ஆரோக்கியம் குறிப்புகள்மருத்துவ குறிப்பு

கொழுப்பை குறைக்கும் வெந்நீர்

கொழுப்பை குறைக்கும் வெந்நீர்

தினமும் காலையில் வெந்நீரை குடிப்பதால் உடல்நலத்திற்கு ஆரோக்கியம் கிடைப்பதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மிதமான நீரை விட வெந்நீரை தினமும் பருகும் போது அது உடல் ஆரோக்கியத்திற்கு அதிகம் உதவுகிறது.உடலை சுத்தம் செய்யும் இந்த வெந்நீர் வேகமாக வயதாவதையும் குறைத்து இளமையை தக்க வைத்து கொள்ள உதவும். கடும் குளிர்காலத்தில் ஏற்படும் மூக்கடைப்பு தொண்டைகட்டிற்கு வெந்நீரை குடிப்பது நலம் தரும். வெந்நீருடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் தொண்டை பிரச்சனைகள் தீரும்.

டீன் ஏஜ் பெண்கள் மற்றும் ஆண்களை தொல்லை செய்யும் முகப்பருக்களும் வெந்நீர் பருகுவதால் சுத்தமாக அகன்றுவிடும். காலை வேளையில் மலம் எளிதில் வரவில்லையா? ஒரு தம்ளர் வெந்நீர் குடித்தால் எல்லாம் சரியாகிவிடும். தினமும் வெந்நீர் குடிப்பதால் பலவித மலச்சிக்கல் பிரச்சனைகள் தீரும். வெந்நீரால் இரத்த ஓட்டம் சீராவது மட்டுமின்றி நரம்பு மண்டலத்தின் ஒரத்தில் உள்ள கொழுப்புகளும் குறைந்துவிடும்.

உடற்பயிற்சி மையத்திற்கு சென்று போராடாமல் எளிதில் உடல் எடையை குறைக்க சிறந்த வழி வெந்நீர் குடிப்பது தான். மதியநேர சாப்பாட்டிற்கு பின் சிறிது வெந்நீர் பருகினால் இதயத்தில் சேரக்கூடிய தேவையற்ற கொழுப்புக்களை அகற்றிவிடும் ஆற்றல் கொண்டது.

மாதவிடாய் ஏற்படும் நாட்களில் பெண்கள் பெரிதும் அவதிபடுவார்கள். அந்த சமயத்தில் சூடான நீரை அடிக்கடி குடித்து வந்தால் மாதவிடாயினால் ஏற்படும் வலி வெகுவாகக் குறையும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button