ஆரோக்கிய உணவு

இந்த காய்கறிகளின் தோல்சீவி சமைக்காதீங்க ?ஏன் தெரியுமா?..

காய்கறிகளில் நாம் சிலவற்றை அப்படியே நறுக்கி சமைத்துவிடுவோம். ஆனால் பெரும்பாலான காய்களின் தோலை நீக்கி விடுகிறோம். அதில் சில காய்கறிகளின் தோலில் தான் முழு சத்துக்களும் அடங்கியிருக்கும். அது தெரியாமலேயே நாம் அந்த காய்கறிகளில் தோலைநீக்கியே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்.அப்படி என்னென்ன காய்கறிகளின் தொலை நீக்கிவிட்டு சமைக்கக்கூடாது?

கேரட்
கேரட்டின் தோலில் பீட்டா கரோட்டீன், பீனோலிக், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளது.எனவே கேரட்டை தோலுடன் சாப்பிடுவதால், இதய நோய், புற்றுநோய், பார்வை கோளாறு போன்ற பிரச்சனைகளை தடுக்கலாம்.

வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காயின் தோலில் குறைவான கலோரி, விட்டமின் K மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், நார்ச்சத்துக்கள் போன்றவை உள்ளன.இதை தோலுடன் சாப்பிடுவதால் மலச்சிக்கல் மற்றும் குடல் புற்றுநோய் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.

பீட்ரூட்
பீட்ரூட்டின் தோலில் பீட்டா லெயின் எனும் பைட்டோ நியூட்ரியன்ட்டுகள் உள்ளதால் பீட்ரூட்டின் தோல் நீக்காமல், சிறு துண்டுகளாக நறுக்கி, அதனுடன் ஆலிவ் ஆயில் மற்றும் உப்பு சேர்த்து வேகவைத்து சாப்பிடலாம்.

உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கின் தோலில் நார்ச்சத்து, விட்டமின்கள், பொட்டாசியம், காப்பர், இரும்புச்சத்து போன்றவை அதிகமாக உள்ளது. எனவே உருளைக் கிழங்கை தோலுடன் சமைத்து சாப்பிடுவது நல்லது.

கத்திரிக்காய்
ஊதா நிறமுள்ள கத்திரிக்காயின் தோலில் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் மற்றும் ப்ளவனாய்டுகள் அதிகம் உள்ளது.எனவே இந்த கத்திரிக்காயை தோலுடன் சாப்பிடுவதால், உடல் ஆரோக்கியம் மேம்படும்.e0481b308dd846138de3988212760386

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button