நீங்கள் சர்க்கரை வியாதியால் அவதிப்படுகின்றீா்களா இல்ல வராம தடுக்கனுமா? அப்ப இத படிங்க!

சர்க்கரை நோய்க்கான காரணம் என்ன என்றால் உறுதியாக நான் சொல்ல வேண்டியது உணவு முறைகளில் நாம் செய்யும் முரண்பாடுதான். இது பாரம்பரிய நோய், ஆகவே பெற்றோர்க்கு இருந்தால் பிள்ளைகளுக்கு கட்டாயம் வரவேண்டும் என்வதெல்லாம் இல்லை. நீங்கள் உணவின் மூலமாக உங்களுக்கு சர்க்கரை வியாதிவராமல் நிச்சயம் தடுக்கலாம்.

சர்க்கரை வியாதி இருப்பவர்கள் என்னனென்ன உணவுகள் சாப்பிட வேண்டும் . நமது நாட்டு இயற்கை உணவுகளை எபப்டியெல்லாம் பயனப்டுத்தலாம் என என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.

வாழைப்பூ:

நீரிழிவு நோயாளி ஒருவர் வாழைப்பூவை கசாயம் செய்து சாப்பிட்டார் என்றால் கண்டிப்பாக நீரிழிவு கட்டுப்படும். ஆனால் வாழைப்பூவில் கடலைப்பருப்பைச் சேர்த்து இன்று நாம் பருப்பு வடையாகத்தான் சாப்பிடுகிறோம். இதே வாழைப்பூவுடன், சிறிது காய்ந்த மிளகாய் எல்லாம் சேர்த்து அரைத்து துவையல் மாதிரி செய்து தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது சர்க்கரை நோய் கட்டுப்படும்.

தென்னைமரப் பூ:

தென்னம்பாலைக்குள் இருக்கும் தென்னை மரத்துப் பூவை நன்றாகக் காயவைத்து, அதைப் பொடி செய்து காலையிலும், இரவிலும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தோம் என்றால் சர்க்கரை நோய் கட்டுப்படுவதுடன் சர்க்கரை நோயால் தளர்ந்து போன நரம்புகள் அனைத்தும் சரியாகிவிடும். இதனால் நம் கண் பார்வையும் தெளிவாக இருக்கும்.

நீரிழிவால் நரம்பு பாதிக்கப்படுவதால் கண்ணில் வரக்கூடிய நோய்கள் நிறைய வரும். அதே போல் நம் பாதங்களிலும் பல நோய் வரும். இவை அனைத்தையும் சரி செய்யக் கூடிய தன்மை தென்னம்பாலைக்குள் உள்ள தென்னைமரத்துப் பூவுக்கு உண்டு.

திரிபலா :

அது போல் நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் இதையும் சம அளவில் கலந்து வைத்துத் தொடர்ந்து திரிபலா என்கிற சூரணத்தையும் சாப்பிடும் பொழுது நீரிழிவு முழுமையாகக் கட்டுப்படக்கூடிய ஒரு வாய்ப்பு உண்டு.

கருஞ்சீரகம் :

அதே போல் இந்த சர்க்கரை நோய்க்கு என்ன செய்யலாம் என்றால், சமையலில் சீரகத்திற்குப் பதிலாக அல்லது சீரகத்துடன் கருஞ்சீரகத்தையும் சேர்த்து சமையலில் ஈடுபடுத்தும் பொழுது சர்க்கரைக்கு அற்புதமான ஒரு மருந்தாக இருக்கும்.

கருவேப்பிலை :

நம் நாட்டு கருவேப்பிலை, லவங்கப் பட்டை, வெந்தயம் இந்த மூன்றையும் சம அளவில் கலந்து வைத்துக் கொண்டு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் கெட்ட கொழுப்பின் அளவு குறைந்து இதயத்தை பாதுகாக்கும்.

Leave a Reply