ஆரோக்கியம் குறிப்புகள்

உங்களுக்கு தெரியுமா இரவு தூங்குவதற்கு முன் நீங்கள் செய்யக் கூடாதவை?

நமது உடல் அலாரத்தின் படி சரியாக உறுப்புகள் நடக்கத் தொடங்கிவிடும். ஜீரண மண்டலம் முதல் மூளை வரை எல்லாமே ஒரு ரிதத்தை தொடர்கின்றன. தூங்கும்போது மூளை தினந்தோறும் தன்னிடம் சேரும் கழிவு மற்றும் நச்சுக்களை வெளியேற்றத் தொடங்கும். இதனால் காலையில் மிகவும் புத்துணர்வாக இருக்கிறோம். காலையில் புதிதான ஆக்ஸிஜன் கிடைக்கும் போது ரத்த ஓட்டம் அதிகரித்து எல்லா உறுப்புகளும் தம்தம் வேலையை ஆரம்பிக்கின்றன. அப்படியென்றால் தூக்கம் என்பது உங்கள் அன்றாட வேலைகளை செய்ய அவசியம். குறைந்தது 7-8 மணி நேரம் அவசியம். தூங்காமல் இருப்பதால் பல பிரச்சனைகள் உண்டாகின்றன. தூக்கமின்மை ஏதோ திடீரென ஏற்படுவதில்லை. தூக்கத்தை கலைக்கும் வகையில் இடையூறு தரும்போது படிப்படியாக தூக்கம் குறிந்து இறுதியில் இன்சோம்னியா நோயால் அவதிப்படுவார்கள். உங்கல் தூக்கத்தை பாதிப்பவை எவை.

வெளிச்சம் :
தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் அறையில் இருட்டாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். வெளிச்சமிருந்தால் மெலடோனின் சுரப்பது குறைவாக இருக்கும். இதனால்தான் பகலில் தூக்கம் வருவதில்லை. தூங்கும்போது சிறிதும் லைட் வெளிச்சமில்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வெறும் ஜன்னல் வெளிச்சம் இருந்தால் போதும். அவ்வாறான சூழ் நிலையில் ஸ்ட்ரெஸ் ஹார்மோன் குறைந்து, மலடோனின் அதிகரிக்கும். நல்ல தூக்கம் கிடைக்கும்.

த்ரில்லர் படங்கள் :
இரவுகளில் த்ரில்லர் அல்லது பயங்கர சண்டையிடும் ஆக்ஷன் படங்களை பார்ப்பது தவிருங்கள். இவைகள் உங்கள் தூக்கத்தை கெடுப்பவை. இனிமையான இசையை கேட்டபின் படுக்கச் சென்றால் நல்ல தூக்கம் வரும் என கூறுகிறார்கள்.

காஃபி :
தூங்குவதற்கு முன் குறைந்தது 4 மணி நேரம் முன்பு காஃபி குடிக்கலாம். அதன் பின் குடித்தால் தூக்கம் வருவது தடைபடும் அல்லது தூங்கும் நேரம் குறைவாக இருக்கும் எனஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். ஆகவே உங்கள் நிம்மதியற்ற அல்லது அரைகுறைதூக்கத்திற்கு உங்கள் தாமதமாக குடிக்கும் மாலை நேர காஃபி பழக்கமும் காரணமாக இருக்கலாம்.

இரண்டாவது ரவுண்ட் :
இந்த கட்டுரையின் முதல் வரியில் சொன்னது போல், 10.30 – 11 மணிக்குள் உங்கள் உடல் சோர்வு ஆரம்பிக்கும். அந்த சமயங்களில் நீங்கள் தூங்காவிட்டால் மறுபடியும் கார்டிசால்(stress hormone) ஹார்மோன் இரண்டாவது ரவுண்டில் சுரக்க ஆரம்பித்துவிடும். அதன் பின் தூக்கம் வராமல் உற்சாகமாகிவிடுவீர்கள். மறுபடியும் 1.30 க்குதான் இந்த ஹார்மோன் சுரப்பது குறையும். ஆகவே உங்கள் தூக்க நேரத்தை 10.30 க்குள் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

உடற்பயிற்சி :
குறைந்தது தூங்குவதற்கு 2 மணி நேரம் முன்பு உடற்யிற்சி செய்யக் கூடாது. இது உங்களின் ஸ்ட்ரெஸ் ஹார்மோனை அதிகரிக்கச் செய்து, உற்சாகமடைய வைத்துவிடும். இதனால் உங்களால் சரியாக தூங்க முடியாது. ஆனால் தினமும் உடற்பயிற்சி செய்தால் நல்ல தூக்கம் வரும் என்பது மறுக்க முடியாத உண்மை. மாலை அல்லது காலை ஏற்ற நேரம். இரவுகளில் உடற்பயிற்சி செய்யாதீர்கள். தூங்குவதற்கு முன் மூச்சுப் பயிற்சி செய்தால் மூளை அமைதி பெற்று நல்ல தூக்கத்தை தரும்.shutterstock 280485443 DC 17059

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button