ஹோம் மேட் மயோனைஸ்

சாண்ட்விச், பர்கர், பச்சைக் காய்கறிகள், சாலட் என எந்த உணவுடன் இதைச் சேர்த்தாலும் நல்ல சுவை தரும்)

 தேவையானவை: மைதா – 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய்  ஒரு டேபிள்ஸ்பூன், பால்  ஒரு கப், வினிகர் – 3 டேபிள்ஸ்பூன், உப்பு  தேவைக்கேற்ப, மிளகுத்தூள்  கால் டீஸ்பூன், கடுகுத்தூள்  கால் டீஸ்பூன், சர்க்கரை – 1 டீஸ்பூன்

செய்முறை: ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, மைதாவைப் போட்டு நன்கு கலக்கி, அதில் பால் சேர்க்கவும். கட்டிகள் வராமல் நன்கு அடித்துக் கலக்கினால், வொயிட் சாஸ் ரெடி. இந்த வொயிட் சாஸை மிக்ஸியில் ஊற்றி, அதோடு வினிகர், சர்க்கரை, உப்பு, மிளகுத்தூள், கடுகுத்தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு அடித்தால், முட்டையே சேர்க்காத, ‘ஹோம் மேடு’ மயோனைஸ் தயார்.

Leave a Reply