ஆரோக்கியம் குறிப்புகள்

முயன்று பாருங்கள் கிச்சன் டிப்ஸ்

தக்காளி மலிவாகக் கிடைக்கும்போது அதிக அளவில் வாங்கி அதனை ஃப்ரீசரில் வைத்து விடுங்கள். அதன் மீது ஐஸ்கட்டிகள் ஒட்டிக் கொள்ளும்படி ஆனதும் அதனை பாலித்தீன் கவரில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்தால் ஒரு மாதத்திற்கு வைத்துக் கொள்ளலாம். இரவில் வடித்த சாதம் மீந்து விட்டால் அடுத்த நாள் அதையே சுடச்சுட பொங்கலாக செய்து விடுங்கள். பொங்கலுக்கு எப்படியும் அரிசி போடப் போகிறீர்கள். அதற்குப் பதிலாக பயத்தம்பருப்பை தனியாக வேகவைத்து அதனுடன் இந்தச் சாதத்தை போட்டு விடுங்கள். மற்றதெல்லாம் பொங்கலுக்கு செய்வது போலவேத்தான்.ld46130545444

பாசிப்பருப்பை ஊறவைத்து பீர்க்கங்காய், மிளகாய், உப்பு சேர்த்து அரைத்து வடைகள் செய்து சாப்பிட்டால் சுவையாகவும், கோடையில் இது குளிர்ச்சியாகவும் இருக்கும்.
உப்பு, புளி, மிளகாய், வெல்லம் போன்றவற்றில் காற்றுப்பட்டால் நீர் விடும். எனவே பிளாஸ்டிக் டப்பாக்களில் வைப்பது உடலுக்கு கேடு. ஆகவே பீங்கான் பாத்திரத்தில் வைப்பதே சிறந்தது.

தோசை மாவில் மரவள்ளிக்கிழங்கை துருவி சேர்த்து சிறிது வெல்லப்பொடி, ஏலக்காய், தேங்காய்த்துருவல் சேர்த்து இனிப்பு தோசையாக வார்த்தால் சுவையாக இருக்கும்.

கற்பூரவள்ளி இலையை ரசம், சாம்பாரிலும், வல்லாரைக் கீரையை துவரம்பருப்புடன் சேர்த்து பொரியல் செய்தால் சுவையாக இருக்கும். முருங்கைக்கீரையுடன் அவரைப்பருப்பு சேர்த்து சமைத்தால் மாறுதல் சுவையுடன் இருக்கும்.

பிஸிபேளாஹீளி செய்யும் போது அரிசியுடன் சிறிது ஊறவைத்த ஜவ்வரிசியையும் சேர்த்துக் செய்தால் சாதம் மிக வெண்மையாகவும், பளபளப்பான தோற்றத்துடனும் இருக்கும். ஆழாக்கு அரிசிக்கு 1 அல்லது 2 டீஸ்பூன் ஜவ்வரிசி போதுமானது.

தேங்காயைப் பிழிந்து சாறு எடுக்கும் போது பால் எளிதாக வரவில்லை என்றால் சிறிதளவு உப்பு சேர்த்துப் பிழியுங்கள்.

ஃப்ரிட்ஜ் இருப்பவர்கள் நுங்கை வாங்கிக் கழுவி ஃப்ரீசரில் அரை மணி நேரம் வைத்திருந்து எடுத்து உரித்தால் நுங்கு தோல் விரைவாக உரிக்க வரும்.

கோவைக்காயை கொதி நீரில் கொட்டி ஐந்து நிமிடம் கழித்து வடிகட்டி உப்பு, பச்சைமிளகாய் அரைத்துப் போட்டு புளித்த தயிரைக் கடைந்து விட்டுக் கிளறி, ஒரு நாள் ஊறவைத்து பின் காயப் போட வேண்டும். கோவைக்காய் வற்றல் ரெடி. கட்லெட் செய்ய ரஸ்க் தூள் இல்லையென்றால் மக்காச்சோள மாவில் புரட்டி கட்லெட்டைப் பொரித்து எடுத்தால் கொஞ்சம் கூட கல்லில் ஒட்டாமல் வரும்.

எண்ணெய்ப் பிசுக்கு நிறைந்த பாத்திரங்களை சுலபமான முறையில் சுத்தம் செய்வதற்கு அரைமணி நேரம் வெந்நீரில் ஊறவைத்து பின் பாத்திரம் தேய்க்கும் லிக்விட் கலந்து சுத்தம் செய்தால் பிசுபிசுக்கு நீங்கி பாத்திரங்கள் புதுப்பொலிவு பெற்று விடும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button