தலைமுடி சிகிச்சை

உங்களுக்கு தலை சொட்டையாகிவிடுமோ என்ற கவலையா? இதை முயன்று பாருங்கள்

தலைமுடி பிரச்சனையா? கவலை வேண்டாம் இந்த பிரச்சனை உங்களுக்கு மட்டுமே இல்லை.. 35 மில்லியன் ஆண்கள் மற்றும் 21 மில்லியன் பெண்களும் இந்த தலைமுடி உதிர்வு பிரச்சனையால அவதிப்பட்டு வருகின்றனர். இந்த தலைமுடி பிரச்சனைகளுக்காக நீங்கள் காஸ்மெட்டிக்ஸ் பொருட்களின் உதவியை நாடுவது என்பது அவ்வளவு நல்லது அல்ல… கெமிக்கல் நிறைந்த காஸ்மெட்டிக் பொருட்களால் உங்களது தலைமுடி பிரச்சனைகள் அதிகரிக்க தான் செய்யும்.

அதனால் தான் நீங்கள் கண்டிப்பாக இயற்கை பொருட்களின் உதவியை நாட வேண்டியது அவசியமாகிறது. இந்த இயற்கை பொருட்களானது உங்களது தலைமுடிக்கு ஆரோக்கியத்தையும், ஊட்டத்தையும் அளிக்க கூடியவையாக இருக்கிறது. எனவே நீங்கள் இயற்கை பொருட்களை கூந்தலுக்கு பயன்படுத்துவதன் காரணமாக உங்களது கூந்தல் பிரச்சனைகள் அனைத்தையும் தீர்க்கலாம்.

1. கறிவேப்பில்லை
தேங்காய் எண்ணெய் கெமிக்கல்களால் உண்டான பாதிப்பை தீர்த்து வைக்க உதவியாக இருக்கிறது. மேலும் கூந்தல் ஆரோக்கியத்திற்காக பெரும்பான்மையானோர் பயன்படுத்துவது இந்த தேங்காய் எண்ணெய்யை தான்… கறிவேப்பில்லையை நாம் உணவில் சேர்பதற்கு முக்கிய காரணமே கருமையான, ஆரோக்கியமான முடி வளர்ச்சி வேண்டும் என்பதற்காக தான்.. இந்த கறிவேப்பில்லை கூந்தலுக்கு கருமை நிறத்தை கொடுக்கிறது. கூந்தல் செழிப்பாக வளர தகுந்த ஊட்டச்சத்துக்களை தருகிறது.

தேவையான பொருட்கள் 8 – 10 கறிவேப்பில்லை தேங்காய் எண்ணெய் – அரை கப்

செய்முறை முதலில் தேங்காய் எண்ணெய்யை ஒரு கடாயில் ஊற்றி சூடாக்க வேண்டும். பின்னர் கறிவேப்பில்லையை சூடான எண்ணெய்யில் போட்டு கருப்பாகவும் வரை வைத்திருக்க விட வேண்டும். அதன் பின்னர் தேங்காய் எண்ணெய்யை குளிர வைத்து, அதனை வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த எண்ணெய்யை தலைக்கு குளிப்பதற்கு முன்னால், தலையில் போட்டு நன்றாக மசாஜ் செய்து பின்னர் மையில்ட் ஷாம்பு போட்டு நன்றாக அலச வேண்டும்.

2. துளசி மற்றும் வெந்தயம் துளசியின் நறுமணமானது உங்களுக்கு இருக்கும் மன இறுக்கத்தை சரி செய்ய கூடிய வலிமை கொண்டது. துளசி தனது மருத்துவ தன்மையால், மன அழுத்தத்தை போக்க கூடியது என்று அனைவராலும் அறியப்படுகிறது. துளசி எண்ணெய் உங்களது கூந்தலை வலிமையாக்க பயன்படுத்தப்படுகிறது. இது முடி உதிர்வதை தடுக்கவும். உங்களது முடி நரைப்பதை தடுக்கவும் பெரிதும் உதவுகிறது. மேலும் இது இரத்த ஓட்டத்தை அதிகரித்து, உங்களது தலைமுடி வறட்சியடையாமல் பாதுகாக்கிறது. இந்த எண்ணெய்யை நீங்கள் வீட்டிலேயே மிக எளிமையான முறையில் தயார் செய்யலாம்.

தேவையான பொருட்கள் 1-2 கொத்து துளசி (அல்லது) 10 டேபிள் ஸ்பூன் பேஸ்ட் தேங்காய் எண்ணெய் – அரைக்கப் வெந்தயம் – கால் டீஸ்பூன்

செய்முறை முதலில் நீங்கள் துளசி இலைகளை பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் தேங்காய் எண்ணெய்யை குறைந்த தீயில் வைத்து, சூடாக்க வேண்டும். தேங்காய் எண்ணெய் மிதமான சூட்டில் இருக்கும் போது அதில் அரைத்து வைத்திருக்கும் துளசி பேஸ்டை அதில் போட்டு கிளற வேண்டும். அதன் பின்னர் வெந்தயத்தையும் இந்த எண்ணெய்யில் சேர்த்து நன்றாக நுரை வரும் வரை சூடாக்க வேண்டும். இந்த கலவையை வடிகட்டி பின்னர் இதனை தலைக்கு குளிப்பதற்கு முன்பாகவோ அல்லது தினசரி எண்ணெய்யாகவோ பயன்படுத்தில் பலன் பெருங்கள்.

