மருத்துவ குறிப்பு

5 நிமிடத்தில் வாய் துர்நாற்றத்தைப் போக்க சூப்பர் டிப்ஸ்…

என்ன தான் பிரஷ் செய்தாலும், சிறிது நேரத்திலேயே வாய் துர்நாற்றம் வீசுகிறதா? இதனால் மற்றவர்களின் அருகில் சென்று பேச தயக்கமாக உள்ளதா? தற்போது நிறைய பேர் வாய் துர்நாற்றத்தால் அவஸ்தைப்பட்டு வருகின்றனர். இதனால் தன் துணைக்கு கூட முத்தம் கொடுக்க முடியாமல் சங்கடத்திற்கு உள்ளாகின்றனர்.

இதற்கு மோசமான வாய் சுகாதாரம் ஓர் காரணமாக இருந்தாலும், நாம் உண்ணும் உணவில் உள்ள ஒருசில பொருட்களும் வாய் துர்நாற்றத்தை உண்டாக்குகின்றன. மேலும் கடைகளில் விற்கப்படும் மௌத் வாஷ்களும் எந்த ஒரு பலனும் கொடுப்பதில்லை. அப்படியே பலன் கொடுத்தாலும், அது தற்காலிக தீர்வாகத் தான் உள்ளது. ஆனால் நிரந்தர தீர்வு கிடைக்க, கீழே கொடுக்கப்பட்டுள்ள ஓர் நேச்சுரல் மௌத் வாஷைப் பயன்படுத்துங்கள். இதனால் நிச்சயம் ஓர் நல்ல தீர்வைக் காண்பீர்கள்.

தேவையான பொருட்கள்: எலுமிச்சை – 2 வெதுவெதுப்பான நீர் – 1 கப் பட்டை பொடி – 1/2 டீஸ்பூன் சோடா உப்பு – 1 டீஸ்பூன் தேன் – 1 டீஸ்பூன்

பட்டை இந்த நேச்சுரல் ஃபேஷ் வாஷில் சேர்க்கப்பட்டுள்ள பட்டை, வாயில் துர்நாற்றத்தை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழிக்கும் சக்தி கொண்டது.

தேன் தேனில் ஆன்டி-பாக்டீரியல் தன்மை உள்ளது. இதுவும் வாயில் இருக்கும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழித்துவிடும்.

பேக்கிங் சோடா பேக்கிங் சோடாவில் உள்ள ப்ளீச்சிங் தன்மை, பற்களில் இருக்கும் மஞ்சள் கறைகளை அகற்றும்.

எலுமிச்சை எலுமிச்சையிலும் ப்ளீச்சிங் தன்மை உள்ளது. அதுமட்டுமின்றி, எலுமிச்சை நல்ல நறுமணத்துடன் இருப்பதால், இது வாய் கிருமிகளை அழித்து, வாயை புத்துணர்ச்சியுடனும் துர்நாற்றமின்றியும் வைத்துக் கொள்ளும்.

தயாரிக்கும் முறை * ஒரு பாட்டிலில் எலுமிச்சை சாறு, பட்டை பொடி, சோடா உப்பு மற்றும் தேன் சேர்த்து, அத்துடன் வெதுவெதுப்பான நீரை ஊற்றி, நன்கு குலுக்க வேண்டும். * பின்பு அதில் 1 -2 டேபிள் ஸ்பூனை வாயில் ஊற்றி, ஒரு நாளைக்கு பலமுறை வாயைக் கொப்பளித்து வந்தால், வாய் துர்நாற்றம் நீங்கும்.

bad breathe 19 1476863015

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button