உங்களுக்கு இந்த அறிகுறிகள்ல ஏதாவது இருக்கா?அப்ப கண்டிப்பாக வாசியுங்க….

கண்,காது போன்று சிறுநீரகமும் ஒரு ஜோடி உறுப்பு ஆகும். இது நமது ஊடலின் பின் முதுகிற்கு கீழ் அமைந்துள்ளது . உங்கள் முதுகெலும்பின் இரு பக்கத்திலும் ஒரு சிறுநீரகம் அமைந்துள்ளது சிறுநீரகம் உங்கள் உடம்பில் உள்ள இரத்தத்தை வடிகட்டி கழிவுகளை நீக்குகிறது, நீக்கியகழிவுகளை சிறுநீர்ப்பைக்கு அனுப்புகிறது. சிறுநீர் வழியாக நமது உடல் கழிவுகளை வெளியேற்றுகிறது.

உங்கள் சிறுநீரகங்கள் போதுமான அளவு இரத்தத்தில் இருந்து கழிவுகளை வடிகட்டும் திறனை இழக்கும் போது சிறுநீரக செயலிழப்பு ஏற்படுகிறது. உங்கள் சிறுநீரக ஆரோக்கியம் மற்றும் செயல்பாட்டை கெடுக்க பல்வேறு காரணங்கள் உள்ளன.

காரணிகள் சுற்றுச்சூழல் மாசு அல்லது சில மருந்துகளின் பக்கவிளைவுகள் கடுமையான நாள்பட்ட நோய்கள் அதிகப்படியான உடல் வறட்சி சிறுநீரக காயம் அல்லது அதிர்ச்சி உங்கள் உடலில் நச்சுத்தன்மை அதிகரிக்கும் போது உங்கள் சிறுநீரகங்கள் தங்கள் வழக்கமான வேலையைச் செய்ய முடியாமால் போகும். இது சிறுநீரக செயலிழப்புக்கு வழிவகுக்கலாம். மேலும் அது சிகிச்சை அளிக்கப்படாத நிலையில் உயிருக்கு ஆபத்தானதாகவும் இருக்கலாம்.

சிறுநீரகம் செயலிழந்த அறிகுறிகள் சிறுநீரக செயலிழப்புகளில் பல்வேறு அறிகுறிகள் ஏற்படலாம். பொதுவாக சிறுநீரக செயலிழப்பு கொண்ட ஒருவர் ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டு இருப்பார், சிலசமயம் நோய்க்கான அறிகுறி இல்லாமலும் இருப்பார்

சிறுநீரகம் செயலிழப்பதற்கான அறிகுறிகள் சிறுநீர் அளவு குறைதல் சிறுநீரகம் சரியாக செயல்படாததால், உங்கள் கால்கள்,கணுக்கால்களில் வீக்கம் ஏற்படும் மூச்சுத்திணறல் அதிகப்படியான சோர்வு அல்லது தூக்கம் தொடர்ச்சியான குமட்டல் குழப்ப மனநிலை நெஞ்சு வலி அல்லது அழுத்தகம் வலிப்புத் தாக்கங்கள் கோமா உணர்வற்ற நிலை

காரணம் சிறுநீரக செயலிழப்புக்கு மிகவும் ஆபத்திலுள்ளவர்கள், பொதுவாக பின்வரும் காரணங்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட காரணங்களில் பாதிக்கப்பட்டுஇருப்பர். சிறுநீரக செயலிழப்புக்கு மிகவும் ஆபத்திலுள்ளவர்கள், பொதுவாக பின்வரும் காரணங்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட காரணங்களில் பாதிக்கப்பட்டு இருப்பர். சிறுநீரகங்களுக்கு இடையே இரத்த ஓட்டம்பாதிக்கப்பட்டுஇருக்கும். சிறுநீரகங்களுக்கு செல்லும் இரத்த ஓட்டத்தின் திடீர் இழப்பினால் சிறுநீரக செயலிழப்பு ஏற்படலாம்.

மாரடைப்பு, இதயநோய், கல்லீரல் பாதிப்பு அல்லது கல்லீரல் செயலிழப்பு உடல் வறட்சி, கடுமையான எரிச்சல், ஒவ்வாமை, கடுமையான தொற்று, ஸிப்ட்சிஸ் உயர் இரத்த அழுத்தம் மற்றும் ஆன்டி -இனபிலம்மாட்டோரி மருந்துகள் இரத்த ஓட்டத்தை மட்டுப்படுத்தலாம். சிறுநீர் கழிப்பதில் சிரமம் உண்டாகும். மேலும் உங்கள் உடல் சிறுநீரை சரிவர வெளியேற்ற முடியாதபோது , நச்சுத்தன்மை அதிகரித்து சிறுநீரகத்தை செயல்பட சிரமத்தை தருகிறது.

