ஆரோக்கியம்கர்ப்பிணி பெண்களுக்கு

கர்ப்ப காலத்தில் ஏற்படும் சரும வரட்சியும் தீர்வுகளும்

3b226c6e3d6baf93ec9f249571720757
கர்ப்ப காலத்தில் உண்டாகிற ஹார்மோன் மாற்றங்களால் கொழுப்புக் கட்டிகள், அதிக சீபம் சுரப்பதால் சுரப்பிகள் தூண்டப்பட்டு எண்ணெய் பசையும் அதிகரிப்பதுடன், பருக்கள் வரும். கர்ப்ப காலத்தில் திடீரென கிளம்புகிற பருக்கள், தற்காலிகமானவையே. வந்த வேகத்தில் மறைந்து விடும் என்பதால் கவலை கொள்ள தேவையில்லை.
கர்ப்ப காலத்தில் ஹார்மோன் சுரப்பும் ரத்த ஓட்டமும் அதிகரிப்பதால் வழக்கத்தைவிட கர்ப்பிணிகளின் முகத்தில் அழகு கூடும். அதேநேரம் சருமத்தின் நீர்ச்சத்து குறைவதால் ஒருவித வறட்சி நிலை ஏற்படும். இக்காலங்களில் கூடியவரையில் கெமிக்கல் கலந்த எந்த அழகு சாதனங்களையும் உபயோகிப்பதைத் தவிர்ப்பது நல்லது. அத்துடன், சருமத்தின் சொரசொரப்பை நீக்க, பாலாடை தடவுவது போன்ற பாதிப்பில்லாத இயற்கை வழிகளைப் பின்பற்றலாம்.
கர்ப்ப காலத்தில் மெலனினை தூண்டும் ஹார்மோன்கள் அதிகமாகச் சுரப்பதால் நிறமாற்றங்கள் உண்டாவது இயல்பு. திருஷ்டி பொட்டு மாதிரி ஆங்காங்கே மங்கும் வரும். இந்தப் பிரச்சனையை கர்ப்ப கால முகமூடி என்றுகூட சொல்வதுண்டு. மற்ற பிரச்சனைகளைப் போலவே இதுவும் பிரசவமானதும் தானாக மறைந்து விடும். சிலர் இந்த மங்கைப் பார்த்ததும் பயந்து பியூட்டி பார்லர் போய் கெமிக்கல் பீலிங் போன்ற சிகிச்சைகளை செய்வதுண்டு. அவையெல்லாம் மிக ஆபத்தானவை.
கர்ப்ப காலத்தில் பல பெண்களுக்கு இந்தப் பிரச்சனை ஏற்படுகிறது. அடர்த்தியான கூந்தல் உள்ள பெண்களுக்கு இந்தப் பிரச்சனை வருகிறது. பிரசவமானதும் இந்த ரோமங்கள் உதிர்ந்து விடும் என்பதால் அதைப் பற்றிய பயம் வேண்டாம். ஒருவேளை பிரசவத்துக்குப் பிறகும் அது அப்படியே இருந்தால், சரும மருத்துவர் அல்லது அழகுக் கலை நிபுணரின் ஆலோசனையுடன் பாதுகாப்பான முறையில் ரோமங்களை நீக்கிக் கொள்ளலாம். கர்ப்ப காலத்தில் ரோமங்களை நீக்கும் கிரீம் உபயோகிப்பதோ, வாக்சிங் செய்வதோ வேண்டாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button