ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்

இருண்ட காற்றோட்டமான அறையில், ஆறு மணி நேரம் அமைதியான தூக்கத்தில்தான் இது சுரக்கும்

இரவில் கண்விழித்தால் உடலுக்குக் கட்டாயம் தேவைப்படும் “மெலடோனின்” கிடைக்காது!மாணவர்கள் காலை 4 மணிக்கு எழுந்து படிப்பது தவறு. இரவு உறக்கம் என்பது எல்லா வயதினருக்கும் கட்டாயம் வேண்டும் இல்லையெனில் உடலில் பலவிதப் பிரச்சினைகள் ஏற்படும்.படிக்கும் மாணவர்கள் காலை 4மணிக்கு எழுந்து படிக்கின்றனர். அது அவர்களின் உடல் நலத்தை வெகுவாகப் பாதிக்கும்.நம் மூளையில் உள்ள பினியல் கோளம் சுரக்கும் ”மெலடோனின்” என்னும் சுரப்பு, நம்மை நோயினின்று காக்கக்கூடிய அரிய சுரப்பு. அது பகலில் சுரக்காது. விடியற்காலையில் தான் சுரக்கும்.

41b3zc4CHFL

இரவில் பணியாற்றக்கூடியவர்கள் பகலில் தூங்கிவிடுகிறேன் என்பர். பகலில் தூங்கினால் உடல் சோர்வு போகும். ஆனால், உடலுக்கு கட்டாயம் தேவைப்படும் ”மெலடோனின்” கிடைக்காது. இந்த மெலடோனிதான் நம் உடலில் சேரும் பல்வேறு கேடுகளை அகற்றி நம்மைக் காக்கிறது.மெலடோன் கிடைக்க ஒரு நாள் விட்டு ஒருநாளாவது இரவில் உறங்க வேண்டும். இருண்ட காற்றோட்டமான அறையில், ஆறு மணி நேரம் அமைதியான தூக்கத்தில்தான் இது சுரக்கும்.

எனவே, இரவு 11மணி முதல் காலை 5மணி வரை கட்டாயம் உறக்கம் வேண்டும். இரவு 10மணி முதல் 6மணி வரை உறங்குவது உடலுக்கும் உள்ளத்துக்கும் மிகவும் நல்லது.மாணவர்கள் இரவு 10.30மணிக்கு மேல் கண்விழிக்கக் கூடாது. காலை 5.30மணி வரை கட்டாயம் உறங்க வேண்டும். தேர்வு நேரத்தில் கூட அப்படித்தான் உறங்க வேண்டும். தூக்கத்தைக் கெடுத்து படிப்பது அறியாமையாகும். மற்ற நேரங்களில் நேரம் பிரித்து ஒதுக்கிப் படிக்க வேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button