சரும பராமரிப்பு

கைகள் மற்றும் கால்களின் அழகை மேம்படுத்த சூப்பர் டிப்ஸ்…..

நாம் முகத்திற்கு கொடுக்கும் பராமரிப்பின் அளவிற்கு கைகள் மற்றும் கால்களை பராமரிப்பதில்லை.. முகம் மட்டும் அழகாக இருந்தால் போதுமா? முகத்திற்கு பின்னர் பிறரது கண்களில் விழுவது உங்களது கைகளும் கால்களும் தான்.. எனவே முகத்திற்கு செய்யும் பராமரிப்பில் பாதியை ஆவது உங்களது கைகள் மற்றும் கால்களுக்கு செய்ய வேண்டியது அவசியமாகும். அவ்வாறு செய்தால் தான் உங்களது முழுமையான அழகை வெளிப்படுத்த முடியும்.

கைகள் மற்றும் கால்களை அழகுபடுத்த பார்லரில் டிரிட்மெண்டுகள் உள்ளன. ஆனால் நீங்கள் அங்கு சென்று பணம் செலவழிக்க விரும்பவில்லை என்றாலும் கூட, வீட்டிலேயே அழகை மேம்படுத்திக் கொள்ளலாம். இந்த பகுதியில் வீட்டிலேயே உங்களது அழகிய மேம்படுத்திக் கொள்வதற்கு சில குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை பயன்படுத்தி உங்களது அழகை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

 

 கருமையை போக்க
சிலருக்கு கை, கால் முட்டிகளில் கருமையான தோல்கள் இருக்கும். இது சருமத்தின் நிறத்துடன் ஒத்துப்போகாமல் காணப்படும். நீங்கள் தொடர்ந்து இந்த பகுதிகளில் எலுமிச்சப்பழ சாறை தேய்த்து சோப்பு போட்டு குளிக்க வேண்டும் நாளடைவில் கறுப்பு நிறம் போய் விடும். தோல் வறண்டும், சுருக்கம் இருந்தால் ஒலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.

நகங்களுக்கு எண்ணெய் நகங்களை வெட்டும் முன் எண்ணெய்யை தடவி விட்டு, சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால், விரும்பும் வடிவத்திலும், அழகாகவும் வெட்ட இயலும்.

பாத வெடிப்பு பாத வெடிப்பிருந்தால் பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை பெடிக்யூர் செய்து கொள்ளலாம். சொரசொரப்பான கற்களை கொண்டு பாதங்களை தேய்த்து குளித்து வந்தாலோ அல்லது ஸ்கிரப் பயன்படுத்தினாலோ உங்களது பாதங்களில் உள்ள இறந்த செல்கள் புதுப்பிக்கப்படும். பாதமும் மென்மையாக இருக்கும்.

பாதங்களுக்கு உப்பு, ஷாம்பூ, எலுமிச்சம் பழச்சாறு கலந்த வெந்நீரில் கால்களை ஊற வைத்துக் கழுவலாம். இதனால் பாதங்கள் சுத்தமாக இருக்கும். பாதங்களில் உள்ள அழுக்குகள் மற்றும் நகங்களை சுத்தமாகும். கால்களுக்கு இதமாகவும் இருக்கும்.

கால் வலியா? அதிக வேலைகள் காரணமாக கால்களில் வலி எடுத்தால் கால்களை சுடுதண்ணீரில் கொஞ்சம் உப்பு சேர்த்து ஊற வைத்து கழுவினால் கால் வலிகள் குணமாகும்.

பாத வெடிப்புகள் பாதத்தில் உள்ள வெடிப்புகள் பாதங்களை அசிங்கமாக காட்டும். மேலும் இதன் வலியாக சில தொற்றுகளும் பரவலாம். அதுமட்டுமின்றி இது வலியையும் உண்டாக்கும். பாதத்தில் உள்ள வெடிப்பு நீங்க விளக்கெண்ணை ஒரு ஸ்பூன், பன்னீர் இரண்டு ஸ்பூன், எலுமிச்சம் சாறு ஒரு ஸ்பூன் மூன்றையும் கலந்து வெந்நீரில் பத்து நிமிடம் கால்களை ஊறவிட்டு, பின்பு இக்கலவையைப் பூசிவர வெடிப்பு நீங்கும்.

மென்மையாக இருக்க வேண்டுமா? கைகள் மற்றும் கால்கள் மென்மையாக இருப்பது தான் அழகு.. ஆனால் சிலருக்கு கைகள் மற்றும் கால்கள் கடின தன்மையுடன் காணப்படும். ஆலிவ் எண்ணெயுடன் சர்க்கரை கலந்து உள்ளங்கைகளிலும் கால்களிலும் தேய்த்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால், உள்ளங்கைகள் மற்றும் கால்களில் கடினத் தன்மை மறைந்து மிருதுவாக மாறும்.

