ஆரோக்கிய உணவு

ஆண்கள் கட்டாயம் இந்த 10 விஷயங்களுக்காக கற்றாழையை சாப்பிடவேண்டும் தெரியுமா?

இயற்கையில் நிறைய தாவரங்கள் நமக்கு பயன்படுகின்றன. ஆனால் ஒரே ஒரு தாவரம் மட்டும் எல்லாவற்றையும் விட மிகுந்த நன்மைகளை நமக்கு அள்ளித் தருகிறது. அது பயன்படாத இடமே இல்லை எனலாம். அந்த அளவுக்கு அதன் பயன்கள் நீண்டு கொண்டே செல்கின்றன.

ஆமாங்க நாம் உபயோகிக்கும் கற்றாழை தாவரம் தான் நமக்கு எண்ணற்ற நன்மைகளை பரிசளிக்கிறது. எல்லா வகையான சரும தன்மைக்கும், கூந்தல் பராமரிப்புக்கும் சிறந்தது. இது மட்டுமா நிறைய மருத்துவ குணங்களையும் தன்னுள் கொண்டுள்ளது.

இதில் ஆன்டி வைரல், பூஞ்சை எதிர்ப்பு பொருள், அழற்சி எதிர்ப்பு பொருள் என்று எல்லா பண்புகளும் இந்த ஓரே பொருளில் ஒரு சேரக் கிடைக்கின்றன. இது நமது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி உடலில் உள்ள நச்சுக்களையும் வெளியேற்றி உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.அவற்றின் பயன்களை பற்றி கீழ்க்கண்டவாறு காணலாம்

மெட்டா பாலிசத்தை அதிகரித்தல்
வேகம் குறைந்த உடல் மெட்டா பாலிசத்தால் கொழுப்புகள் நம் உடலிலே தங்கி விடுகிறது. சாப்பிடும் உணவுகள் சரியாக சீரணிக்காமல் போகிறது.ஆனால் இந்த கற்றாழை ஜெல்லில் உள்ள கால்சியம், மக்னீசியம், செலினியம் மற்றும் காப்பர் போன்ற தாதுக்கள் நமது உடல் மெட்டா பாலிசத்தை அதிகரித்து நமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கொடுக்கிறது.

நச்சுக்களை வெளியேற்றுதல்
நீங்கள் கற்றாழை ஜூஸை பருகினால் போதும் நமது உள்ளுறுப்புகளில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உடலை எளிதாக சுத்தப்படுத்துகிறது. இதனால் நமது உடல் உறுப்புகளும் நன்றாக வேலை செய்கிறது.

கீழ்வாதத்திலிருந்து காத்தல்
கற்றாழை கீழ்வாத நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளது. இதிலுள்ள அமினோ அமிலமான பிராடிகைனாஸ் மூட்டுகளில் ஏற்படும் அழற்சியை சரி செய்கிறது. மேலு‌ம் இதுள்ள சாலிசைலிக் அமிலம் மூட்டுகளில் அழற்சி உண்டாகாமல் போரிடுகிறது.

அமினோ அமிலங்களின் இருப்பிடம்
கற்றாழை நமது உடலுக்கு தேவையான 8 முக்கியமான அமினோ அமிலங்களை கொண்டு இருக்கிறது. இந்த அமினோ அமிலங்கள் கிடைத்தால் போதும் நமது உடல் எந்த வித பிரச்சினையும் இல்லாமல் செயல்படும்.

உடலின் அமிலத்தன்மையை சமப்படுத்துதல்
நாம் சில நேரங்களில் உணவு உண்ட பிறகு அமிலத் தன்மை பிரச்சினையால் அவதிப்படுவோம். அந்த நேரங்களில் இந்த கற்றாழையை பயன்படுத்தினால் போதும் இவை வயிற்றில் அல்கலைன் தன்மையை உருவாக்கி pH அளவை சமன் செய்து விடும்.

இதயத்தை பாதுகாத்தல்
தற்போது செய்த ஆராய்ச்சியை ஆராய்ந்து பார்த்தால் கற்றாழை இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கிறது. இதனால் இதயத்திற்கு தூய்மையான இரத்தம் கிடைக்கிறது. மேலும் இது இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதால் நமது இதயம் ஆரோக்கியமாக துடிக்க உதவுகிறது.

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்தல்
கற்றாழை ஜெல்லில் உள்ள பாலிசாக்ரைடுகள் மைக்ரோபேஜஸ் அதாவது இரத்த வெள்ளை உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரித்து நமது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. இதனால் நம்மால் எந்த நோயையும் எதிர்த்து போராட முடியும்.

சுற்றுப் புற சூழலுக்கு ஏற்ப உடம்பை காத்தல்
நமது உடல் சுற்றுப் புற மாற்றத்திற்கு ஏற்ப ஒத்துப் போகவில்லை என்றால் எளிதாக நோய்க் கிருமிகள் நம்மை தாக்கிவிடும். இந்த பிரச்சினையை கற்றாழை சரி செய்கிறது. இவை நமது உடலை சுற்றுப் புற காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப காக்கிறது.

உடலை கட்டுகோப்பாக வைக்க உதவுதல்
கற்றாழை நமது உடலில் உள்ள கெட்ட கொழுப்பு செல்களை கரைக்கிறது. மேலும் உடலின் மெட்டா பாலிசம் மற்றும் சீரண சக்தியை அதிகரிக்கிறது. இதனால் நம்மால் உடல் எடையை கட்டுக்குள் வைக்க முடியும். இதனுடன் உடற்பயிற்சி மேற்கொள்வது இன்னும் நன்மை பயக்கும்.

வாயின் ஆரோக்கியம்
கற்றாழை ஜூஸை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் பல் இடுக்குகளில் படிந்த கரைகள், அழுக்குகள், வாய் துர்நாற்றம் போன்றவற்றை நீக்குகிறது. மேலும் வாயில் ஏற்படும் அல்சரையும் குணப்படுத்துகிறது.p61a

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button