30.3 C
Chennai
Tuesday, Dec 3, 2024
oilyface 1518699625
முகப் பராமரிப்பு

உங்க முகம் எப்போதும் எண்ணெய் வழிந்தவாறு அசிங்கமாக இருக்கிறதா?

சிலரது சருமம் அதிக எண்ணெய் பசையுடன், முகத்தில் எப்போதும் எண்ணெய் வழிந்தவாறு அசிங்கமாக காணப்படும். இதற்கு காரணம் நம் சருமத்திற்கு அடியில் உள்ள எண்ணெய் சுரப்பிகள் தான் காரணம். மிதமிஞ்சிய எண்ணெய் சுரப்பிகளின் செயல்பாட்டினால், சருமத்தில் எப்போது எண்ணெய் வழிவது போன்று காணப்படுகிறது. இந்த தோற்றம் அசிங்கமாகவும், சில சமயங்களில் பல்வேறு சரும பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்.

சொல்லப்போனால் எண்ணெய் பசை சருமத்தினர் தான் முகப்பரு, மேடு பள்ளங்கள் கொண்ட முகம் மற்றும் கரும்புள்ளிகள் போன்ற பிரச்சனைகளால் அதிகம் அவஸ்தைப்படுவார்கள். இந்த வகை சருமத்தினர் தங்கள் சருமத்திற்கு அடிக்கடி பராமரிப்புக்களைக் கொடுக்க வேண்டியது அவசியம். அதிலும் முகத்தில் உள்ள அதிகளவு எண்ணெய் பசையைப் போக்கும் ஒருசில எளிமையான நேச்சுரல் ஸ்கரப்களைப் பயன்படுத்தினால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.

முக்கியமாக இந்த ஸ்கரப்களில் நாட்டுச்சர்க்கரை, எலுமிச்சை சாறு, முட்டை, தக்காளி போன்ற சரும அழகை மேம்படுத்தி, ஆரோக்கியமாக்கும் பொருட்கள் இருந்தால், இன்னும் நல்லது. சரி, இப்போது சருமத்தில் வழியும் அதிகளவு எண்ணெய் பசையைப் போக்கும் ஸ்கரப்களை எப்படி தயாரிப்பது என்று காண்போம்.

ஸ்கரப் 1 : நாட்டுச் சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறு
தேவையான பொருட்கள்:

நாட்டுச் சர்க்கரை – 1 டீஸ்பூன்

எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்

செய்முறை:

* ஒரு பௌலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு பொருட்களையும் போட்டு நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

* பின் அந்த கலவையை முகத்தில் தடவி, சில நிமிடங்கள் மென்மையாக ஸ்கரப் செய்ய வேண்டும்.

* பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

நன்மைகள்:

இந்த ஸ்கரப் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையைப் போக்குவதோடு, சருமத்தின் நிறத்தையும் மேம்படுத்திக் காட்டும்.

ஸ்கரப் 2: முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் கடலை மாவு

தேவையான பொருட்கள்:

முட்டையின் வெள்ளைக்கரு – 1

கடலை மாவு – 1 டீஸ்பூன்

செய்முறை:

* ஒரு சிறிய பௌலில் முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்து, அத்துடன் கடலை மாவு சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

* பின் அந்த கலவையை முகத்தில் தடவி நன்கு காய வைக்க வேண்டும்.

* பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். அதன்பின் முகத்தை உலர்த்தி, டோனர் எதையேனும் பயன்படுத்துங்கள்.

நன்மைகள்:

இந்த ஸ்கரப் சருமத்தில் மிதமிஞ்சி செயல்படும் எண்ணெய் சுரப்பிகளின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தி, சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்கும்.

ஸ்கரப் 3: தக்காளி மற்றும் பால் பவுடர்

தேவையான பொருட்கள்:

தக்காளி கூழ் – 2 டீஸ்பூன்

பால் பவுடர் – 1/2 டீஸ்பூன்

செய்முறை:

* ஒரு பௌலில் தக்காளி கூழுடன் பால் பவுடர் சேர்த்து நன்கு பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்.

* பின் அதை முகத்தில் தடவி 10-15 நிமிடம் நன்கு ஊற வையுங்கள்.

* அதன்பின் நீர் கொண்டு சருமத்தை மென்மையாக ஸ்கரப் செய்து, வெதுவெதுப்பான நீரால் முகத்தை கழுவுங்கள்.

நன்மைகள்:

இந்த ஸ்கரப் சருமத்தில் பிசுபிசுவென்று இருக்கும் எண்ணெய் பசையைப் போக்கி, முகத்தின் பொலிவை மேம்படுத்தி, பிரகாசமாக காட்டும்.

ஸ்கரப் 4: வெள்ளரிக்காய் ஜூஸ் மற்றும் அரிசி மாவு

தேவையான பொருட்கள்:

வெள்ளரிக்காய் சாறு – 2 டீஸ்பூன்

அரிசி மாவு – 1/2 டீஸ்பூன்

செய்முறை:

* ஒரு பௌலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு பொருட்களையும் போட்டு நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

* பின் முகத்தை நீரால் நனைத்து, அதன் பின் இந்த கலவையை முகத்தில் தடவி, சில நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.

