மருத்துவ குறிப்பு

கவணம் உங்களுக்கு நகம் கடிக்கும் பழக்கம் இருக்கா? அப்ப உடனே இத படிங்க…

நம்மை சுற்றி இருக்கும் பல நபர்களிடம் இதை நாம் சர்வ சாதாரணமாக பார்க்க முடியும். நகம் கடிப்பது கெட்டப் பழக்கம் என இதை எத்தனை முறை கூறினாலும், அவர்களால் நிறுத்த முடியாது. மது, புகை போல இதுவும் ஒரு பெயரிய அடிக்ஷன் தான்.

பதட்டம்! நகம் கடிப்பது ஒருவகையான பதட்டம் மற்றும் அசௌகரிய உணர்வின் வெளிபாடு ஆகும். பல சமயங்களில் சில நபர்கள், தாங்கள் நகம் கடித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை உணராமலே நகம் கடித்துக் கொண்டிருப்பார்கள். கேட்டால், தனக்கே தெரியவில்லை என்பார்கள். இது அபாயமான அடிக்ஷன் ஆகும்.

சிறு, சிறு பிரச்சனைகள்… நகம் கடிப்பதால், சளி, இருமல் மற்றும் சில சின்ன சின்ன கோளாறுகள் முதல் பெரிய உடல் நலக் கோளாறுகள் வரை உண்டாகலாம். இதற்கு காரணம், நகம் மற்றும் சருமத்தில் தங்கும் நச்சுக்கள் மற்றும் கிருமிகள்.

ஜான் கார்ட்னர்.. ஜான் கார்ட்னர் என்ற 40 வயது மிக்க நபர் ஒருவருக்கும் நகம் கடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. மருத்துவர் கூறிய அறிவுரையையும் மீறி இவர் தொடர்ந்து நகம் கடித்துக் கொண்டே இருந்துள்ளார்.

மாரடைப்பு… நாளடைவில் இந்த நகம் கடிக்கும் பழக்கத்தால் செப்டிக் இன்பெக்ஷன் உண்டாகி, மாரடைப்பும் ஏற்பட்டது ஜான் ஜான் கார்ட்னர்-க்கு. இதனால், இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவரது நகங்கள் அழுகின. மிகுந்த வலி உண்டானது.

மரணம்… நகங்களில் இருந்து இரத்தம் கசிய ஆரம்பித்தது. செப்டிக் இன்பெக்ஷன் அதிகரித்தது. மருத்துவர்கள் கொடுத்த எந்த மருந்தும் ஜானுக்கு பயனளிக்கவில்லை. அடுத்த சில நாட்களில் அவருக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக 40 வயதில் பரிதாபமாக உயிரிழந்தார் ஜான்.

பாடம்! மிக வீரியமாக ஜான் கொண்டிருந்த நகம் கடிக்கும் பழக்கம் அவரது உயிரையே குடித்துவிட்டது. ஜானின் இறப்பு இப்போது ஒரு பாடமாக அமைந்திருக்கிறது.24 1477297977 2addictedtobitingyournails

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button