மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா மாதவிடாயை தள்ளிப் போட உதவும் இயற்கை வைத்தியங்கள்!!

ஏதாவது ஒரு சுப நிகழ்ச்சி, பண்டிகை அல்லது கோவில் குளம் போகவேண்டுமென்றால் பெண்களின் மனதில் முதலில் வருவது தங்களது மாதவிடாய்தான். அய்யயோ மாதவிடாய் ஒன்று சீக்கிரம் வந்து தொலையனுமே அல்லது தள்ளிப் போகனுமே என மனம் முழுதும் பதறியடி இருக்கும். மாதவிடாய் வருவதும் தள்ளிப் போவதும் இயற்கை கையில்தான் இருக்கிறது.

இருப்பினும் உடல் நிலையில் மற்றும் பருவ காலங்களில் ஏற்படும் மாற்றங்களால் மாதவிடாய் மாறலாம். இயற்கையாக நடக்கும் இந்த மாதவிடாயை மாத்திரைகள் கொண்டு தள்ளிப் போடச் செய்யலாம். ஆனால் அவற்றால் பாதகம் வரும் வாய்ப்புகள் நிறைய இயற்கை முறையில் மாதவிடாயை தள்ளிப் போடுவதுதான் சிறந்தது. முள்ளை முள்ளால் எடுப்பது போல், மாதவிடாயை தள்ளிப் போடும் இயற்கை வழிகளை இந்த கட்டுரையில் காணலாம்.

ஆப்பிள் சைடர் வினிகர் : ஆப்பிள் சைடர் வினிகர் இயற்கையாகவே மாதவிடாயை தள்ளிப் போடச் செய்யும். அதோடு மாதவிடாயின் போது வரும் வலியையும் குணப்படுத்தும். தேவையானவை : ஆப்பிள் சைடர் வினிகர் – 3 ஸ்பூன் நீர் – 1 கப்

செய்முறை : ஆப்பிள் சைடர்வினிகரி நீர்ல் கலந்து குடிக்க வேண்டும். மாதவிடாய் நாளுக்கு சில நாட்களுக்கு முன்னிருந்து குடிக்க ஆரம்பிக்க வேண்டும். தினமும் இருமுறை குடிக்கலாம்.

ஜெலாடின் : ஜெலடினும் மாதவிடாயை தள்ளிபோட உதவும் நல்ல மருந்தாகும். தேவையானவை : ஜெலாடின் – ஒரு பாக்கெட் வெதுவெதுப்பான நீர் – 1 கப்

செய்முறை : வெதுவெதுப்பான நீரில் ஒரு பாக்கெட் ஜெலடினை கலந்து குடிக்க வேண்டும். உங்களுக்கு உடனே மாதவிடாய் தள்ளிப் போக வேண்டுமென்றால் ஜெலடின் நல்ல மருந்தாகும். இதனை தொடர்ந்து குடிக்க வேண்டும்.

எலுமிச்சை : எலுமிச்சை சாறு மாத விடாயை தள்ளிப் போகச் செய்யும். இது உடலை குளிர்ச்சி ஆக்குகிறது. இதிலுள்ள சிட்ரிக் அமிலம் உடலில் உண்டாகும் வலிகளைப் போக்கச் செய்து, மாதவிடாயை தள்ளிப் போடச் செய்யும்.

தேவையானவை : எலுமிச்சை – 3 நீர்- 100 மி.லி சர்க்கரை – தேவையான அளவு

செய்முறை : நீரில் 3 எலுமிச்சை சாற்றினை கலந்து தேவைப்படுமெனில் சர்க்கரை சிறிது சேர்த்து குடிக்க வேண்டும், தினமும் 3 த்டவை குடிக்க வேண்டும். மாதவிடாய்க்கு மூன்று நாட்கள் அல்லது ஒரு வாரம் முன்பு முதல் குடிக்க வேண்டும்.

புளி : புளி புளிப்பு சுவையுமட்டுல்ல, மாதவிடாயையும் தள்ளிப் போகச் செய்யும் என்பது தெரியுமா?

தேவையானவை : புளி – 1 ஸ்பூன் அளவு நீர்- 250 மி.லி சர்க்கரை – 1 ஸ்பூன் உப்பு – ஒரு சிட்டிகை

செய்முறை : முந்தைய இரவில் கால் லிட்டர் நீரில் புளியை ஊற வையுங்கள். மறு நாள் ஊஅ வைத்த நீரை வடிகட்டி அதில் சர்க்கரையும் உப்பும் கலந்து குடிக்க வேண்டும். மாதவிடாய்க்கு ஒரு வாரம் முன்பிருந்து ஆரம்பியுங்கள்.

சியா விதைகள் சியா விதைகள் – 1 ஸ்பூன் நீர் – ஒரு கப்

செய்முறை : ஒரு கப் நீரில் சியா விதைகளை ஊற வைத்து இரவு முழுவதும் விடுங்கள். மறு நாள் அந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். நான்கைந்து நாட்களுக்கு முன்னால் இப்படி செய்ய வேண்டும். நல்ல பலனை தரும்.

அத்திப் பழம் : தேவையானவை : அத்திப் பழ இலைகள்- 1 கைப்பிடி நீர் – 1 கப்

தயாரிக்கும் முறை : அத்திப் பழ இலைகளை அரைத்து நீரில் கலந்து 1 ஒரு நிமிடம் வரை கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் அதனை வடிக்கட்டி குடிக்க வேண்டும்.

அதிமதுரம் : அதிமதுரம் – 4 கிராம் அரிசி வடிகட்டிய நீர் – 1 கப்

தயாரிக்கும் முறை : அதிமதுரப் பொடியை அரிசி வடிகட்டிய நீரில் கலந்து அதனை அப்படியே குடிக்க வேண்டும். மாதவிட சுழற்சிக்கு ஒரு வாரம் முன்பிலிருந்து குடிக்க வேண்டும்.

ரஸ்பெர்ரி இலைகள் : தேவையானவை : ராஸ்பெர்ரி இலைகள் – 5-6 நீர் – 1 கப்

தயாரிக்கும் முறை : நீரில் ராஸ்பெர்ரி இலைகளை கலந்து சில நிமிடங்கள் வரைகொதிக்க வைத்து பின்னர் வடிகட்டி ஆறியபின் குடிக்க வேண்டும்.

22 1513941035 16

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button