மலச்சிக்கல் உடனடியாக குணம் பெற சூப்பர் பாட்டி வைத்தியம்….

காலையில் எழுந்ததிலிருந்து காலைக் கடன் கழிக்க பலர் போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். காலை ஆரம்பிப்பதே போராட்டமாக இருந்தால் எப்படி இருக்கும்.

மலச்சிக்கல் என்பது பிரச்சனை அல்ல. வியாதி. சரிப்படுத்தாமல் இருக்கும்போது மலக்குடல் பாதிக்கப்படும். மூலம் போன்ற நிரந்தர பாதிப்புகளை தந்துவிடும். ஆகவே உடனடியாக மலச்சிக்கலுக்கு என்ன பிரச்சனை என கண்டறியுங்கள்.

மலச்சிக்கல் போக்க : சரியான உடல் உழைப்பு, அதிக நார்சத்து நிறைந்த உணவுகள், பழங்கள், அதிக நீர் ஆகியவை நீங்கள் செய்தால் மலச்சிக்கல் என்ற வார்த்தைக்கே இடமில்லை. இருப்பினும் உங்களுக்கு இந்த மலச்சிக்கலை குணப்படுத்த இங்கே ஒரு பாட்டி வைத்தியம் உள்ளது. முயன்று பாருங்கள்.

தேவையானவை : எலுமிச்சை சாறு -2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

தயாரிக்கும் முறை : 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றில் ஆலிவ் எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன் ஊற்றி நன்றாக கலக்குங்கள்.

பருகும் முறை : இதனை காலையில் உணவு உண்ணுவதற்கு முன் பருகவும். மலச்சிக்கலால் மிகவும் கஷ்டப்பட்டால் காலை மற்றும் இரவு உணவுகளுக்கு முன் இதனை பருகவும்.

பலன் : இவை மலக்குடலில் நெகிழ்வுத்தன்மையை உண்டாக்கும். மலம் கெட்டிப்படுவதை இளக்கிறது. அதோடு குடலை சுத்தப்படுத்தும். நல்ல பேக்டீரியாக்களின் உற்பத்தியை அதிகப்படுத்துவதால் குடல்கள் பலம் பெற்று மலச்சிக்கல் குணமாகும்.

Leave a Reply