சர்க்கரை நோயாளிகள் வெல்லம் சாப்பிட்டால் என்னாகும் தெரியுமா?

பெரும்பாலான சர்க்கரை நோய் பாதித்தவர்கள் சர்க்கரைக்கு பதிலாக பிற இனிப்பூட்டும் பொருட்களை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இனிப்பூட்டும் பொருளினால் உடலில் சர்க்கரை அளவு உயராது என்றும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு சர்க்கரை நோய் பாதித்த பலரும் வெல்லச் சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது.

உணவுப்பழக்கம் : சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டிப்பாக கடைபிடிக்கவேண்டியது உணவுப்பழக்கம் தான். உணவில் கண்டிப்பாக அதிகப்படியான சர்க்கரை சேர்க்கக்கூடாது. சர்க்கரை அல்லது இனிப்பூட்டும் எல்லா பொருட்களை சர்க்கரை நோயாளிகள் தவிர்த்தாக வேண்டும். சிலர் வெள்ளைச் சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் பயன்படுத்தலாம். இது உடலுக்கு எந்த தீங்கையும் ஏற்படுத்தாது, சர்க்கரை கட்டுக்குள் இருக்கும் என்றெல்லாம் சொல்லப்பட்டு வருகிறது.

வெல்லம் : சர்க்கரை நோய் வருவதற்கு முன்னதாக தொடர்ந்து வெல்லம் பயன்படுத்துபவராக இருந்தால் சர்க்கரை நோய் பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம். ஆனால் சர்க்கரை நோய் வந்த பிறகு நீங்கள் என்ன பயன்படுத்தினாலும் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பாது. எந்த உணவு ரத்தச் சர்க்கரையளவு அதிகப்படுத்துகிறதோ அதனை வைத்து க்ளைசிமிக் இண்டெக்ஸ் கணக்கிடப்படுகிறது. வெள்ளைச் சர்க்கரையை விட வெல்லம் குறைந்த அளவிலான க்ளைசிமிக் இண்டெக்ஸ் கொண்டிருக்கிறது.

சர்க்கரை நோய் இல்லாதவர்களுக்கு : வெல்லத்தில் இரும்புச் சத்து, உட்பட சில தாதுக்களும் கலந்திருக்கிறது. இதனை உட்கொள்வதால் நீண்ட நேரத்திற்கு நீங்கள் எனர்ஜியுடன் இருக்க முடியும். இது நேரடியாக ரத்தச் சர்க்கரை அளவினை அதிகப்படுத்துவதில்லை. ரத்தசோகை உள்ளவர்கள், ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் வெல்லம் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். இது எல்லாம் சர்க்கரை நோய் இல்லாதவர்களுக்கு மட்டுமே.

தவிர்ப்பது நன்று : சர்க்கரை நோய் பாதித்தவர்கள் வெல்லம் பயன்படுத்துவதை தவிர்ப்பது தான் நல்லது. சர்க்கரைக்கும், வெல்லத்திற்கும் கரும்பு தான் மூலப்பொருள். வெள்ளைச் சர்க்கரை தயாரிக்கும் க்ரிஸ்டலைசேஷன் நடைமுறையின் போது எல்லாச் சத்துக்களும் இழந்து பல்வேறு கெமிக்கல்கள் சேர்க்கப்படுகிறது.

சத்துக்கள் : ஆனால் வெல்லத்தில் அப்படியல்ல, அதில் மக்னீஸியம், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம்,காப்பர்,ஜிங்க் என்ற ஏராளமான சத்துக்கள் அடங்கியிருக்கின்றன. வெல்லத்தில் சுர்கோஸ் என்ற மூலப்பொருள் இருக்கிறது. இது ரத்தத்தில் சர்க்கரை அளவு கலப்பது தாமதப்படுத்தும். இதனால் தான் நீங்கள் நீண்ட நேரம் எனர்ஜியாக இருக்க முடிகிறது .

தீர்வு : வெள்ளைச் சர்க்கரை உடனடியாக செய்வதை வெல்லம் சிறிது நேரம் தாமதமாக செய்கிறது அவ்வளவு தான் வித்யாசம். சர்க்கரை நோயாளிகள் வெல்லத்தை தவிர்ப்பது தான் நல்லது.

Leave a Reply