30.8 C
Chennai
Monday, May 12, 2025
1 23 1514019873
சரும பராமரிப்பு

குளிர் காலத்தில் சருமம் வறட்சியடையாமல் இருக்க சூப்பர் டிப்ஸ்…..

குளிர் காலத்தில் நம்முடைய சருமம் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகின்றது. அத்தகைய பாதிப்பில் இருந்து நம்முடைய சருமத்தை பாதுகாக்க நாம் பல்வேறு வழிமுறைகளை கையாளுகின்றோம். பல்வேறு பொருட்களை பயன்படுத்துகின்றோம். அந்த பொருட்கள் இயற்கையானவையாக இருந்தால் அதனால் ஏற்படும் பலன்களும் மிக அதிகம். அத்தகைய இயற்கையான பொருட்களில் ஆலிவ் எண்னெய் மிகவும் குறிப்பிடத்தக்கது. ஆலிவ் எண்ணெய் மிகவும் மதிப்பு வாய்ந்த இயற்கை மூலப்பொருளாக உள்ளது, இது தோல் சம்பந்தப்பட்ட பல்வேறு பிரச்சினைகளை தீர்க்க பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்படுகின்றது. இந்த ஆலிவ் எண்ணெயில் பைட்டோஸ்டெரோல்ஸ், பாலிபினோல்ஸ் மற்றும் வைட்டமின் இ போன்ற பவ்ல்று சக்தி வாய்ந்த ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளது. இவை அனைத்தும் நம்முடைய சருமத்தை மேம்படுத்த உதவுகின்றது.

இந்த இயற்கையான ஆலிவ் எண்ணெயை நாம் ஆண்டு முழுவதும் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், குளிர்காலத்தில் நமக்கு ஏற்படும் பல்வேறு சரும பிரச்சனைகளை சமாளிக்க இது மிகவும் உதவுகின்றது. ஆலிவ் எண்ணெயின் மிக முக்கியமான நன்மை என்னெவெனில் இது உங்களுடைய தோலிற்கு ஊட்டச்சத்து அளித்து அது எல்லா நேரங்களிலும் ஈரப்பதத்துடன் இருப்பதை உறுதி செய்கின்றது. ஆலிவ் எண்ணெயின் பலன் அபரிமிதமாக இருந்தாலும், அதை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். இதை குளிர்கால சரும பராமரிப்பிற்கு பயன்படுத்த மிக எளிமையான வழி அதை நாம் படுப்பதற்கு முன் சருமத்தில் மிருதுவாகத் தடவி மெல்ல மசாஜ் செய்ய வேண்டும். எனினும், இந்த இயற்கையான எண்ணெயை குளிர் காலத்தில் பல்வேறு வகைகளில் பயன்படுத்தி நம்ப முடியாத பலன்களைப் பெற இயலும். இங்கே நாங்கள் உங்களுக்கு உதவும் நோக்கில் ஆலிவ் எண்ணெயை சருமப் பாதுகாப்பிற்காக பயன்படுத்தும் முறைகளை பட்டியலிட்டுள்ளோம். இவற்றை முயற்சி செய்து உலர் தோல் மற்றும் குளிர்காலத்தில் ஏற்படும் சருமப் பிரச்சனைகளை தவிர்த்திடுங்கள்.

ஆலிவ் எண்ணெய் + தேன் தேன் மற்றும் ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றின் கலவை உங்கள் தோலுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது உங்களுடைய சருமத்தை பளபளப்பாகவும் அழகாகவும் வைத்திருக்க உதவும்.

தயாரிப்பு முறை: – தேன் மற்றும் ஆலிவ் எண்ணெய் ஒவ்வொன்றையும் 1 டீஸ்பூன் எடுத்து நன்கு கலக்கவும். – இந்தக் கலவையை உங்களுடைய முகத்தில் மிருதுவாகத் தடவி அதை அப்படியே 10 நிமிடங்களுக்கு விட்டு விடவும். – அதன் பின்னர் உங்களுடைய முகத்தை தண்ணீர் கொண்டு நன்கு துடைக்கவும். – மிகச் சிறந்த பயனுக்கு இந்த முகப்பூச்சை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தவும்.

