1426488818
உதடு பராமரிப்பு

உதடுகளை ரோஜா நிறத்திற்கு மாற்ற நீங்கள் என்ன செய்யலாம்?சூப்பர் டிப்ஸ்…

பிறக்கும்போது அனைவருக்குமே உதடுகள் நல்ல நிறமாகத்தான் இருக்கிறது. ஆனால் வளர வளர் உதடுகள் கருமையடைகின்றன.

அதிக சூட்டினால், அடிக்கடி லிப்ஸ்டிக் போடுவதால், மற்றும் புகைப்பிடிப்பதால் உதடுகள் கருப்பாக மாறுகிறது. ஆனால் இதில் என்ன பிரச்சனையென்றால் பெண்கள் அந்த கருமையைப் போக்க விரும்பாமல், லிப்ஸ்டிக் போட்டு கருப்பான உதட்டை மறைக்கின்றனர்.

இப்படி செய்வதால் மேலும் உதட்டில் கருமை அதிகமாகிறது. பின்னட் அதனைப் போக்கவே முடியாதபடி ஆகிவிடும். ஆகவே உதட்டின் கருப்பை மறைக்க நினைக்காமல் அதனைப் போக்க முயற்சி செய்யுங்கள். உதட்டுக் கருமையைப் போக்க சற்று நாட்கள் பிடிக்கும், உடனடியாக பலனை எதிர்ப்பார்க்க வேண்டாம்.

அவ்வாறான நல்ல பலன் தரக் கூடிய குறிப்புகளை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

கேரட் ஜூஸ் :

கேரட் ஜூஸை எடுத்து ஒரு பஞ்சில் நனைத்து தினமும் உதட்டில் தடவிக் கொண்டு வந்தால் நல்ல பலன் தெரியும். வறட்சியான வெடித்த உதடுகள் வசீகரமாக மாறும். உதடு நல்ல இஞ்சிவப்பு நிறத்தில் மாறும்.

தக்காளி சாறு மற்றும் மஞ்சள் :

தக்காளி சாறு எடுத்து அதில் சிறிது மஞ்சள் கலந்து உதட்டில் தடவ வேண்டும். காய்ந்ததும் கழுவுங்கள். தினமும் செய்து வந்தால் உதடுகள் மீண்டும் சிவப்பாகி வருவதை காண்பீர்கள்.

பிரஷ் :

தினமும் காலை மற்றும் இரவில் டூத் பிரஷினால் சில நொடிகள் மசாஜ் செய்யுங்கள். இப்படி செய்தால் ரத்த ஓட்டம் தூண்டப் பெற்று இறந்த செல்கள் வேகமாக அழிகின்றன. இதனால் கருமையான நிறம் மாறி சிவப்பாக ஜொலிக்கின்றது.

உருளைக் கிழங்கு சாறு :

தினமும் இரவில் தூங்குவதற்கு முன் உருளைக் கிழங்கு சாற்றினை உதட்டில் தடவிக் கொள்ளுங்கள். உருளைக் கிழங்கின் ப்ளீச் செய்யும் குணம் உதட்டின் கருமையை போக்கும். நல்ல நிறத்தையும் தரும்.

ரோஜா மற்றும் தேன் :

ரோஜா இதழ்களை நன்றாக கசக்கியதன் சாறு எடுத்து அதில் சிறிது தேன் கலந்து உதட்டில் தடவுங்கள். இது ரோஜா நிறத்தை உதட்டிற்கு தரும். உதடுகள் ஈரப்பதம் பெற்று மிருதுவாகும்.

கிளீசரின் :

கிளிசரினை ஒரு பஞ்சினால் நனைத்து உதட்டில் தடவுங்கள். மறு நாள் காலையில் கழுவி விடவும். கிளிசரின் கருமைக்கு காரணமான இறந்த செல்களை வேகமாக அழிக்கக் கூடியவை.

பீட்ரூட் சாறு :

பீட்ரூட் துண்டை அல்லது சாற்றினை உதட்டில் பூசி காய்ந்த பின் கழுவினால் உதடுகள் மெருகேறும். சிவப்பு நிறம் பெறுவதோடு இயற்கை லிப்ஸ்டிக்காக் விளங்குகிறது.

ஆரஞ்சு தோல் :

ஆரஞ்சு தோலை வெயிலில் காய வைத்து பொடி செய்து அதனை தேன் கலந்து தினமும் உதட்டில் தடவி வாருங்கள். உதட்டின் கருமை வெகு விரைவில் மறைந்து விடும்.

தேன் மற்றும் பால் :

காய்ச்சாத பால் சிறிது எடுத்து அதில் தேன் கலந்து உதட்டில் தேயுங்கள். உதடுகள் மின்னும். கருப்பான உதடுகள் மெல்ல மெல்ல நிறம் பெறும். மிருதுவாகவும் மாறும். தினமும் அல்லது வாரத்தில் 4 நாட்கள் செய்து பாருங்கள்.

எலுமிச்சை மற்றும் புதினாசாறு :

புதினாவில் இலைகளில் இருந்து சாறு எடுத்து அதில் கால் பங்கு எலுமிச்சை சாறு கலந்து உதட்டில் தேயுங்கள். விரைவில் பலன் தரும் அருமையான குறிப்பு இது. உதட்டின் நிறம் மெல்ல பழைய இயற்கை நிறத்திற்கு பெறும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.1426488818

Related posts

லிப் லைனர் உபயோகிக்கவும்

nathan

உதட்டு வெடிப்புத் தொல்லையா?

nathan

எச்சிலால் உதட்டை ஈரப்படுத்தினால் உதடு அழகு பாதிக்கப்படுமா?

nathan

வீட்டிலேயே ஓர் அற்புதமான டூத் பேஸ்ட்!…

sangika

அழகான உதடுகளுக்கு…!

nathan

கருப்பான உதடா? அல்லது குளிரில் கருக்கிறதா? விளக்கெண்ணெய் எப்படி உதவும் தெரியுமா?

nathan

இந்த 3 வகையான லிப் பாம் தான் உங்கள் உதட்டை பாழாக்கும்!!

nathan

வறட்சியடைந்து சொரசொரவென்று இருக்கும் உதடுகளை சரிசெய்ய டிப்ஸ்

nathan

உதட்டு வறட்சியை போக்கும் தேங்காய் எண்ணெய்

nathan