ஆரோக்கிய உணவு

உடல் சோர்வை போக்க தினமும் இதை சாப்பிடுங்க !

நமது முன்னோர்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நம்பியது பயிறு, தானியம், கம்பு, கேழ்வரகு போன்ற உணவுகள் தான். அதனால் தான் அவர்கள் தற்போதைய நோய்களை பற்றி அறியாமல், இயற்கை மரணம் அடையும் பாக்கியம் பெற்றிருந்தனர்.

வரகு உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல் சோர்வை எப்படி நீக்க முடியும், நரம்புகளின் வலிமையை அதிகரிக்க முடியும் என பார்க்கலாம்.இந்தியாவில் 3000 ஆண்டுகளுக்கு முன்பே வரகு என்ற சிறுதானியத்தை பயிர் செய்து வந்துள்ளனர். ஆங்கிலேயர் ஆட்சிக்கு பின் நமது உணவு பழக்கத்தில் மாற்றங்கள் ஏற்பட்டது.

இதன் பின் மக்களின் ஆரோக்கியத்திலும் கேடுகள் அதிகரித்தது.மொத்தமுள்ள 12 அமினோ அமிலங்களில் 11 வரகில் உள்ளது. இதைத்தான் நாம் புரதம் என கூறுகிறோம்.பயறு,பருப்புகளை உணவுகளை சேர்த்து சமைத்தால் முழு புரதசத்து உடலுக்கு கிடைக்கும்.

சிறு தானியங்களில் உள்ள காரத்தன்மை எளிதில் செரிமானாகி ரத்தத்தில் சத்துக்கள் உடனடியாக சேர உதவுகிறது.தவிர, இது மூளையின் செல்கள் சிறப்பாக வேலை செய்ய தூண்டுகிறது.உடலில் இரண்டு வகையான கிருமிகள் உயிர்வாழும். ஒன்று உடல் பாகங்களுக்கு உதவும். மற்றொன்று கேடு விளைவிக்கும்.

குடலுக்கு நன்மை தரும் நுண்ணுயிர் கிருமிகளை அளிக்காமல், மற்ற நச்சுக்களை நீக்கும் தன்மை கொண்டது வரகு.

இவை மட்டுமல்லாமல் உடல் சோர்வை நீக்குவதோடு, நரம்புகளின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் நன்மை கொண்டது வரகு.59182838

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button