ஆலிவ் எண்ணெய் + வாழைப்பழம் ஆலிவ் எண்ணெயில் உள்ள தோல்-ஆதாய பண்புகள் மற்றும் வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் B6 ஆகிய இரண்டும் இணைந்து உங்களுடைய சருமத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. மேலும் இது உங்களுடைய தோலை நன்கு வளர்க்கிறது மற்றும் அது நன்கு ஈரப்பதமாக இருப்பதை உறுதி செய்கிறது.

தயாரிப்பு முறை: – ஒரு பழுத்த மற்றும் நன்கு கனிந்த வாழைப்பழத்தை நன்றாக நசுக்கி அதை 1 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயுடன் கலக்கவும். – அதன் பின்னர் இந்தக் கலவையை முகம் மற்றும் கழுத்தில் தடவிய பின்னர் சுமார் 20 நிமிடங்களுக்கு அதை அப்படியே விட்டு விடுங்கள். – அதன் பின்னர் உங்களுடைய முகத்தை தண்ணீர் கொண்டு நன்கு துடைக்கவும் – வாராந்தோறும் இந்த முகப்பூச்சை பயன்படுத்தி உங்களுடைய சருமத்தை பளபளப்பாக மாற்றுங்கள்.

ஆலிவ் எண்ணெய் + வெந்தயம் விதைகள் இந்த குறிப்பிட்ட கலவை பல ஆண்டுகளாக மிகவும் புகழ் பெற்றுள்ளது. குளிர்காலத்தில் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் கோடுகள் போன்றவற்றை போக்க இது மிகவும் பயனுள்ளதாக விளங்குகின்றது.

தயாரிப்பு முறை: – முதல் நாள் இரவு ஒரு கிண்ணம் தண்ணீரில் ஒரு கைப்பிடி வெந்தயம் விதைகளை ஊற வைக்கவும். மறுநாள் காலையில் அதை நன்கு கழுவிய பின்னர் அவற்றை வேகவைக்கவும். – அதன் பின்னர இதை 1 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயுடன் நன்கு கலந்து பேஸ்ட் போன்று செய்து கொள்ளவும். – உங்கள் தோல் மீது இந்தக் கலவையை தடவி மசாஜ் செய்யவும். அதன் பின்னர் அந்தக் கலவையை 5 நிமிடங்களுக்கு விட்டு விடவும். – உங்கள் முகத்தை ஒரு மிருதுவான பேஸ் வாஸ் மற்றும் சுத்தமான தண்ணிர் கொண்டு நன்கு கழுவவும்.

ஆலிவ் எண்ணெய் + முட்டையின் வெள்ளைக்கரு இந்த இயற்கையான ஆலிவ் எண்ணெய் மற்றும் முட்டை முகப்பூச்சு உங்களுடைய தோலை இறுக்கி, குளிர்காலத்தில் உங்களுடைய தோல் தளர்ச்சி அடையாமலும் வயதாகாமலும் தடுக்க உதவுகின்றது

தயாரிப்பு முறை: – ஒரு கிண்ணத்தில் முட்டையின் வெள்ளைக்கருவை போட்டு, அதனுடன் 1 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயைச் சேர்க்கவும். – இந்தக் கலவையை நன்கு கலக்கி ஒரு மென்மையான பேஸ்டாக மாற்றவும். – இந்தக் கலவையை உங்கள் முகம் மற்றும் கழுத்து முழுவதும் மெதுவாகத் தடவவும். -சுமார் 10 நிமிடங்கள் வரை அதை அப்படியே விட்டு விடவும். – ஒரு லேசான பேஷ்வாஸ் மற்றும் சுத்தமான தண்ணீர் கொண்டு கழுவவும். – மிகப் பெரிய பலன்களைப் பெற வாராந்திர அடிப்படையில் இந்த முகப்பூச்சைப் பயன்படுத்தவும்.

