தலைமுடி சிகிச்சை

உங்க சரும மற்றும் கூந்தல் பிரச்சனைகள் அனைத்தையும் போக்க இந்த பொருள் போதும் தெரியுமா?முயன்று பாருங்கள்……

நாம் அன்றாடம் பயன்படுத்தும் சில பொருட்களின் நன்மைகள் முழுமையாக நமக்கு தெரியாமலேயே போய்விடுகிறது. நமது வீட்டிலேயே இவை இருப்பதால் இவற்றின் அருமைகளை பற்றி நாம் தெரிந்து கொள்ளாமல் இருக்கிறோம். தேங்காய் எண்ணெய் நமது அன்றாட வாழ்க்கை முறையில் ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ளது.

நீங்கள் தினசரி தேங்காய் எண்ணெய்யை சமைப்பதற்கு, உடலுக்கு மற்றும் தலைக்கு பயன்படுத்தினால் ஆரோக்கியமான வாழ்க்கையுடன் அழகான வாழ்க்கையையும் வாழலாம். இந்த பகுதியில் தேங்காய் எண்ணெய்யின் நன்மைகள் பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.

தோல் நோய்களுக்கு தேங்காய் எண்ணெய்யை கருஞ்சீரகத்துடன் அரைத்து உடம்பில் தேய்த்து குளித்தால் தோல் நோய்கள் நீங்கும். கேசத்திற்கு ஊட்டமும், வளர்ச்சியும், குளிர்ச்சியும் கொடுக்கிறது.

உடல் ஆரோக்கியம் தேங்காய் எண்ணெய்யை உணவு சமைக்க பயன்படுத்தி வந்தால் உங்களது சருமம் பொலிவடைவதோடு உங்களது உடல் ஆரோக்கியமும் மேம்படும்.

முடி பராமரிப்பு: வறட்சியான தலைமுடி, அடிக்கடி கொட்டுதல், முடி உடைதல் போன்ற பிரச்னைகளை தேங்காய் எண்ணெய் எளிதாக சரிசெய்கிறது. தினமும் 15 நிமிடம் தலைமுடியில் தேங்காய் எண்ணெய் தடவி, ஊறவைத்து, தலைக்கு குளித்தால், மிகப்பெரிய பலன் கிடைக்கும்.

பொடுகு தொல்லை: பொடுகு இருப்பதாக வருத்தம் வேண்டாம். தலைமுடி வேரில் படும்படி, நன்கு தேங்காய் எண்ணெயை ஊற்றி, சில நிமிடங்கள் மசாஜ் செய்துவிட்டு, தினசரி தலைக்குக் குளித்து பாருங்கள். பொடுகுத் தொல்லை முற்றிலுமாக குணமாகும்.

முடிசிக்கல்: தலைமுடி சிலருக்கு வறட்சியாக காணப்படும். இந்த சிக்கலை எடுக்கும் போது தலைமுடி அதிகமாக உதிரும். தலைமுடி அடிக்கடி சிக்கல் விழும் பிரச்னை தீர, தேங்காய் எண்ணெய் சிறப்பான பயன் தரும்.

கண்ணிமைகளை பாதுகாக்க: கண்ணிமைகளுக்கு செய்யப்படும் மை பூச்சு உள்ளிட்ட பல வகை மேக் அப் ரசாயனங்களை எளிதில் அகற்ற, தேங்காய் எண்ணெய் உதவுகிறது.

முகம் பொலிவுபெற: மேக் அப் செய்யும் முன்பாக, சில துளிகள் தேங்காய் எண்ணெய்யை, கன்னம், கண்ணின் அடிப்பகுதியில் தடவுங்கள். பின்னர் மேக் அப் போட்டுப் பாருங்கள்.

சரும வறட்சி நீங்க: கை, கால், பாதம், முகம், தலை, கழுத்து, உதடு உள்ளிட்ட இடங்களில் ஏற்படும் வறட்சி, தோல் வெடிப்பு பிரச்னைகள் நீங்க இரவு தேங்காய் எண்ணெய் தடவிவிட்டு, உறங்குங்கள். விடிந்தால், வறட்சி, வெடிப்பு பிரச்னைகள் மறைந்திருக்கும்.

உதட்டை பராமரிக்க: லிப்ஸ்டிக், வெண்ணெய் போன்றவற்றை விட, தேங்காய் எண்ணெய் உதட்டுக்கு தடவினால், நாள் முழுவதும் வறட்சியில் இருந்து உதடுகளை பாதுகாக்கலாம்.5 09 1512817698

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button