சரும பராமரிப்பு

பண்டைய காலத்தில் வாழ்ந்த பெண்கள் அழகுக்காக இதெல்லாமா பயன்படுத்தியிருக்காங்க தெரியுமா?

எதிர் காலம் குறித்த சுவாரஸ்யம் எப்படி அதிகமாக இருக்கிறதோ அதே போல நாம் பார்க்காத…. வாழாத கடந்த காலம், முந்தைய காலங்கள் பற்றிய எதிர்ப்பார்ப்பும் நமக்கு அதிகமாக இருக்கும். அவர்களது வாழ்க்கை முறை, பழக்க வழக்கம் எல்லாம் எப்படியிருந்தது. இன்றைக்கு இருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சி, எண்ண மாற்றம் எல்லாம் அப்போது இருந்திருக்க வாய்ப்பில்லை அப்போது அவர்களின் வாழ்க்கை முறை…. எல்லாம் எப்படியிருக்கும் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்கு அதிகமாக இருந்திடும். இப்போது ராஜா ராணி காலத்து மக்கள் வாழ்ந்த மக்களின் வாழ்க்கையைப் பற்றி சொல்லப்போகிறோம்.

அழகு : இன்றைய பெண்கள் மட்டுமல்ல அந்த காலத்து மகாராணி கூட அழகுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள், அதை விட அவர்களும் தங்களை இளமையாக காட்டிக் கொள்ள வேண்டும் என்றே விரும்பியிருக்கிறார்கள். தொடர்ந்து அவர்களது அழகுக்காகவும்,இளமைக்காகவும் என்னென்னவெல்லாம் செய்தார்கள் என்று பார்க்கலாம்.

ரோஸ் வாட்டரில் குளியல் : சருமப் பராமரிப்பில் அவர்கள் மிகுந்த கவனம் செலுத்தியிருக்கிறார்கள், எப்போதும் இளஞ்சூடான வெதுவெதுப்பான தண்ணீரில் குளிப்பதையே வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். குளிக்கும் நீரில் ரோஜாப்பூ இதழ்களை போட்டு தான் எப்போதும் குளிக்கப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இதனால் இவர்களின் சருமம் மிருதுவாகியிருக்கிறது.

முகத்திற்கு : ராஜா வம்சத்துப் பெண்களின் முகத்தில் ஒரு தேஜஸ் தெரியும் என்பார்களே அதற்காக அந்தப் பெண்கள் நிறைய மெனக்கடல்கள் எடுத்திருக்கிறார்கள் என்பது உண்மை தான். அன்றாடம் அவர்கள் செய்த ஒரு பழக்கம் இந்த தேஜஸை கொடுத்திருக்கிறது.தினமும் தேனுடன் ஆலிவ் ஆயில் குழைத்து முகத்திற்கு பூசி வந்திருக்கிறார்கள்.

பீர் : இன்றைக்கு நம்மில் சிலர் குடிக்கும் பீர் வகைகளைக் கூட ராணிகள் தங்களின் சருமத்திற்கு பயன்படுத்தியிருக்கிறார்கள். பால் பவுடர்,முட்டையின் வெள்ளைக்கரு,எலுமிச்சைப் பழம் இவற்றுடன் மதைரா என்ற ஒரு வகை பீர் வகையுடன் கலந்து முகத்திற்கு பூசுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.

வால்நட் : வால்நட் போன்ற நட்ஸ் வகைகள் எல்லாம் இன்று தான் நாம் மிக அதிகமாக பயன்படுத்தி வருகிறோம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் பழங்க்காலத்தில் இருந்தே அரசர் அரசியர் வால் நட் அதிகமாக சாப்பிட்டிருக்கிறார்கள்.

கழுதைப் பால் : என்றும் இளமையுடன் இருக்க இதனைச் செய்திருக்கிறார்கள். கழுதைப் பாலில் குளிப்பது.அப்படி இல்லையென்றால் ஆலிவ் ஆயில், தேன் இவற்றுடன் கழுதைப் பால் கலந்து முகத்திற்கு தடவி வந்திருக்கிறார்கள்.இது என்றும் இளமையுடன் வைத்திருக்க உதவியிருக்கிறது. அதனை பல வகைகளாகவும் பயன்படுத்தியிருக்கிறார்கள். வேப்பிலையை தனியாகவும் அதனுடன் சில வகை மூலிகைப் பொருட்களையும் கலந்து பயன்படுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.இது சருமத்திற்கு மட்டுமல்ல தலைமுடிக்கும் ஆரோக்கியத்தை அளித்திடும்.

குங்குமப்பூ : சருமத்திற்கு நிறமேற்றவும், டேன் உட்பட சருமத்தில் ஏற்படுகிற பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கவும் குங்குமப்பூ பயன்படுத்தியிருக்கிறார்கள். குங்குமப்பூ விலை அதிகமாக இருந்த காரணத்தினால் அரச குடும்பத்தை சேர்த்தவர்கள் மட்டுமே பயன்படுத்தக்கூடிய பொருளாக இருந்திருக்கிறது.

நெல்லிக்கனி : ஆப்பிள் பழத்தில் கிடைக்கூடிய சத்துக்கள் எல்லாம் நெல்லியில் அடங்கியிருக்கிறது. ஆனால் நமக்கு எளிதாக கிடைக்ககூடிய ஒரு பொருளாக இருப்பதால் அதனைப் பற்றி யாருக்கும் தெரிவதில்லை. அதுவும் விலை குறைவு என்பதால் நாம் அதனை கண்டுகொள்வதும் இல்லை. ஆனால் அதில் ஏராளமான சத்துக்கள் அடங்கியிருக்கின்றன. நெல்லியை சாறெடுத்து அதனுடன் இரண்டு ஸ்பூன் எலுமிச்சையை கலந்து தலையில் தடவ வேண்டும். பின்னர் சிறிது நேரம் கழித்து தலைக்குளிக்கலாம். இதில் விட்டமின் சி நிறைய இருக்கிறது.

முல்தானிமெட்டி : ஆரம்பத்தில் அரச குலத்து பெண்கள் மட்டும் பயன்படுத்தி வர… தொடர்ந்து சாதரண பெண்களும் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். இது இயற்கையான ஸ்க்ரப்பர் மற்றும் க்ளன்சராக பயன்படுகிறது. இது எளிதாக கிடைக்கூடிய ஒன்றாகத்தான் இருந்திருக்கிறது. முல்தானி மெட்டி தூளை தண்ணீரிலோ அல்லது பாலிலோகுழைத்து முகத்திற்கு பூசி வந்திருக்கிறார்கள்.

மஞ்சள் : பாரம்பரியமாகவே மஞ்சள் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். இதில் ஏராளமான ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் நிறைந்திருக்கிறது என்பதால் சருமத்தில் ஏற்படுகிற தொற்று,பாக்டீரியா ஆகியவற்றை நீக்கிடும்.இதனால் சருமத்தில் பருக்கள் ஏற்படாமல் தவிர்க்க முடியும்

சந்தனம் : சந்தனத்தில் ஆண்ட்டி செப்டிக் துகள்கள் நிறையவே இருக்கின்றன. இதனை சருமத்தில் தடவுவதால் சருமத்திற்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் சருமம் பொலிவுடன் இருக்கும்.சந்தனத்துடன் பாலில் கலந்து முகத்திற்கு பூசி சருமத்தை அழகாக பராமரித்திருக்கிறார்கள்.

1 30 1514622751

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button