ஆரோக்கிய உணவு

மூல வியாதியையும், மூலச்சூட்டையும் குணப்படுத்த சூப்பர் டிப்ஸ்……

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலும் எந்த பிரச்னையும் இல்லாமல் சாப்பிடக்கூடிய பழங்களுள் திராட்சை மிக முக்கியமானது. திராட்சைக்கு ரத்தத்தில் உள்ள விஷத்தன்மையைப் போக்கும் ஆற்றலுண்டு.

அதோடு உடல் பருமன், மூலவியாதி ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் ஆற்றலும் திராட்சைக்கு உண்டு. இன்னும் ஏராளமான மருத்துவ குணங்களை உள்ளடக்கிய திராட்சையைப் பற்றி இங்கு காண்போம்.

திராட்சையில் கறுப்பு திராட்சை, பச்சை திராட்சை, பன்னீர் திராட்சை, காபூல் திராட்சை, ஆங்கூர் திராட்சை, விதையில்லா திராட்சை எனப் பல வகையுண்டு. இவை கருப்பு, பச்சை மற்றும் வயலட் கலர்களில் கிடைக்கின்றன.

தினமும் திராட்சையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அது மலச்சிக்கல் உண்டாவதைத் தவிர்க்கும். மூல வியாதியையும் மூலச்சூட்டையும் குணப்படுத்தும்.கண் பார்வை தெளிவடையும்.

உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் தினமும் திராட்சையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.பால், சர்க்கரை எதுவும் சேர்க்காமல் வெறுமனே திராட்சை ஜூஸ் மட்டும் குடித்து வந்தால், பல வியாதிகளைக் கட்டுப்படுத்த முடியும்.

இரண்டு கிளாஸ் திராட்சை ஜூஸ் ஐந்து பிளேட் பச்சை காய்கறிகள் சாப்பிடுவதற்குச் சமம்.
ரத்தம் உறைதலைத் தடுக்கக்கூடிய ஆற்றல் ஆரஞ்சுக்கு அடுத்ததாக, திராட்சையில் தான் உண்டு.
தினமும் மதிய உணவுக்குப் பின், 200 மில்லி திராட்சை ஜூஸ் குடிப்பது நல்லது.

திராட்சை ஹார்மோன்களின் வேதிவினைகளை முறையாகக் கட்டுப்படுத்தும்.இனிப்பும் புளிப்பும் கலந்த சுவையுடைய திராட்சை சாப்பிட்டவுடன் ரத்தத்தில் கலக்கக்கூடிய தன்மையுடையது.

இதில், (சதவீதத்தில்)
நீர்ச்சத்து – 85 %,கொழுப்பு – 7 %,மாவுப்பொருள் – 10 %,புரதம் – 0.03 %,பாஸ்பரஸ் – 0.02 %, இரும்புச்சத்து – 0.04 %,வைட்டமின் ஏ – 15 %,நியாசின் – 0.3 % ஆகியவை அடங்கியுள்ளன.

Related posts

உடல் எடையை குறைக்கும் ஓட்ஸ் காய்கறி சூப்

nathan

ரத்தசோகை தீர்க்கும் பசலைக்கீரை!

nathan

கட்டாயம் இதை படியுங்கள் வெந்தயத்தின் மருத்துவ பயன்கள் என்ன தெரியுமா ??

nathan