இயற்கை முறையில் பேஷியல் செய்தால் நல்ல பயன்கள் உண்டு..!

பெண்களுக்கு அழகாக இருப்பது முக்கியம், சிறுமிகளின் இருந்து பெரியவர்கள் வரை அழகிற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். முக அழகிற்காக பல வகையில் பணத்தை செலவு செய்வார்கள். அழகு நிலையங்களிலே குடியிருக்கும் பெண்களும் உண்டு.

இயற்கை முறையில் பேஷியல் செய்தால் நல்ல பயன்கள் உண்டு..!

முகத்தை அழகாக வைத்துக்கொள்ள இயற்கை முறையில் பேஷியல் செய்தால் பணம் செலவை கட்டுப்படுத்தலாம். கடலை மாவில் தயிர் சேர்த்து பிசைந்து பேஸ்ட் செய்து தேய்த்தால் பருக்கள் காணாமல் போய்விடும். பயித்தம் பயிறு மாவில் தண்ணீர் ஊற்றி குழைத்து தேய்த்து வந்தால் முகத்தில் நிறம் கூடும்.

தேனில் பால், தயிர், அரைத்த எள்ளு எல்லாம் சரிசமமாக கலந்து முகத்தில் தேய்த்து வந்தால் முகம் பளபளப்பாகவும், மிருதுவாகவும் ஆகும். அல்லது, 1 தேக்கரண்டி கடலை எண்ணெயில் 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து தேய்த்து வந்தால் முகப்பரு, கரும்புள்ளிகள் வரவே வராது.

Leave a Reply