* அதன் பின் மென்மையாக ஸ்கரப் செய்து, வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

* இறுதியில் முகத்தைத் துடைத்து மாய்ஸ்சுரைசர் எதையேனும் பயன்படுத்த வேண்டும்.

நன்மைகள்:

இந்த ஸ்கரப்பால் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்குவதோடு, சருமத்தில் உள்ள கருமை நீங்கி, சரும நிறம் மேம்பட்டு காணப்படும்.

ஸ்கரப் 5: ஓட்ஸ், எலுமிச்சை சாறு மற்றும் லாவெண்டர் ஆயில்

தேவையான பொருட்கள்:

வேக வைத்த ஓட்ஸ் – 1 டீஸ்பூன்

எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்

லாவெண்டர் ஆயில் – 3-4 துளிகள்

செய்முறை:

* ஒரு பௌலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் போட்டு நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

* பின் அந்த கலவையை முகத்தில் தடவி, மென்மையாக சில நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும்.

* 5 நிமிடம் கழித்து, முகத்தை வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.

* அதைத் தொடர்ந்து டோனர் எதையேனும் பயன்படுத்த வேண்டும்.

நன்மைகள்:

இந்த ஸ்கரப் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்குவதோடு, சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் மற்றும் டாக்ஸின்களையும் வெளியேற்றி, முகத்தை பளிச்சென்று காட்டும்.

ஸ்கரப் 6: தயிர், தேன் மற்றும் ஆளி விதை ஆயில்

தேவையான பொருட்கள்:

தயிர் – 2 டீஸ்பூன்

தேன் – 1 டீஸ்பூன்

ஆளிவிதை ஆயில் – 2-3 துளிகள்

செய்முறை:

* ஒரு பௌலில் அனைத்து பொருட்களையும் போட்டு நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

* பின் அந்த கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி சிறிது நேரம் ஸ்கரப் செய்ய வேண்டும்.

* பின்பு 5 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

* அதன்பின் ஆயில்-ப்ரீ மாய்ஸ்சுரைசரை முகத்தில் தடவுங்கள்.

நன்மைகள்:

இந்த எளிய ஸ்கரப் சருமத்துளைகளில் உள்ள அழுக்குகளை வெளியேற்றி சுத்தமாக வைத்து, முகப்பரு வருவதைத் தடுக்கும்.

ஸ்கரப் 7: காபி தூள், கற்றாழை ஜெல் மற்றும் முல்தானி மெட்டி

தேவையான பொருட்கள்:

காபி தூள் – 1/2 டீஸ்பூன்

முல்தானி மெட்டி – 1/2 டீஸ்பூன்

கற்றாழை ஜெல் – 2-3 டீஸ்பூன்

செய்முறை:

* ஒரு சிறிய பௌலில் அனைத்து பொருட்களையும் போட்டு நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

* பின் அதை முகத்தில் தடவி 5 நிமிடம் மென்மையாக ஸ்கரப் செய்ய வேண்டும்.

* பின்பு நீரால் முகத்தைக் கழுவி, முகத்தை துணியால் துடையுங்கள்.

* இறுதியில் ரோஸ் வாட்டரை சருமத்தில் தடவுங்கள்.

நன்மைகள்:

இந்த நேச்சுரல் ஸ்கரப் சருமத்தில் உள்ள அழுக்கு, அதிகப்படியான எண்ணெய் பசை போன்றவை நீக்கி, முகத்தை பளிச் என்று பொலிவோடும் அழகாகவும் காணப்படும்.oilyface 1518699625

Related posts

வீட்டிலேயே ஃப்ரூட் பேசியல் செய்வது எப்படி?

nathan

ஒரே நாளில் முகத்தில் இருக்கும் அழுக்குகளை நீக்கி பிரகாசமாக்கும் ஃபேஸ் பேக்குகள்!

nathan

ஆண்களின் தாடியை வளர செய்யும் 12 உணவு வகைகள்..!சூப்பர் டிப்ஸ்..

nathan

எளிய நிவாரணம்! குளிர்காலத்தில் ஏற்படும் சரும வறட்சி நொடியில் போக்க வேண்டுமா?

nathan

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்குவது எப்படி? இதோ சூப்பர் டிப்ஸ்

nathan

உங்களுக்கு தெரியுமா சரும பிரச்சனைகளைப் போக்கும் மஞ்சள்!

nathan

உங்க 30 வயதில் ஏற்படும் சரும பாதிப்பை சரிசெய்ய எளிய சில டிப்ஸ்!

nathan

பெண்கள் சிவப்பழகை பெற

nathan

த்ரெட்டிங் செய்த பின் கண்டிப்பாக பின்பற்ற வேண்டியவை

nathan