ஆரோக்கிய உணவுஆரோக்கியம்

உலர்திராட்சையில் உடலுக்கு வலிமை சேர்க்கும் பல்வேறு சத்துக்கள் அடங்கியிருக்கின்றன

திராட்சைப் பழங்களிலேயே உயர்தரமான திராட்சையை பதம் பிரித்து உலர்த்தி தயாரிக்கப்படுவது தான் உலர்திராட்சை. இவை வெகுநாட்கள் வரை கெடாமல் அப்படியே இருக்கும்.

16 1502887342 1 1

உஷ்ணம் :

திராட்சைப் பழத்தில் உள்ள வைட்டமின் சத்துக்களை விட இதில் ஏராளமான சத்துக்கள் காணப்படுகின்றன. பச்சைத் திராட்சைப் பழத்தை விட 10 மடங்கு அதிக உஷ்ணத்தைக் கொடுக்கும்.

அமிலத் தொந்தரவு :

அமிலத் தொந்தரவு :

உலர் திராட்சைப் பழத்தில் அதிக அளவு சுக்ரோஸ், ப்ரக்டோசும் நிறைந்துள்ளன. வைட்டமின்களும், அமினோ அமிலங்களும் காணப்படுகின்றன. இதில் பொட்டாசியம், மெக்னீசியமும் காணப்படுவதால் அமிலத் தொந்தரவுகள் அதிகம் ஏற்படாது.

ரத்தசோகை :

ரத்தசோகை :

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் உலர் திரட்சையை உட்கொண்டால் ரத்தசோகை குணமடையும். தாமிரச்சத்துக்கள் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

மலச்சிக்கல் :

மலச்சிக்கல் :

உலர் திராட்சைப் பழத்தில் 50 பழங்களை எடுத்து சுத்தம் செய்து பசுவின் பாலில் போட்டு காய்ச்சி ஆறவைத்து பழத்தை சாப்பிட்டு விட்டு பாலை குடித்தால் காலையில் மலச்சிக்கல் சரியாகும்.

குழந்தைக்கு :

குழந்தைக்கு :

இதில் உள்ள கால்சியம் சத்து எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. குழந்தைக்கு பால்காய்ச்சும் போதும் அதில் இரண்டு பழத்தை உடைத்துப் போட்டு காய்ச்சிய பின் பாலை வடிகட்டிக் கொடுத்தால், குழந்தை திடமாக வளரும்.

மஞ்சள் காமாலை :

மஞ்சள் காமாலை :

மூலநோய் உள்ளவர்கள் தினசரி உணவிற்குப்பின்னர் காலையிலும், மாலையிலும் 25 உலர்திராட்சைப் பழங்களை ஏழுநாட்கள் சாப்பிட்டுவந்தால் குணமடையும். மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் தினசரி இரு வேளை உலர்திராட்சையை சாப்பிட்டு வர காமாலை நோய் குணமடையும்.

அனைவரும் சாப்பிடலாம் :

அனைவரும் சாப்பிடலாம் :

பொதுவாக இந்தப் பழத்தை கேக், பாயசம், பிஸ்கட் என்று பலகார வகைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர் . இதில் வைட்டமின் ‘பி’ மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.

புற்று நோய் :

புற்று நோய் :

கிஸ்மிஸ் பழத்தில் அதிகளவிலான பாலிபினாலிக் என்ற ஆண்ட்டி ஆக்ஸிடண்ட்கள் நிறைந்திருக்கும். இவை நம் உடலில் கட்டிகள் உருவாகாமல் தடுத்திடும் குறிப்பாக புற்றுநோய்க்கட்டிகள். அன்றாட உணவில் இதனை சேர்த்துக் கொண்டால், புற்றுநோய்க்கட்டிகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறையும்.

கண் :

கண் :

வயாதாவதால் ஏற்படும் கண்பிரச்சனைகளுக்கு கிஸ்மிஸ் பழம் நல்ல தீர்வாய் அமைந்திடும். இதில் பீட்டா கரோட்டின்,விட்டமின் ஏ மற்றும் கரோடினாய்ட் போன்ற சத்துக்கள் இருப்பதால் கண்பார்வைக்கு மிகவும் நல்லது.

பல் :

பல் :

இந்த உலர் திராட்சையில் ஃபைடோகெமிக்கல் சத்து பற்சொத்தை ஏற்படாமல் தடுத்திடும். பற்களில் ஏற்படும் பாக்டீரியா தொற்றுக்கு சிறந்த மருந்தாகவும் இது செயல்படும். இதில் இருக்கும் கால்சியம் சத்து, பற்களின் எனாமலை பாதுகாத்திடும்.

எலும்பு :

எலும்பு :

எலும்புகளின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் போரான் என்ற மைக்ரோ நியூட்ரியன்ட் அவசியம். இது கால்சியம் சத்தை உறிந்து கொள்ளவும் பயன்படும். குறிப்பாக மெனோபாஸ் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் ஓஸ்டியோபொராசிஸ் வராமல் தடுக்க உதவிடும். கிஸ்மிஸ் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புகளுக்கு மிகவும் நல்லது.

இதயம் :

இதயம் :

இதயம் சம்பந்தமான நோய் வராமல் தடுக்க கிஸ்மிஸ் பழம் பெரிதும் உதவிடும். இதிலிருக்கும் பொட்டாசியம் சத்து கிட்னி கல் வராமல் தடுக்க உதவிடும்.

எடை :

எடை :

சீரான அளவில் கிஸ்மிஸ் பழம் எடுப்பது தொடர்ந்து உடற்பயிற்சிகள் மேற்கொண்டு வந்தால் உடல் எடை குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதிலிருக்கும் ஃபைபர் அதிக நேரம் பசியெடுக்காமல் வைத்திருக்கும். மிகவும் எடை குறைவாக இருப்பவர்கள் ஆரோக்கியமான முறையில் எடையை அதிகரிக்கவும் இதனை எடுத்துக் கொள்ளலாம்.

இயற்கையாகவே இதில் சர்க்கரை ஃபுருக்டோஸ்,குலுக்கோஸ் போன்றவை இருப்பதால் கொலஸ்ட்ரால் அதிகரிக்காமலேயே உடல் எடையை அதிகரிக்க முடியும்.

அழகு :

அழகு :

உடலுக்கு மட்டுமல்ல சருமத்திற்கும் இது மிகவும் நல்லது. இதில் இருக்கும் ஆண்ட்டி ஆக்ஸிடண்ட்கள் நம் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் ஏற்படாமல் தடுத்திடும். அதே போல நம் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றிவிடுவதால் கரும்புள்ளிகள் ஏற்படாமல் தவிர்க்க முடியும். சருமத்திற்கு ஆக்ஸிஜன் வழங்கிடும் ரத்த சிவப்பணுக்கள் அதிகரிக்கச் செய்திடும். இதனால் சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.

இதிலிருக்கும் இரும்புச்சத்து, விட்டமின் பி காம்ப்லெக்ஸ்,பொட்டாசியம் போன்றவை தலைமுடி உதிராமல் இருக்க உதவிடுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button