3. கடுகு எண்ணெய் கடுகு எண்ணெய் கடைகளில் மிக எளிதாக கிடைக்க கூடிய ஒன்று தான். நீங்கள் கடுகு எண்ணெய்யை உங்களது அருகில் உள்ள காஸ்மெட்டிக்ஸ் கடைகளிலோ அல்லது சூப்பர் மார்க்கெட்டுகளிலோ கூட வாங்கலாம். இந்த கடுகு எண்ணெய்யானது உங்களது வறட்சியான கூந்தலுக்கு மிகவும் ஏற்றதாகும். இந்த எண்ணெய் உங்களது முடியின் வேர்க்கால்களை உறுதியாக்கி, முடி உதிர்வை தடுக்க பயன்படுகிறது. இந்த எண்ணெய்யை இரவு தூங்க போகும் முன்னர் தலைக்கு நன்றாக மசாஜ் செய்து தடவிக் கொண்டு, காலையில் எழுந்து தலையை வாஷ் செய்யதால், மிக சிறந்த பலன் கிடைக்கும்.

தேவையான பொருட்கள் 1 கப் அளவு கடுகு 1 கப் அளவு பாதாம், தேங்காய் எண்ணெய், அல்லது ஆலிவ் ஆயில்

செய்முறை கடுகை நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். பாதாம், தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் இவற்றில் ஏதாவது ஒன்றை கடாயில் ஊற்றி சூடு செய்ய வேண்டும். அதன் பின்னர் அரைத்து வைத்த கடுகை இந்த எண்ணெய்யில் போட வேண்டும். இந்த எண்ணெய்யை பிரவுன் நிறத்திற்கு வந்துவிட்டால், அது தயாராகிவிட்டது என்று அர்த்தம். இதனை வடிகட்டி நீங்கள் பயன்படுத்தலாம்.

4. நெல்லிக்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் நெல்லிக்காய்யில் அதிகளவு விட்டமின் சி நிறைந்துள்ளது. மேலும் இதில் கால்சியம், பொட்டாசியம் மற்றும் இரும்பு சத்து போன்றவைகளும் உள்ளன. இந்த ஊட்டச்சத்துகள் முடியை செழிப்பாக வளர வைக்க உதவுகின்றன. இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உங்களது முடியை வலிமையாக்க உதவுகிறது. மேலும் இது முடியை கருமையாக வளர வைக்கவும் உதவுகிறது.

தேவையான பொருட்கள் 1-2 நெல்லிக்காய் சில டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்

செய்முறை நெல்லிக்காயை நன்றாக துருவி வைத்துக் கொள்ள வேண்டும். துருவிய நெல்லிக்காயை நன்றாக பிழிந்து அதில் இருந்து நெல்லிக்காய் ஜூஸை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த ஜூஸ் உடன் நீங்கள் தேங்காய் எண்ணெய்யை கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை நீங்கள் அப்ளை செய்வதற்கு முன்பாக மிதமாக சூடு செய்து கொண்டு பயன்படுத்தினால் இன்னும் சிறப்பான தீர்வு கிடைக்கும்.

5. பொன்னாங்கன்னி மூலிகைகளின் அரசன் என்று அழைக்கப்படுவது இந்த பொன்னாங்கன்னி கீரை.. இது உங்களது சருமத்திற்கும், கேசத்திற்கும் மிகவும் நல்லது. இந்த பொன்னாங்கன்னி கீரை பெரும்பான்மையான மருத்துவர்களால் அழகு பராமரிப்பிற்காக பரிந்துரை செய்யப்படுகிறது. இந்த மூலிகை ஆனது இளநரை மற்றும் சொட்டை விழுவதில் இருந்து உங்களை பாதுகாக்கிறது..

தேவையான பொருட்கள் நெல்லிக்காய் – 5 பொன்னாங்கன்னி இலைகள் – அரைக்கப் தேங்காய் எண்ணெய் – 1 கப்

செய்முறை முதலில் பொன்னாங்கன்னி கீரையை நன்றாக கழுவிக் கொள்ள வேண்டும். நெல்லிக்காயில் இருக்கும் விதைகளை சுத்தமாக நீக்கிக் கொள்ளுங்கள் பின்னர் பொன்னாங்கன்னி மற்றும் நெல்லிக்காயை ஒன்றாக போட்டு, மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய்யை நன்றாக சூடு செய்து வைத்துக் கொள்ள வேண்டும். அதில் பொன்னாங்கன்னி மற்றி நெல்லிக்காயை அரைத்து வைத்த பேஸ்டை போட வேண்டும். சிறிது நேரம் இந்த கலவையை நன்றாக கொதிக்க வைத்துக் கொள்ள வேண்டும். இந்த கலவையை வடிகட்டி பின்னர் பயன்படுத்துங்கள்.

6. செம்பருத்தி எண்ணெய் செம்பருத்தி டீ உலக அளவில் புகழ்பெற்ற ஒன்றாக இருக்கிறது. இந்த செம்பருத்தி எண்ணெய் உங்களது கூந்தலுக்கு பல நன்மைகளை கொடுக்கிறது. இதில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, விட்டமின் பி1, விட்டமின் சி மேலும் சில ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது முடி வளர்ச்சிக்கும், முடி நரைப்பதை தடுக்கவும் உதவுகிறது.

தேவையான பொருட்கள் செம்பருத்தி பூக்கள் – 5 தேங்காய் எண்ணெய் துளசி இலைகள்

செய்முறை செம்பருத்தி இதள்களை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த செம்பருத்தி விழுதுகளை கடாயில் போட்டு நன்றாக சூடுபடுத்த வேண்டும். பின்னர் இந்த கலவையில், தேங்காய் எண்ணெய்யை ஊற்றி நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும். இதில் சில துளசி இலைகளை சேர்க்க வேண்டும். வடிகட்டி இதனை பத்திரமாக ஸ்டோர் செய்து வைத்து பயன்படுத்த வேண்டும்.

c 21 1513860389

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button