ஆரோக்கிய உணவுஆரோக்கியம்

உருளைக்கிழங்கு சாப்பிட்டால் குண்டாகி விடுவோம்! தேன் சாப்பிட்டால் உடல் மெலிந்து விடுவோம் அலசுவோம்… வாருங்கள்…..

* உருளைக்கிழங்கு சாப்பிட்டால் குண்டாவது உண்மையா…பொய்யா? பொய்! உருளைக்கிழங்குவுக்கும், உடம்பு குண்டாவதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இதில் ஒரு சதவீதம் கூட கொழுப்பு இல்லை என்பதுதான் உண்மை. கார்போஹைட்ரேட் அதிகம். இதிலுள்ள சத்துக்கள் நமது தசைகளை பாதுகாத்து வலுப்படுத்தும். உடல் இயக்கத்துக்கு தேவையான சக்தியை உருளைக்கிழங்கு வழங்கும்.

Dollarphotoclub 82122178

அதனால்தான் ஸ்போர்ட்ஸ் வீரர்கள் அதிகமாக உருளைக்கிழங்கை சாப்பிடுவார்கள். உருளைக் கிழங்கை குழந்தைகளுக்கு அதிகமாக கொடுப்பது நல்லது. * சோயா பீன்ஸ் சாப்பிட்டால் கிட்னி நோய்கள் வருமா? சோயாபீன்ஸில் புரோட்டீன் அதிகமாக உள்ளன. அதிகமான புரோட்டீனை உடைய உணவு களை நாம் சாப்பிட்டால் அவை கிட்னியை பாதிக்கும் என்பது ஓரளவு உண்மைதான்! ஆனால் சோயாபீன்ஸை தண்ணீரில் வேக வைக்கும்போது, புரோட்டீன்கள் வெளியாகி விடும். நாம் வேக வைத்த சோயாபீன்ஸை நாம் சாப்பிடும்போது பெருமளவு புரோட்டீன்கள் கிடைப்பதில்லை. சரியான முறையில் அவை செரிமானமாகி நமக்கு அவை கிடைப்பதில்லை. இப்படி ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக இருந்தாலும், அதை சாப்பிடுவதால், நமது உடலில் இருக்கும் கொழுப்பை கட்டுப்படுத்துகிறது.

சோயாபீன்ஸை தொடர்ந்து சாப்பிடும் பெண்களுக்கு மார்பக புற்று நோயை கட்டுப்படுத்தும். * மரவள்ளிக்கிழங்கு சாப்பிட்டால் சோம்பேறித்தனம் வருமா? இதில் உள்ள ஹைட்ரோசயானிக் என்னும் மூலப்பொருள், சாப்பிடும்போது உள்ள சத்தை உடம்பில் சேருவதை தடுக்கும். இதனால் இதை பச்சையாக சாப்பிடாமல் வேகவைத்து சாப்பிடலாம். அதாவது மரவள்ளிக் கிழங்கை வேகவைக்கும்போது தண்ணீரில் ஹைட்ரோ சயானிக் வெளியேறிவிடும். இதில் தானியங்களைவிட சத்துக்கள் அதிகம் என்பதால் அரிசி தட்டுப்பாடு ஏற்படும்போது, நமது உடல் சிறப்பாக செயல்பட மரவள்ளிக் கிழங்கை சாப்பிடுவார்கள். * பருப்பு சாப்பிட்டால் வாய்வு தொந்தரவு ஏற்படுமா? இன்றைக்கு பெரும்பாலானவர்கள், எந்த வகையான பருப்பு சாப்பிட்டாலும் வாய்வு தொந்த ரவு வந்துடும்னு பருப்பு வகையை தொடுவதே இல்லை. சிலவகை உணவுகள் சிலருக்கு பிடிக்காமல் அலர்ஜியாவதும் உண்டு. சிலருக்கு சில உணவுகள் அலர்ஜியால் ஜீரண மாகாமல் பிரச்சினை உண்டாக்குவதும் உண்டு. எந்த வகையான உணவாக இருந்தாலும் அவை ஜீரணமாகாவிட்டால் அதனால் தொந்தரவு நிச்சயம் உண்டு. குறிப்பிட்ட உணவு களை சாப்பிடுவதால் ஏற்படும் வாய்வு தொந்தரவுகள், ஆளாளுக்கு வேறுபடும். சிலருக்கு சில உணவுகள் மிகவும் பிடிக்கும். அப்படிப்பட்ட உணவுகள் எவ்வித பிரச்சினையையும் உருவாக்காது. சிலருக்கு வாய்வுத் தொந்தரவு கொடுக்கும் உணவுகள் வேகமாக ஜீரணமாகிவிடும். ஆனால் பருப்பில் வெஜிடேரியன் புரோட்டீன் அதிகம். மாமிசம், மீன் ஆகியவற்றை சாப்பிடும் பழக்கம் இல்லாதவர்கள் கண்டிப்பாக பருப்புவகை உணவுகளை சாப்பிடவேண்டும். இதனால் உடலில் வலுவும், ஆரோக்கியமும் அதிகமாகும். அதேபோல், நார்ச்சத்துள்ள பழங்களை அதிகமாக அனைவரும் சாப்பிட வேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button