சரும பராமரிப்பு

சாம்பலில் வெண்ணெய் கலந்து இந்த இடத்தில் தேய்த்தால் என்ன நடக்கும் தெரியுமா..?அப்ப இத படிங்க!

துளசி இலைகளோடு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி உங்க பக்கமே வராது..
நெஞ்சு சளி கோர்க்காமல் இருக்க..(குறிப்பாக குழந்தைகளுக்கு)தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆற வைத்து நெஞ்சில் தடவினால் சளி குணமாகும்.

வாய் நாற்றம் அடிக்கிறதா..? கவலை வேண்டா..
சட்டியில் படிகாரம் போட்டுக் காய்ச்சி ஆறவைத்து, அதனை ஒரு நாளைக்கு மூன்று முறை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும். வாயில் உற்பத்தியான கிருமிகள் அழியும்

தீப்புண்
வாழைத் தண்டை நன்றாக நெருப்பில் வாட்டி அதன் சாம்பலை தேங்காய் எண்ணெய்யில் கலந்து தடவி வந்தால் தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.

உதட்டு வெடிப்பு..?
கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தேய்த்து வந்தால் உதட்டு வெடிப்பு குணமாகும்

அஜீரணம் இது இன்று நிறைய பேருக்கு உள்ளது..
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் ஆகிய மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடித்தால் அஜீரணம் ஒரு நிமிடத்தில் குணமாகும்

வாயுத் தொல்லை நீங்க..
வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். அத்துடன் ஆறாத வயிற்றுப்புண்ணும் நீங்கும். இயற்கையாகவே வேம்பு நல்லது

பித்த வெடிப்பு குணமாக..
கண்டங்கத்திரி சாற்றை ஆலிவ் எண்ணெய்யில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு காணாமல் போகும்

சரும நோய், பலருக்கு உண்டு..
ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வந்தால் சரும நோய் குணமாகும்,சருமம் தொடர்பான கிருமிகள் அண்டவே அண்டாது201707031026277187 lips care tips SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button