நகம் வெட்டுவதற்கு முன்பு நகங்களை வெட்டுவதற்கு முன்னால் நகங்களை மிதமான சூடுள்ள நீரில் சிறிது நேரம் ஊற வைத்து வெட்டுவதனால் மிகவும் எளிமையாக நகங்களை வெட்டலாம். அல்லது தேங்காய் எண்ணெய்யை தடவி மசாஜ் செய்து வெட்டினாலும், எளிமையாகவும், பிடித்த வடிவத்திலும் நகங்களை வெட்டலாம்.

நகம் உடைகிறதா? நகங்கள் அடிக்கடி உடைந்து போகிறவர்கள், சிறிதளவு பேபி ஆயிலில் நகங்களை மூழ்கும் படி வைத்தால், நகங்கள் உறுதியாகும். மேலும் சிறிது நேரம் பூண்டில் நகங்களை ஊற வைப்பதாலும் நகங்கள் உடைவதை தடுக்கலாம்.

உருளைக்கிழங்கு நீர் உருளைக்கிழங்கை வேக வைத்த நீரில் கைகளை ஊற வைத்து தேய்பதாலும், உருளைக்கிழங்கு தோலை கைகளின் மீது தேய்பதாலும் விரல்கள் மிருதுவாகவும் அழகாகவும் மாறும். விரல்கள் பளபளப்பாக இருக்கும்.

இதை செய்யாதீர்கள் ஈரமாக இருக்கும் போது ஷேப் செய்தால், நகங்கள் உடைவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, நகங்கள் ஈரமாக இருக்கும்போது ஷேப் செய்வதை தவிருங்கள்.

நகங்கள் பளபளக்க கிளிசரின் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து, அதை நகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், நகங்கள் பளபளப்பாக இருக்கும். அதே போல், பாதாம் எண்ணெயை நகங்களில் பூசி சிறிது நேரம் கழித்து, கடலை மாவினால் கழுவினாலும் நகம் பளபளப்படையும். மாத்திற்கு ஒரு முறை இப்படி செய்ய நல்ல பலன் கிடைக்கும்.

நகங்கள் வேகமாக வளர ஆலிவ் எண்ணெயை மிதமாக சூடுபடுத்தி அதை விரல்களில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வந்தால் நகங்கள் நன்றாக வளரும். மிதமான சூடுள்ள பாலில் பஞ்சை நனைத்து அதை வைத்து நகங்களை தேய்த்து சுத்தப்படுத்தினால், நகங்களில், காணப்படும் அழுக்குகள் நீங்கி நகங்கள் பளபளப்பாகும்.

உறுதியற்ற நகங்கள் நகங்கள் உறுதியற்று உடைவதற்கு இரும்பு மற்றும் கால்சியம் போன்ற சத்துக்குறைபாடுகளே காரணம். எனவே நகங்கள் ஆரோக்கியமாக வளர ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் உணவு வகைகளை சாப்பிட வேண்டும்.

வெள்ளரிக்காய் வெள்ளரிக்காயை அரைத்து, அத்துடன் தேன் சேர்த்து கை மற்றும் கால்களில் தடவி வர வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வந்தால், உங்கள் கை மற்றும் கால்களில் உள்ள கருமை நீங்கி பொலிவு பெறும்.

ஆலிவ் ஆயில் தினமும் ஆலிவ் ஆயில் கொண்டு கை மற்றும் கால்களை மசாஜ் செய்து வர, கருமை மறைவதோடு, சருமமும் மென்மையாக இருக்கும். இன்னும் சிறப்பான பலன் கிடைக்க ஆலிவ் ஆயிலுடன் குங்குமப்பூ சிறிது சேர்த்துக் கொள்ளுங்கள்.

இளநீர் இளநீர் கூட கை, கால்களை வெள்ளையாக்க உதவும். அதற்கு வாரத்திற்கு இரண்டு முறை அல்லது தினமும் இளநீரை கைகளில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால் விரைவில் கருமை நிறம் நீங்கும்.

எலுமிச்சை சாறு எலுமிச்சை சாற்றினை வெள்ளரிக்காய் சாற்றுடன் சேர்த்து கலந்து தடவி ஊற வைத்து கழுவ, அதில் உள்ள வெளுக்கும் தன்மையால் சருமத்தில் உள்ள கருமை மறையும்.

தயிர் தயிரும் சருமத்தில் உள்ள கருமையைப் போக்கும் தன்மை கொண்டது. இதற்கு தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் மற்றும் ஜிங்க் தான் காரணம். மேலும், தயிரை கை, கால்களுக்கு தினமும் தடவி வர, சரும வறட்சியும் நீங்கும்.

தக்காளி தக்காளியை அரைத்து அதனை கை, கால்களில் தடவி ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வருவதன் மூலம், சரும நிறத்தை மேம்படுத்தலாம்.

முட்டை உங்களுக்கு எண்ணெய் பசை சருமம் என்றால், முட்டையின் வெள்ளைக்கருவைப் பயன்படுத்துங்கள். அதுவும் வாரத்திற்கு 2 முறை முட்டையின் வெள்ளைக்கருவை நன்கு அடித்து, கை, கால்களில் தடவி உலர வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள். இதன் மூலம் சருமத்தில் உள்ள கருமை விரைவில் அகலும்.

26 1514271640 15 1465967656 1

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button