ஆலிவ் எண்ணெய் + அவகோடா இந்த ஆலிவ் எண்ணெய் மற்றும் அவகோடா முகப்பூச்சு குளிர்காலத்தில் உங்களுடைய சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகின்றது.

தயாரிப்பு முறை: – அவகோடா பழத்தை 2 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயுடன் நன்கு கலக்கவும். – இந்தக் கலவையை உங்களுடைய முகத்தில் நன்கு தடவவும். அதன் பின்னர் சுமார் 10 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விடவும். – அதன் பின்னர் சுத்தமான தண்ணீரைப் பயன்படுத்தி நன்கு கழுவவும். – இந்த முகப்பூச்சை ஒரு மாதத்திற்கு குறைந்தது 2-3 முறை பயன்படுத்தி நல்ல பலன்களைப் பெறவு

ஆலிவ் எண்ணெய் + கிளிசரின் இந்த ஆலிவ் எண்ணெய் மற்றும் கிளிசரின் கலவை, குளிர்காலத்தின் போது உங்கள் தோலின் மீது தோன்றும் வெடிப்புகளை சீராக்கி உங்களுடைய சருமத்தை பாதுகாக்க உதவுகின்றது.

தயாரிப்பு முறை: – 1 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயுடன் ½ தேக்கரண்டியை கிளிசரினை சேர்க்கவும். – உங்கள் முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் இதை தடவவும். அதன் பின்னர் அதை சுமார் 10 நிமிடங்கள் வரை அப்படியே விட்டு விடவும். – அதன் பின்னர் சுத்தமான தண்ணீரில் முகத்தை நன்கு கழுவவும். – இந்த கலவையை ஒவ்வொரு மாதமும் பயன்படுத்தி நல்ல பலன்களைப் பெறவும்.

ஆலிவ் எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் : ஆலிவ் எண்ணெயின் நற்பண்புகள் மற்றும் வைட்டமின் ஏ அதிக அளவு உள்ள பாதாம் எண்ணெய், மற்றும் கடலை மாவில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் ஆகிய அனைத்தும் இணைந்து குளிர்காலத்தில் உங்களூடைய தோல் மாசுபடுவதை தடுக்கின்றது.

தயாரிப்பு முறை: – 1 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய், 1 டீஸ்பூன் பாதாம் எண்ணெயுடன் ½ தேக்கரண்டி கடலை மாவு கலக்கவும். – இந்தக் கலவையை உங்கள் தோல் மீது மிகவும் மிருதுவாக மசாஜ் செய்யவும். – இந்தக் கலவையை சுமார் 10-15 நிமிடங்கள் ஊறவைத்த பின்னர் நல்ல தண்ணீரில் கழுவ வேண்டும். – இந்த முகப்பூச்சை குறைந்தது ஒரு வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்தவும்.

1 23 1514019873

Related posts

கன்னங்களின் அழகு கெடாமல் இருக்க

nathan

உலகிலேயே அதிக இளமையும் ஆயுளும் பெற்றவர்கள் இவர்கள் தானாம்.யார் இவர்கள்?

nathan

திராட்சைகளையும் அழகை மெருகூட்ட பயன்படுத்தலாம்

nathan

தழும்பை மறைய வைக்க

nathan

இளம் வயதில் முகத்தில் சுருக்கம் இதோ சில குறிப்புகள்

nathan

சருமத்திற்கு சில எளிய வீட்டு பராமரிப்பு முறை!…

sangika

சரும வறட்சியைத் போக்கும் இயற்கை லோசன்கள்

nathan

சரும பிரச்சனைகளை தீர்க்க

nathan

ஸ்ட்ராபெர்ரியும் தயிரும் உங்கள் முகத்திற்கு என்ன செய்யும்?

nathan