம் சமைக்கவிட்டால் அசைவம் 🤔

  16. முட்டையில் ஒரு உயிர் உருவாகவில்லை அதானால் முட்டை சைவம் அதே முட்டையில் குஞ்சு உருவாகி இருந்தா அது அசைவம்

  17. பால் சைவம் என்றால் முட்டையும் சைவம் தான்

  18. முட்டை அசைவம் முட்டையில் உயிர் உள்ளது, பாலில் அப்படி இல்லை .முட்டையில் மீனிலும்வெடுக்குஉள்ளது.

  19. முட்டை சாப்பிட அதை சைவ பிரியர் யாரேனும் சைவமாக்கு சாப்பிபிட வழக்கு போட்டரா? நாய்ப்பீ சாப்பிட்டு வந்த கோழி மூ..முட்டைய எவன்ரா முடன் சுத்தசைக்கு என பீ பேலுமம் வாயிலால் வந்த முட்டைக்கும் புல்லு தின்ட புனித முலையால் வந்த பாலும் ஒரே புனிதத்துவம் என சொன்ன பல்கலையும் படித்து பட்டம் பெற்ற மா மேதை மூதேவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button