மருத்துவ குறிப்பு

கவணம் ! நெஞ்சுச்சளியை கவனிக்காமல் விட்டால் உயிருக்கே ஆபத்தது ..!

இதய நோய்கள், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், ஞாபகமறதி வரிசையில் இப்போது பெரியவர்களைப் படுத்தி எடுக்கும் நோயாகச் சேர்ந்திருக்கிறது நெஞ்சுச் சளி. மாரடைப்பால் ஏற்படும் உயிரிழப்பைவிட, நெஞ்சுச் சளியைக் கவனிக்காமல் விடுவதால் நுரையீரலில் சளி கோத்து இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகம்.

நெஞ்சுச் சளியில் இருந்து விடுபடுவது எப்படி?
வயதாக வயதாக உடலின் நோய் எதிர்ப்புசக்தி குறைந்துகொண்டே போகும். அதனால், உடம்பு நோய்களை வரவேற்க ஆரம்பிக்கும். சாதாரணமாக வரும் சளிப் பிரச்னையைக் கவனிக்காமல் விடும்போது, அது நுரையீரலில் தேங்கி விடும். இதைச் சரியான நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம்.

எப்படித் தடுப்பது?
வயதானவர்கள் அடிக்கடி சளி பிடித்தால், அதைச் சாதாரணமாக எண்ணாமல் உடனடியாக மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டும். மருத்துவரின் ஆலோசனைப்படி, ஆன்டிபயாடிக் மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம். மருந்துகள் சாப்பிட்ட பின்னரும் சளியுடன் காய்ச்சலும் தொடர்ந்தால் நுரையீரலில் சளி இருக்கிறதா எனப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

என்னென்ன பரிசோதனைகள்?
ஆரம்ப நிலையில் எக்ஸ்ரே, ரத்தப் பரிசோதனை, சளிப் பரிசோதனை செய்ய வேண்டும். இந்தப் பரிசோதனைகள்மூலம் நுரையீரலில் கோத்துள்ள சளியின் அளவு மற்றும் அதன் தாக்கத்தை அறிந்துகொள்ளலாம். இந்தப் பரிசோதனைகளின் மூலம் காசநோய், நிமோனியா, நுரையீரல் புற்றுநோய் இருந்தாலும் கண்டறிந்துவிட முடியும்.

சிகிச்சை
சளிப்பிடித்து ஒரு வாரத்தில் நுரையீரலில் சளி கோத்துக்கொள்ளும். நுரையீரலில் தேங்கியிருக்கும் அதிகளவு சளியை ‘பிராங்கோடைலேட்டர் சிகிச்சை’ மூலம் வெளியேற்றலாம். நாள்பட்ட நெஞ்சுச் சளிக்குச் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் போதே ஆவி பிடித்தல், நுரையீரல் செயல்பாட்டை ஊக்கப்படுத்தும் பிஸியோதெரபி பயிற்சிகள் போன்றவற்றையும் செய்யலாம். இது மூச்சுவிடுவதில் ஏற்படும் சிரமத்தைக் குறைக்கும். சளியைக் கரைத்து வெளியேற்றவும் உதவும்.

கவனம்!
சிகிச்சையின்போது பசியின்மை, உடல் அசதி, உடல் வலி, தூக்கமின்மை போன்ற பிரச்னைகள் இருந்தால் அவற்றை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும். சளி மாத்திரைகளோடு மற்ற பிற மாத்திரைகளையும் சேர்த்துச் சாப்பிடுவதால், வீரியம் அதிகமாகி உடல்நலப் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. வேறு உடல்நலக் கோளாறுகளுக்காக உட்கொள்ளும் மாத்திரை களைப் பற்றியும் மறவாமல் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

வருமுன் காக்கலாம்
நம்மைச் சுற்றியுள்ளவர்களிடமிருந்து சளி தொற்றாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, குளிர் மற்றும் மழைக்காலங்களில் சளி மிக எளிதில் பரவும்.இந்தத் தருணங்களில் குளிரைத் தாங்கும் அளவுக்குக் கதகதப்பான உடைகளை அணிய வேண்டும். கம்பளிபோன்ற பிரத்யேகமான படுக்கைகளையும் விரிப்புகளையும் பயன்படுத்தலாம். சுத்தம் மிக முக்கியம்.

குளிர்பானங்கள், இனிப்பு வகைகளைத் தவிர்ப்பது நல்லது.குளிர்ந்த தரையில் வெறும் காலில் நடக்காமல், காலணிகள் அல்லது காலுறைகளை அணிந்து நடக்க வேண்டும்.காதில் பஞ்சு உருண்டைகள் அல்லது காதடைப்பான்களைப் பயன்படுத்துவதால் குளிர்ந்த காற்று காதின் வழியாகச் செல்வதைத் தடுக்க முடியும்.
மிதமான சூடுள்ள உணவுகளைச் சாப்பிடுவது நல்லது. குறிப்பாக, சமைத்த இரண்டு மணி நேரத்துக்குள் உணவைச் சாப்பிடுவது சிறந்தது.வெந்நீர் பருகலாம். அதிக அளவில் நார்ச்சத்துள்ள உணவுப்பொருள்கள் மற்றும் புரதம் நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவது நல்லது.images

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button