முகப் பராமரிப்பு

உங்களுக்கு விரைவில் தடிமனான புருவம் கிடைக்க டாப் 7 கைவைத்தியங்கள்!! தூங்கறதுக்கு முன்னாடி இத செய்ங்க!!

இப்போது தடிமனான புருவம்தான் ட்ரெண்டாகியுள்ளது. புருவம் அடர்த்தியாக இருந்தால்தான் கண்கள் மிக அழகாய் தெரியும். சிறிய கண்களுக்கும் அடர்த்தியான புருவம் மிக அழகைத் தரும். சீரான புருவம் ஒருவரின் பர்சனாலிட்டியை இன்னும் உயர்த்தும். ஒருவரின் முகத்தில் கண்களுக்கு அடுத்தபடி சட்டென்று வசீகரிப்பது புருவங்கள்தான்.

ஆனால் சிலருக்கு புருவமே இருக்காது. கண்கள் அழகாய் இருந்தாலும் புருவம் இல்லாமல் பார்க்க வயதான தோற்றத்தை தரும். இதனைப் போக்க நீங்கள் பயன்படுத்த வேண்டிய , விரைவில் பலன் தரும் டாப்10 குறிப்புகளை மட்டுமே இங்கே வழங்குகிறோம். முயற்சித்தும் பாருங்கள் .

வெங்காயச் சாறு : வெங்காயத்தை மிக்ஸியில் அடித்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள். அதனை உங்கள் புருவத்தில் தடவி காய விடுங்கள். பின்னர் அதனை துடைத்து , எலுமிச்சை சாற்றினை புருவம் மீது பூசிவிட்டு தூங்கச் செல்லுங்கள். வெங்காயச் சாற்றுடனும் அப்படியே படுக்கச் செல்லலாம். அதனால் ஏதும் பாதகமில்லை. 10 நாட்களில் மாற்றம் தெரியும்.

நன்மைகள் : வெங்காயத்திலுள்ள செலினியம், மினரல், விட்டமின் பி, சி, ஆகியவை கூந்தல் வளர்ச்சிக்கு உதவுகிறது. முக்கியமாக வெங்காயத்திலுள்ள சல்ஃபர் வேகமாக முடி வளர்ச்சியை தூண்டுவதால், விரைவில் அடர்த்தியான புருவம் கிடைக்கும்.

எலுமிச்சைத் தோல் : எலுமிச்சைத் தோலை துருவி வெயிலில் காய வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு கிண்ணத்தில் தேங்காய் எண்ணெய் 1ஸ்பூன், விட்டமின் ஈ கேப்ஸ்யூல் மற்றும் அரை ஸ்பூன் காய்ந்த எலுமிச்சை தோல் போன்றவற்றை கலக்கி ஒரு பாட்டில் சேகரித்துக் கொள்ளுங்கள். தினமும் இரவில் இதனை மஸ்கார பிரஶ் கொண்டு புருவம் மற்றும் கண்ணிமைகளில் தேய்த்திடுங்கள்.

நன்மைகள் : எலுமிச்சை தோல் முடியை நன்றாக வளர்த்தூண்டும். விட்டமின் ஈரப்பதத்தை அளிக்கிறது. தேங்காய் எண்ணயும் முடி வளர்ச்சியை வேகமாக்கும். இந்த குறிப்பை தினமும் பயன்படுத்தினால் ஒரே வாரத்தில் நல்ல மாற்றம் காணலாம்.

வெந்தயம் : வெந்தயத்தை ஊற வைத்து அதனை நைஸாக அரைத்துக் கொள்ளுங்கள். இரவுகளில் இதனை புருவத்தில் பூசி 15 நிமிடம் கழித்து கழுவுங்கள். இப்படி தினமும் செய்ய வேண்டும்.

நன்மைகள்: அடர்த்தியான கூந்தலுக்கு பெஸ்ட் சாய்ஸ் வெந்தயம்தான். அவ்வகையில் புருவத்தை விரைவில் அடர்த்தியாக்கும். இது முடி செல்களை மீண்டும் உருவாக்கும். சொட்டையான புருவத்திற்கு சிறந்த தீர்வாக இருக்கும்.

விளக்கெண்ணெய் : இரவில் தூங்குவதற்கு முன் விளக்கெண்ணெயை சூடு படுத்தி அதில் கருவேப்பிலை பொடியை சேருங்கள். வாசம் பரவியதும், அடுப்பை அணையுங்கள். பின் வெதுவெதுப்பானதும் இதனை புருவங்களில் தடவி லேசாக மசாஜ் செய்யுங்கள். மறு நாள் கழுவிக் கொள்ளலாம்.

நன்மைகள் : இது மிகவும் பழங்கால முதல் பின்பற்றப்படும் குறிப்பு, நல்ல பலனைத் தரும். விளக்கெண்ணெயில் உள்ள புரதம், அமினோ அமிலங்கள் முடி செல்களுக்கு போஷாக்கு அளித்து தூண்டுகிறது. விரைவில் புருவ முடி உதிர்வதை தடுக்கிறது.

வாசலின் : வாசலின் அரை ஸ்பூன் அளவு எடுத்து அதனுடன் 2 ஸ்பூன் அளவு ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை புருவங்கள் மீது தடவி லேசாக மசாஜ் செய்யவும். மறு நாள் காலையில் கழுவிக் கொள்ளலாம்.

நன்மைகள் : வாசலின் ஈரப்பதத்தை தருகிறது. உங்கள் கூந்தலில் பொடுகிருந்தால் உங்கள் புருவ வளர்ச்சியை பாதிக்கும். காரணம் சின்ன சின்னதாய் வெள்ளைத் துகள்கள் உங்கள் புருவங்கள் மீது படிந்திருக்கும். இந்த பாதிப்பை போக்க வாசலின் உதவுகிறது. இதனால் தடைபட்ட புருவ வளர்ச்சி நன்றாக வளரும்.

கற்றாழை : கற்றாழை ஜெல்லை அரை ஸ்பூன் அளவு எடுத்து அதில் சம அளவு விளக்கெண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்றாக கலக்குங்கள். இதனை புருவத்தில் தடவி சில நிமிடங்கள் மசாஜ் செய்யவும். பின்னர் அரை மணி நேரம் கழித்து கழுவுங்கள்.

நன்மைகள் : கற்றாழையில் ஆன்டி ஆக்ஸிடென்ட் மற்றும் விட்டமின் ஈ இருப்பதால் முடி வளர்ச்சி அதிகம் தூண்டுகிறது. அதனுடம் விளக்கெண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் சேர்த்து கலக்கும்போது ஓரிரு வாரத்தில் அடர்த்தியான புருவம் கிடைக்கும்.

தேங்காய் பால் : நல்லெண்ணெய் அரை ஸ்பூன் எடுத்து அதே அளவு தேங்காய் பால கலந்து புருவத்தில் தடவி மசாஜ் செய்யுங்கள். காய்ந்ததும் கழுவ வேண்டும். தினமும் இரவில் செய்ய வேண்டும்.

நன்மைகள் : உடல் சூட்டினால் புருவ அடர்த்தி குறைய ஆரம்பிக்கும். தேங்காய் பால் மற்றும் நல்லெண்ணெய் உடல் சூட்டை குறைக்கும். அதோடு முடி வளர்ச்சியையும் அதிகரிக்கச் செய்யும்.

cover 07 1512629730

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button