சில புற்றுநோய்கள் சிறுநீர் செல்லும் பாதைகளைத் தடுக்கலாம். இவை புரோஸ்டேட் (ஆண்களின் பொதுவான வகை), பெருங்குடல், கர்ப்பப்பை வாய், மற்றும் சிறுநீர்ப்பை புற்றுநோய் ஆகியவை அடங்கும். சில சமயங்களில் சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை ஏற்படலாம், மேலும் சிறுநீரக செயலிழப்புக்கு வழிவகுக்கலாம். சிறுநீரக கற்கள் பெரிதாக்கப்பட்ட புரோஸ்டேட் உங்கள் சிறுநீரில் உள்ள இரத்தக் கட்டிகள் உங்கள் சிறுநீரை கட்டுப்படுத்தும் நரம்புகளுக்கு பாதிப்பு

பிற காரணங்கள் உங்கள் சிறுநீரகத்தைச் சுற்றிஇருக்கும் இரத்தக்கட்டு தொற்று கன உலோகங்களில் இருந்து வெளிப்படும் அதிகப்படியான நச்சுகள் மது போதைப்பொருட்கள் அல்லது மருந்துகள் வாஸ்குலிடிஸ், இரத்த நாளங்களின் வீக்கம் லூபஸ், ஒரு ஆட்டோ இம்யூன் நோய் இதன் மூலம் உடல் உறுப்புகளின் வீக்கம் ஏற்படலாம் குளோமெருலோனெர்பிரிஸ், சிறுநீரகங்களின் சிறிய இரத்த நாளங்களின் வீக்கம் ஹீமோலிடிக் யூரேமிக் நோய்க்குறி, இது ஒரு பாக்டீரியா தொற்றுக்குப் பின் சிவப்பு இரத்த அணுக்களின் முறிவு,

ஐந்து வகையான சிறுநீரக செயலிழப்புகள் பிரேரெனல் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரகங்களுக்கு போதுமான இரத்த ஓட்டம் இல்லாதபோது கடுமையான பிரேரெனல் சிறுநீரக செயலிழப்பு ஏற்படலாம். போதுமான இரத்த ஓட்டம் இல்லாமல் இரத்தத்தில் உள்ள நச்சுக்களை சிறுநீரகங்களால் வடிகட்ட முடியாது. குறைவான இரத்த ஓட்டத்தின் காரணமாக நீங்களும் உங்கள் டாக்டரும் தீர்மானித்தவுடன் சிறுநீரக செயலிழப்பு பொதுவாக குணப்படுத்த முடியும்.

இன்டரின்சிக்(உள்ளக) சிறுநீரக செயலிழப்பு உடல் பாதிப்பு அல்லது விபத்து போன்ற காரணங்களால் சிறுநீரகங்களுக்கு நேரடியான அதிர்ச்சியால் ஏற்படுகிறது. சிறுநீரகங்களுக்கு ஆக்ஸிஜன் இல்லாததும் , டோக்சின் ஓவர்லோட் மற்றும் இஸ்கிமியா: முக்கிய காரணங்கள் அதிகப்படியான இரத்தப்போக்கு, அதிர்ச்சி, சிறுநீரக இரத்தக் குழாய் அடைப்பு க்ளோமெருலோனெப்ரிடிஸ்

குரோனிக் பிரேரெனல் சிறுநீரக செயலிழப்பு குறிப்பிட்ட காலத்திற்கு சிறுநீரகங்களுக்குப் போதுமான இரத்தஒட்டம் இல்லாத போது, சிறுநீரகங்கள் சுருங்கி செயல்படும் திறனை இழக்கின்றன.

குரோனிக் இன்டர்ன்சிக் சிறுநீரக செயலிழப்பு நீண்டகால இன்டர்ன்சிக் சிறுநீரகநோய் மூலம் சிறுநீரகத்தை பாதிப்படைய செய்கிறது, இன்டர்ன்சிக் சிறுநீரகநோய் என்பது சிறுநீரகத்துக்குள் ஏற்படும் கடுமையான இரத்தப்போக்கு அல்லது ஆக்ஸிஜன் இல்லாமையாகும். இது சிறுநீரகத்துக்கு நேரடி பாதிப்பை உண்டாக்குகிறது

குரோனிக் போஸ்ட் ரெனால் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரகத்தில் நீண்டகால அடைப்பு ஏதேனும் இருந்தால் சிறுநீர்ப்பையின் செய்ல்பட்டை தடுத்து சிறுநீரகத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தி சிறுநீரகத்தை பாதிப்படைய செய்கிறது. இறுதியில் சிறுநீரகம் செயலிழக்க நேருகிறது

Leave a Reply