உடல் பயிற்சி

தினசரி உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் ஆரோக்கிய பலன்கள்

தினசரி உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் ஆரோக்கிய பலன்கள்
தினசரி நாம் உடற்பயிற்சி செய்வதன் மூலம் நமது சோம்பேறித்தனம், சோர்வு போன்றவற்றை முறித்து புத்துணர்வு பெற இயலும்.  நல்ல உடல் ஆரோக்கியம் பெற தினசரி உடற்பயிற்சி செய்வது நல்லது மற்றும் உடற்பயிற்சியின் மூலமாக நாம் பல்வேறு நன்மைகளை அடையலாம்.தினசரி உடற்பயிற்சி செய்வதன் மூலமாக கட்டுக்கோப்பான உடல் அமைப்பு பெறலாம். அதனால் தினசரி 30 நிமிடமாவது உடற்பயிற்சி மேற்கொள்வது மிகவும் அவசியம் ஆகும். உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடல் சோர்வு குறைவதினால் நாம் தினசரி செய்யும் வேளைகளில் அதிகளவில் ஈடுபட முடியும்.உடற்பயிற்சி தினசரி செய்வதன் மூலம் நமது வாழ்நாளை அதிகரிக்க முடியும் என ஆய்வுகள் தெரிவிக்கிறது. உடலும் மனமும் வலுப்பெறுவதினால் நமது வாழ்நாள் தானாகவே அதிகரிக்கிறது. அதனால் தினமும் கட்டாயம் தவறாது உடற்பயிற்சி செய்யுங்கள்.உடற்பயிற்சி செய்வதன் மூலம் தேவையற்ற கொழுப்பு கரைந்து நமது தசைகள் வலுப்பெறுகின்றன. தினசரி உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து நல்ல கொழுப்புகளை சீரமைக்கிறது மற்றும் இரத்தத்தில் உள்ள கொழுப்பு சத்துக்களையும் சரி செய்கிறது. உடற்பயிற்சி செய்வதன் காரணமாக மூளையில் புதிய செல்கள் வளர தூண்டுகிறது.

இதன் மூலம் நமது ஞாபக சக்தி அதிகரிக்கிறது. உடற்பயிற்சி மன அழுத்தத்தை வெகுவாக குறைக்கிறது.  பல்வேறு காரணங்களால் அலுவலகத்திலும், வீட்டிலும் நமக்கு மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உண்டு. இதை தவிர்க்க உடற்பயிற்சி செய்வது ஓர் நல்ல வழியாகும்.

உடலில் தங்கி கொழுப்பாக மாறும் தேவையற்ற கலோரிகளை உடற்பயிற்சி செய்வதின் மூலம் எரிக்க இயலும். இதனால் உடல்நலம் ஆரோக்கியமடையும். உடற்பயிற்சி செய்வதன் மூலம் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும். இதன் மூலம் நமது உடல் பன்மடங்கு ஆரோக்கியம் அடையும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button